சனி, 26 ஜனவரி, 2019

ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்போம் என்கிற பிரதமர் மோடி, மத்தியில் லோக்பால் அமைப்பை கொண்டுவராதது ஏன் ? - மு.க.ஸ்டாலின்.



மொழிப் போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய மாநில அரசை கண்டித்து விமர்சித்துள்ளார்.

எடப்பாடி அரசு கொலை - கொள்ளை வழக்குகளில் சிக்கி, அடிமைத்தனமான ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகத் தோல்விகளை எடுத்துரைதார்.இப்படி கொலை வழக்கில் சிக்கியிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் அரசுக்கு பாதுகாப்பு அளிப்பது பாசிச பாஜக அரசு.

சரியாக, நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றார் பிரதமர் மோடி. ஆனால், தேர்தல் நெருங்குகிற இந்த நேரத்தில் வருகிற ஜன. 27ம் தேதிதான் அடிக்கல் நாட்டவே வருகிறார்.

மத்திய அரசு சமஸ்கிருத திணிப்பை செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நான்கரை ஆண்டு காலத்தில் நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டினார். 

ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்போம் என்கிற பிரதமர் மோடி, மத்தியில் லோக்பால் அமைப்பை கொண்டுவராதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.இப்படி வாக்குறுதிகளை எல்லாம் அள்ளித் தந்த மோடி, அதில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றினார் என்பதை தமிழக மக்களுக்குச் சொல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக