ரஜினிகாந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரஜினிகாந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 26 ஜனவரி, 2019

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி இளவரசன் நீக்கம்


ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்புச் செயலாளராக இருந்த டாக்டர் இளவரசன் அவரது விருப்பத்துக்கு இணங்க அவர் வகிக்கும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்

ரஜினி மக்கள் மன்றத்துக்கு கடந்த வருடத் தொடக்கத்தில் வந்தவர் டாக்டர் இளவரசன். இவர் மன்றத்தின் அமைப்புச் செயலாளராகவும், ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 

அவர் அமைப்புச் செயலாளர் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் ஆனதும்தான் பல மாவட்ட நிர்வாகிகள் அதிர்ந்தனர். ஏனெனில் ரஜினி மன்றத்துக்காக இருபது ஆண்டுகள், முப்பது ஆண்டுகள் உழைத்தவர்களை எல்லாம் அனாயாசமாக தூக்கி வெளியே போட்டார் இளவரசன். புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், தேனி, திருவாரூர் என்று பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் இளவரசனால் நீக்கப்பட்டனர்.

 இப்படிப்பட்ட மிக மூத்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை பல மாவட்டங்களிலும் இளவரசன் நீக்கியதை அடுத்துதான் இளவரசன் மீது பல பேர் ரஜினிக்கு புகார்களை அனுப்பிக் கொண்டே இருந்தார்கள்” என்ற நிர்வாகிகள் தொடர்ந்தனர்.
இதையடுத்து டிசம்பர் மாத கடைசியிலேயே இளவரசன் நீக்கம் என்று செய்திகள் வந்தன. ஆனால் அதிகாரபூர்வ நடவடிக்கை எதுவும் இல்லை. இந்த நிலையில்தான் இன்று இளவரசன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிப்பு வந்திருக்கிறது.

ரஜினி இளவரசனை பெரிதும் நம்பினார். அதனால்தான் அவரை அழைத்து ராஜினாமா கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, அவரது வேண்டுகோளுக்கு இணங்கவே விடுவிக்கப்படுகிறார் 



திங்கள், 10 டிசம்பர், 2018

ரசிகர்கள் யாரும் வீட்டுக்கு வரவேண்டாம் - ரஜினிகாந்த்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக், திரிஷா, சிம்ரன், சசிகுமார் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். 

பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் உண்மையில் யோகா மிகச் சிறந்த கலை. மனதையும் உடலையும் வலிமையாக வைக்கும். எக்ஸ்ட்ரா என்ற வார்த்தை அருமையான வார்த்தை. எக்ஸ்ட்ரா புகழக் கூடாது. எக்ஸ்ட்ரா பேசக் கூடாது. எக்ஸ்ட்ரா சாப்பிடக் கூடாது. ஒரு குழந்தையை வித விதமாக அலங்காரம் செய்து ரசிப்பதை போல என்னை கார்த்திக் சுப்புராஜ் ரசித்தார். முன்பு போல இல்லை. எனக்கு 69 வயது என்று சொன்னேன். இருந்த போதிலும் ஒவ்வொரு காட்சியும் ரசித்து எடுத்தார் கார்த்திக் சுப்புராஜ். செட்டிலுள்ள அனைவரும் என்னுடைய ரசிகர்களாக இருந்ததால் ரசித்து ரசித்து எடுத்தார்கள். 


பிறந்தநாள் வரப் போகிறது. கடந்த முறையே ரசிகர்கள் வீட்டுக்கு வந்து ஏமாந்து போனார்கள்.ஆனால், இந்தமுறையில் வீட்டில் இருக்க மாட்டேன். அதனால், ரசிகர்கள் இந்தமுறையும் வீட்டுக்கு வரவேண்டாம். கஜா புயலால் ஏற்பட்ட இழப்பு நினைத்துக் கூட பார்க்க முடியாத பேர் இழப்பு. எல்லோரும் சேர்ந்தால் மட்டுமே அவர்களை மீட்டு வர முடியும். கஜா புயலால் உயிர் இழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நானும் எனது மன்றமும் உதவிகளைச் செய்துள்ளோம். அரசால் மட்டுமே அவர்களை முழுமையாக மீட்க முடியும்’ என்று தெரிவித்தார்.

திரிஷாவின் இளமையின் ரகசியம் கேட்டு அறிந்த ரஜினி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக், திரிஷா, சிம்ரன், சசிகுமார் நடித்துள்ளனர். 

பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு நடைபெற்றது. இந்த நிகழ்வில், நடிகர் ரஜினிகாந்த், நடிகைகள் சிம்ரன், திரிஷா, நடிகர்கள் பாபி சிம்ஹா, சசிகுமார், சமுத்திரகனி, தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இசையமைப்பாளர் அனிருத் பங்கேற்றுள்ளனர்

பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் ஜித்து என ஒரு கேரக்டர் இருந்தது. அந்த கதாபாத்திரத்தை விஜய் சேதுபதி பண்ண போறார்ன்னு சொன்னதும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். சிம்ரன் நடிக்கப் போறாங்கன்னு தெரிஞ்சதும் செட் ஜாலியா ஆயிடுச்சு.

நான் பார்த்த நல்ல நடிகர் விஜய் சேதுபதி. அவர், சாதாரண நடிகன் அல்ல. அவர் ஒரு மகா நடிகன். அதைவிட அவர் ஒரு நல மனிதர். ரொம்ப நாள்கள் கழித்து நல்ல நடிகர் உடன் நடித்த அனுபவம். நான், பார்த்த தங்கமான மனிதர் சசிகுமார். திரிஷா முன்பு பார்த்தது போல இருப்பதற்கான ரகசியம் குறித்து கேட்டேன். அவர், யோகா என்று தெரிவித்தார். உண்மையில் யோகா மிகச் சிறந்த கலை.

மனதையும் உடலையும் வலிமையாக வைக்கும். எக்ஸ்ட்ரா என்ற வார்த்தை அருமையான வார்த்தை. எக்ஸ்ட்ரா புகழக் கூடாது. எக்ஸ்ட்ரா பேசக் கூடாது. எக்ஸ்ட்ரா சாப்பிடக் கூடாது. ஒரு குழந்தையை வித விதமாக அலங்காரம் செய்து ரசிப்பதை போல என்னை கார்த்திக் சுப்புராஜ் ரசித்தார். முன்பு போல இல்லை. எனக்கு 69 வயது என்று சொன்னேன். இருந்த போதிலும் ஒவ்வொரு காட்சியும் ரசித்து எடுத்தார் கார்த்திக் சுப்புராஜ். செட்டிலுள்ள அனைவரும் என்னுடைய ரசிகர்களாக இருந்ததால் ரசித்து ரசித்து எடுத்தார்கள்.