ஞாயிறு, 5 ஜனவரி, 2020

இந்தியா-இலங்கை முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று இரவு தொடக்கம்


இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டியில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சாபாரா ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது.



குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் போட்டி நடைபெறும் மைதானம் மற்றும் வீரர்கள் தங்கும் ஓட்டலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியில் இந்த போட்டி தொடரில்  முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4 மாத இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத ‌ஷிகர் தவான் அணிக்கு திரும்பி இருக்கிறார். ‌ஷிகர் தவானும், லோகே‌‌ஷ் ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌‌ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தீபக் சாஹர், புவனே‌‌ஷ்வர்குமார் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. மற்றும் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மலிங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி பேட்டிங்கில் குசல் பெரேரா, மேத்யூஸ், பானுகா ராஜபக்சே, ஒ‌ஷாடா பெர்னாண்டோ, குணதிலகா ஆகியோர் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். சுழற்பந்து வீச்சாளர் வானிந்து ஹசரங்கா, குசல் மென்டிஸ், சன்டகன், கசுன் ரஜிதா. உள்ளிட்ட பந்து வீச்சாளர்களும் இலங்கை அணியில் இடம் பெற்றுள்ளனர்.

புத்தாண்டை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் தங்கள் பலத்தை காட்டும். இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை டிடி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

அணி விவரம்

இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ‌ஷிகர் தவான், லோகே‌‌ஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனி‌‌ஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ரி‌ஷாப் பண்ட், ‌ஷிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, ‌‌ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, வா‌ஷிங்டன் சுந்தர்.

இலங்கை: மலிங்கா (கேப்டன்), குணதிலகா, அவி‌‌ஷ்கா பெர்னாண்டோ, மேத்யூஸ், தசுன் ‌‌ஷனகா, குசல் பெரேரா, நிரோ‌‌ஷன் டிக்வெல்லா, தனஞ்ஜெயா டி சில்வா, இசுரு உதனா, பானுகா ராஜபக்சே, ஒ‌ஷாடா பெர்னாண்டோ, வானிந்து ஹசரங்கா, லாஹிரு குமாரா, குசல் மென்டிஸ், சன்டகன், கசுன் ரஜிதா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக