புதன், 8 ஜனவரி, 2020

ஜனவரி 18ல் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி- SDPI


குடியுரிமை சட்டத்திருத்தம், என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சியை ரத்து செய்ய வலியுறுத்தி ஜனவரி 18ல் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி - எஸ்.டி.பி.ஐ. 



திருச்சியில் (ஜன.07) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் எஸ்.டிபி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர்கள் அப்துல் ஹமீது, அச.உமர் பாரூக், துணைத் தலைவர் அம்ஜத் பாஷா,பொருளாளர் வி.எம்.அபுதாஹிர், மாநில செயலாளர்கள் அகமது நவவி, அபுபக்கர் சித்திக், வழ.சஃபியா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் முகமது பாரூக், ஏ.கே.கரீம், சபியுல்லா, ஷஃபிக் அகமது மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களிடம் பேசியதாவது;

ஜனவரி 18ல் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி:

அரசமைப்பு சட்டத்துக்கு எதிரான, ஈழத்தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை புறக்கணிக்கும் குடியுரிமை சட்டத்திருத்தம், என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டங்களை, பிற அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், அறிவுஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து, நாடு முழுவதும் பரவலான போராட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஈடுபட்டு வருகின்றது. இதுதொடர்பாக நாடு முழுவதும் சுமார் 5000 நிகழ்ச்சிகளை நடத்தி, குடியுரிமை சட்டத்திருத்தம் என்.பி.ஆர்., மற்றும் என்.ஆர்.சி. சம்மந்தமான பா.ஜ.க. மற்றும் சங்பரிவார்களின் பொய் மற்றும் உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை முறியடித்து, அதன் மத அடிப்படையிலான மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளை தகர்க்கவும், நாட்டு மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி திட்டமிட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக எதிர்வரும் ஜனவரி 18 அன்று, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி மிகப்பெரும் பேரணி நடத்தவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி திட்டமிட்டுள்ளது.

நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை காக்கவும், நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையின் லட்சியங்களை நிலைநிறுத்தவும் இந்த பேரணியில் அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக அழைப்பு விடுக்கின்றோம். மத்திய அரசு இச்சட்டங்களைத் திரும்பப்பெறும் வரை இத்தகைய ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி தீவிரப்படுத்தும் எனவும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக