வெள்ளி, 31 ஜனவரி, 2020

CAA - மத்திய அரசு சிறிதும் பின்வாங்காமல் முழுவீச்சுடன் செயல்படுத்த வேண்டும். - டாக்டர் K.கிருஷ்ணசாமி


CAA - மத்திய அரசு சிறிதும் பின்வாங்காமல் முழுவீச்சுடன் செயல்படுத்த வேண்டும். - டாக்டர் K.கிருஷ்ணசாமி

அரசியல் உள்நோக்கத்தோடு செய்யும் பிரச்சாரத்தை இந்திய இஸ்லாமியர்கள் இரை ஆகிவிட வேண்டாம்.

புதிய தமிழகம் கட்சியின் சார்பாக 30.01. 2020 -ம் நாள் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை - சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் - தலைவர் டாக்டர் K.கிருஷ்ணசாமி.MD அவர்கள் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் நிறைவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :


1. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை புதிய தமிழகம் கட்சி மனதார வரவேற்கிறது. இச்சட்டத்தை நிறைவேற்றிட அரும்பாடுபட்ட பிரதமர் மோடி அவர்கள் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கும் புதிய தமிழகம் கட்சி இவ்உண்ணாவிரதப் போராட்டத்தின் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

2. CAA -என்ற குடியுரிமை திருத்தச்சட்டத்தை அரசியல் உள்நோக்கத்தோடு கொடுக்கப்படும் எதிர்ப்புகளைக் கண்டு மத்திய அரசு சிறிதும் பின்வாங்காமல் அதை முழுவீச்சுடன் செயல்படுத்த புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.

3. அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் பெரும்பான்மை இஸ்லாமியர்களின் துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்திய நாட்டில் அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்தமதத்தினர், பார்சிகள், சீக்கியர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் ஆகும். இது இந்தியாவில் வாழும் எந்த இஸ்லாமியரின் குடியுரிமையை பறிக்கும் சட்டம் அல்ல. எனவே, இஸ்லாமியர்கள் CAA குறித்து எவ்வித அச்சமும் படத் தேவையில்லை என புதிய தமிழகம் உண்ணாவிரதம் போராட்டத்தின் வாயிலாக வேண்டுகிறது.

4. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தமிழகம் முழுவதும் இன்றைய அரசியல் கட்சிகள் அரசியல் உள்நோக்கத்தோடு செய்யும் பிரச்சாரத்திற்கு தமிழக இஸ்லாமியரும், இந்திய இஸ்லாமியர்களும் இறை ஆகிவிட வேண்டாம் என வலியுறுத்துகிறோம்.

5. CAA - சட்டத் திருத்தத்தில் இந்திய பூர்வீக குடிமக்கள் எவருக்கும் எவ்வித இடையூறுமின்றி அமலாக்க வலியுறுத்தி தமிழ் நாடெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்துவது எனவும், வரும் 9-ம் தேதி திருச்சியில் முதல் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சாதி, மதம், மொழி இவைகளை கடந்து இந்திய தேசத்தை பாதுகாக்க ஓரணியில் திரண்டிட இந்திய மக்களுக்கு புதிய தமிழகம் கட்சி அறைகூவல் விடுக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக