டாக்டர் K. கிருஷ்ணசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டாக்டர் K. கிருஷ்ணசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 மே, 2022

மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருப்பதுதான் ‘மாநில சுயாட்சியா’? மாடல் ஆட்சியா? - டாக்டர் K. கிருஷ்ணசாமி



மத்திய அரசு, ஒரு வருடத்தில்  இருமுறை பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!
’திராவிட ஸ்டாக்கிஸ்ட் அரசு’ விலையைக் குறைக்க மறுப்பது ஏன்?

மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருப்பதுதான் ‘மாநில சுயாட்சியா’? மாடல் ஆட்சியா? - டாக்டர் K. கிருஷ்ணசாமி
 
பெட்ரோல், டீசல், காஸ் ஆகியவற்றின் அபரிமிதமான விலை உயர்வின் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவது மட்டுமல்ல, அதனால் இந்தியப் பொருளாதாரமே முடங்கும் அபாய சூழல் உருவாகி உள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 9.50-ம், டீசலுக்கு ரூபாய் 7-ம் விலை குறைப்பு செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இவ்விலை குறைப்பு பெரும் பலன் எதையும் தந்துவிடாது எனினும், இது நல்லதொரு முன்னெடுப்பு என்ற அடிப்படையில் இதை வரவேற்கிறோம். அதே சமயத்தில், பெட்ரோல் விலையைக் குறைத்த மத்திய அரசு; காஸ் விலையைக் குறைக்காமல், ஏற்கனவே உள்ள மானியமே தொடரும் என அறிவித்து இருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

திங்கள், 4 ஏப்ரல், 2022

நகர்ப்புற சொத்துவரி உயர்வு அரசாணையை, ரத்து செய்ய வலியுறுத்தி, ஏப்ரல்-6 ல் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்.! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

 நகர்ப்புற சொத்துவரி உயர்வு அரசாணையை, ரத்து செய்ய வலியுறுத்தி,

ஏப்ரல்-6 ல் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்.!

தொடர்ந்து இரண்டு வருட கரோனா முழு முடக்கம், அதனால் நாடெங்கும் நிலைகுலைந்து போன தொழில், வணிகம், வேளாண்மை அனைத்தும் இப்பொழுதுதான் மெல்லத் துளிர் விடுகின்றன. பள்ளிகளும், கல்லூரிகளும் அண்மையில் தான் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. கரோனா மூன்றாவது அலையின் பாதிப்பு மற்றும் அதன் அச்சம் நீங்கி, மக்கள் மெல்லமெல்ல இயல்புநிலைக்குத் திரும்புகிறார்கள். தங்களிடமிருந்த கையிருப்புகள் எல்லாம் கரைந்து, கடன் கூட வாங்க முடியாத அவலநிலையில் மக்கள் தத்தளிக்கிறார்கள். ரஷ்ய – உக்ரைன் போர், நேட்டோ நாடுகளின் பொருளாதாரத் தடைகள் அனைவரையும் பாதிக்கத் தொடங்கிவிட்டன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒவ்வொருவரின் பாக்கெட்டையும் தினந்தினம் பதம் பார்க்கிறது.

நகர்ப்புற அபரிமித சொத்து வரி உயர்வு தமிழக அரசின் அரசாணையை நிறுத்தி வைக்க வேண்டும்! முதல்வரின் அனுமதி இல்லாமல் இந்த உத்தரவு எப்படிப் பிறப்பிக்க முடியும்? - டாக்டர் K. கிருஷ்ணசாமி


முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமல் சொத்து வரி உயர்வு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா?
நகர்ப்புற அபரிமித சொத்து வரி உயர்வு  தமிழக அரசின் அரசாணையை நிறுத்தி வைக்க வேண்டும்! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

சொத்து வரியை உயர்த்த மத்திய நிதி ஆணையம் மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது எப்போது? 100 முதல் 200 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்த கட்டளையிட்டதா?

தமிழக அரசு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்!

வரிவிதிப்புகள் இல்லாமல், அரசு நிர்வாகம் நடைபெற இயலாது. ஆனால், வரிவிதிப்புகள் மக்கள் தாங்கக் கூடியதாக இருக்க வேண்டும். தாறுமாறான வரிவிதிப்புகள் அபரிமிதமான விலை உயர்வுக்கும், மக்களின் வாங்கும் சக்தியைக் குறைத்து, அவர்களை வீதிக்கு வந்து போராடவும் தூண்டும். கரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகள், ரஷ்ய உக்ரைன் போரால் ஏற்பட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுகளினால் அனைவரும் திண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஐந்து மாநில தேர்தலுக்காக மட்டுமே, கடந்த மூன்று மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த பத்து தினங்களாக தினமும் 70 முதல் 80 பைசாக்கள் வரை உயர்த்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டை தி.ஸ்டாக்கிஸ்டுகள்  தினமும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

வியாழன், 24 மார்ச், 2022

மம்தா அரசை வீட்டுக்கு அனுப்ப, மத்திய பாஜக அரசு களத்தில் இறங்குமா? அல்லது கலங்கி நிற்குமா? - டாக்டர் k.கிருஷ்ணசாமி


கீழவெண்மணியை நினைவுபடுத்தும் மேற்குவங்க சம்பவம்!

பிர்பும் பகுதியில் நடைபெற்ற பச்சைப் படுகொலைக்கு நீதியை நிலைநாட்ட,

மம்தா அரசை வீட்டுக்கு அனுப்ப, மத்திய பாஜக அரசு களத்தில் இறங்குமா? அல்லது கலங்கி நிற்குமா? - டாக்டர் k.கிருஷ்ணசாமி

தமிழகத்தின் அன்றைய கீழத்தஞ்சை, இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் தினச் சம்பளமாக கூடுதலாக அரைப்படி நெல் உயர்வு கேட்டுப் போராடியதற்காகவும், அவர்கள் சார்ந்த அமைப்பிற்கான கொடியை நாட்டியதற்காகவும் 1968 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி நள்ளிரவில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த ஏழை விவசாய உழைப்பாளிகள் பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும், முதியோர்களுமாக 43 பேர் ஒரே  குடிசைக்குள் தள்ளப்பட்டு தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அக்காலகட்டத்தில் இந்தியாவையே உலுக்கியது. அதை ஒத்த ஒரு சம்பவம் நேற்றைய முன் தினம் மேற்கு வங்கம் மாநிலம் ராம்புராட் மாவட்டம், பிர்பும் பகுதியில் அரங்கேறியுள்ளது. அதில் 6 பெண்களையும், 2 குழந்தைகளையும் ஒரே வீட்டினுள் தள்ளித் தீயிட்டு எரித்துக் கொன்றுள்ளனர். இந்த கொடிய சம்பவத்திற்கு எமது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

செவ்வாய், 22 மார்ச், 2022

தொடரும் பொள்ளாச்சி, விருதுநகரில் மீண்டும் ஒரு கூட்டு பலாத்காரம்! காலம் தாழ்த்தாது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

 தொடரும் பொள்ளாச்சி, விருதுநகரில் மீண்டும் ஒரு கூட்டு பலாத்காரம்!

காலம் தாழ்த்தாது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்! 

- டாக்டர் K. கிருஷ்ணசாமி

விருதுநகர் மாவட்டம், பாண்டியன் நகர் பகுதியைச் சார்ந்த 22 வயது பெண்மணி அதே பகுதியைச் சேர்ந்த 8 நபர்களால் தொடர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரச் செயலை புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் கூட்டுப் பலாத்காரத்துக்கு ஆளானது தமிழகத்தைத் தாண்டி இந்தியாவெங்கும் எதிரொலித்தது. இப்பொழுது, 22 வயதான பெண்ணுடன் முதலில் நட்பாக பழகி, பின் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஆசை வார்த்தைகளைக் காட்டி, ஏமாற்றி, அப்பெண்ணிடம் மேற்கொண்ட உறவுகளைப் படமாக்கி சிறிதும் கூட மனசாட்சி இல்லாமல் தன்னுடைய சக நண்பர்களுக்கும் பகிர்ந்து, அவர்களும் அந்த காணொளியைச் சுட்டிக் காட்டி அச்சுறுத்தி, அந்தப் பெண்ணை 8 பேர்களும் தொடர்ந்து சீரழித்து இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தனது வாழ்க்கையே சீரழிந்து விடும் என்பதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

புதன், 24 நவம்பர், 2021

திடகாத்திரமான காவல்துறை அதிகாரியை 10 வயது சிறுவர்கள் கொலை செய்திருக்கிறார்கள் என்பது நம்பத் தகுந்ததாக இல்லை!- டாக்டர் K. கிருஷ்ணசாமி



பூமிநாதன் கொலைவழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!!

ஆடு திருட்டுக் கும்பலை துரத்திப் பிடிக்கச் சென்ற சிறப்பு உதவிக் காவல் ஆய்வாளர் பூமிநாதன் அவர்கள் நேற்று முன்தினம் இரவில் நவல்பட்டு காவல்நிலைய எல்லையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த துயர்மிகு சம்பவத்திற்குக் காரணமான குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, அவர்களுக்குரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டுமென்று நாம் தமிழக அரசை வலியுறுத்தியிருந்தோம். பூமிநாதன் கொலைக்குக் காரணமானவர்களை தேடிக் கண்டுபிடிக்க நான்கு சிறப்புப் படை அமைக்கப்பட்டிருந்தது. அதில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் ஒருவனுக்கு 19 வயது என்றும், மற்றவர்களுக்கு 10 வயது என்றும் காவல்துறை மூலமாகவே அறிவிப்பு வந்திருக்கிறது.  

வியாழன், 18 நவம்பர், 2021

சஞ்சீப் பானர்ஜி அவர்கள் ’feudal culture’ என்று சொல்லியிருப்பது நீதித்துறையின் மீதானதா? அரசியல் தலைமையின் மீதானதா? சமூகத்தின் மீதானதா? - டாக்டர் K. கிருஷ்ணசாமி



 சஞ்சீப் பானர்ஜி சாடுவது நீதித் துறையையா?

அரசியல் தலைமையையா?. - டாக்டர் K. கிருஷ்ணசாமி

நீதிபதிகள் உயர் பதவிகளை அடைவதும் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு மாற்றப்படுவதும் நீதித்துறைக்குள் நிர்வாக ரீதியான நடைமுறையாகும். பதவி உயர்வுகள், இடமாற்றங்களின் போது ஒரு சிலருக்கு தாங்கள் எதிர்பார்த்த படி நடைபெறாமல் போயிருக்கலாம். ஜனநாயக நாட்டில் நீதித்துறை சுதந்திரமான அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே அதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

வியாழன், 11 நவம்பர், 2021

வெள்ளத்திலும் விளம்பரம் வேண்டாம்! அல்லல்படுவோருக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள்!!.- டாக்டர் K. கிருஷ்ணசாமி



வெள்ளத்திலும் விளம்பரம் வேண்டாம்!
அல்லல்படுவோருக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள்!!.- டாக்டர் K. கிருஷ்ணசாமி

கடந்த ஐந்து தினங்களாக பெய்யும் தொடர் மழையால் சென்னை மாநகரம் தத்தளிக்கிறது. போக்குவரத்தின் முக்கிய கேந்திரங்களாக விளங்கிய 15க்கும் மேற்பட்ட சுரங்கப் பாதைகள் மூடப்பட்டு விட்டன. வட சென்னை, கொளத்தூர், தி. நகர், மாம்பலம், வடபழனி, வேளச்சேரி, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான சாலைகளில் எவ்வித போக்குவரத்தும் இயக்க முடியாத நிலையும், பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் வீட்டுக்குள் வாழ முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இது மிக மிக அசாதாரணமான சூழல். மேடான பகுதிகளில் சில மின் மோட்டார்களை இயக்கி தண்ணீரை வெளியேற்றுவதால் மட்டும் சென்னை மக்களின் அவலநிலையைத் தீர்த்துவிட முடியாது. மழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்புகள் தாழ்வான பகுதிகளில் தான் மிக அதிகமாக இருக்கும்.

செவ்வாய், 9 நவம்பர், 2021

'மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்' என்ற பழமொழி திமுக அரசின் நிலைப்பாட்டிற்கு நன்கு பொருந்தித்தானே வருகிறது.- டாக்டர் K. கிருஷ்ணசாமி



முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் குறைப்பு.!
உடைத்தது மண் குடமா.? பொன் குடமா.? - டாக்டர் K. கிருஷ்ணசாமி

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேய பொறியாளர் 'பென்னி குவிக்' அவர்களின் குடும்பச் சொத்தை விற்று, 1887-ல் துவங்கி 1895-ம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டதே 'முல்லைப்பெரியாறு அணை' ஆகும்.

ஏறக்குறைய 130 ஆண்டுகள் கடந்தபின்னும் இன்னும் அணையின் கட்டுமானம் உறுதியாக இருப்பதாகவே தொழில்நுட்பக்குழு பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப்பின் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. இந்த அணையின் நீர்மட்டம் 152 அடி வரையிலும் தேக்கிக்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டே கட்டப்பட்டிருக்கிறது. 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு முல்லைப்பெரியாறு அணை கேரள அரசின் எல்லைக்குள் போனது.

செவ்வாய், 12 அக்டோபர், 2021

140 கோடி மக்களை நிர்வகிக்கும் அரசால், 130 விமானங்களை நிர்வகிக்க முடியாதா? விற்கப்பட்டது Air India விமானம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களின் தன்மானமும் தான்!.- டாக்டர் K. கிருஷ்ணசாமி

 140 கோடி மக்களை நிர்வகிக்கும் அரசால், 130 விமானங்களை நிர்வகிக்க முடியாதா?

விற்கப்பட்டது Air India விமானம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களின் தன்மானமும் தான்!

1.5 இலட்சம் கோடி மதிப்புள்ள Air India நிறுவனத்தை, 15 ஆயிரம் கோடிக்கு விற்றது சரிதானா? !

வெள்ளி, 8 அக்டோபர், 2021

ஜனநாயகம் மறுக்கப்பட்ட வெற்றிமாறன் மரணத்தை மறைத்துவிட்டீர்களே! தமிழக ஊடகங்களும், திராவிட ஸ்டாக்குகளும் என்றுதான் உண்மை பேசுவார்களோ?.- டாக்டர் K. கிருஷ்ணசாமி


 பாப்பாப்பட்டி பரப்புரையில் மறைக்கப்பட்ட வெற்றிமாறன் மரணம்!

திராவிட நீதியா? திராவிட மனுவா?

வாக்காளர்களை ஐநூறுக்கும் ஆயிரத்திற்கும் விலைப் பேசும் போக்குகள், தமிழக இடைத்தேர்தலில் துவங்கி நாடாளுமன்றத் தேர்தல்களில் மெல்ல பரவி, 2021 சட்டமன்றத் தேர்தலில் அதலபாதாளம் வரையிலும் பாய்ந்தன. சட்டமன்றத் தேர்தல்களே அந்த கதி என்றால், உள்ளாட்சித் தேர்தல்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா? ஜனநாயகத்தைப் பரவலாக்க வேண்டுமென்ற உயரிய நோக்கத்தோடு, இராஜீவ்காந்தி அவர்களால் பஞ்சாயத்துராஜ் மற்றும் நகர்பாலிகா சட்டம் கொண்டு வரப்பட்டது. ஜனநாயகம் வேர்க்கால்கள் வரையிலும் பரவ வேண்டும் என்பதற்கு மாறாக, பணநாயகமும், ஜனநாயகவிரோத நடவடிக்கைளுமே வேர்க்கால்கள் வரையிலும் பாய்கின்றன.

சனி, 18 செப்டம்பர், 2021

மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் உடனடியாக ஒரு கிலோவிற்கும் குறைவான பாக்கெட் தேங்காய் எண்ணெய் மீதான 18% ஜி.எஸ்.டி வரிவிதிப்பை முற்றாக இரத்து செய்ய வேண்டும்.- டாக்டர் K. கிருஷ்ணசாமி

 தேங்காய் எண்ணெய் மீதான 18% ஜி.எஸ்.டி வரியை இரத்து செய்க!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் அவர்கள் கடிதம்!!

நேற்றைய தினம் உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில் ஒரு கிலோவிற்கும் குறைவாகப் பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் தேங்காய் எண்ணெய்க்கு 18% ஜி.எஸ்.டி வரிவிதிக்க, ஜி.எஸ்.டி. கவுன்சிலில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தேங்காய் எண்ணெய் தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும், பெரும்பான்மையான மக்களால் சமையலுக்கும், சருமப் பாதுகாப்பிற்கும், ஆடவர் - பெண்கள் முடி - கூந்தல் வளர்ச்சிக்கும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சனி, 11 செப்டம்பர், 2021

அரசியலில் ஆதிக்கங்களை ஒழிக்க ரெளத்திரம் பழகுவோம்!! சாதி, மத, இன, மொழி வல்லாதிக்கங்களை ஒழிக்க ரெளத்திரம் பழகுவோம்!!! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

 மக்கள் கவிஞர் – பாரத தேச விடுதலைக் கவிஞர்!

பாரதியாரின் 100-வது நினைவு நாளில் புதிய தமிழகத்தின் புகழஞ்சலி!!

பிறவிக் கவிஞர், பிறவி தேசப்பற்றாளர், பொதுவுடைமைவாதி, ஏழைப் பங்காளன், சமத்துவ நாயகன், மகாகவி – மக்கள் கவிஞர் – விடுதலைக் கவிஞர் - பாரதியார் அவர்களின் நூறாவது ஆண்டு நினைவு தினத்தில் புதிய தமிழகம் கட்சி தனது புகழஞ்சலியை செலுத்துகிறது. 1882-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி, அன்றைய ஒட்டப்பிடாரம் வட்டம், எட்டையபுரத்தில் பிறந்த பாரதியார், 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி நள்ளிரவு 1.40 மணிக்கு, நியாயப்படி செப்டம்பர் 12-ஆம் தேதி அவர் தனது 39-வது வயதில் மரணமெய்தினார். அவர் தன் வாழ்நாளின் ஒவ்வொரு மணித்துளியும் இந்த மண்ணுக்காகவும், மக்களின் விடுதலைக்காகவும் மட்டுமே குரல் கொடுத்துள்ளார். தனது 11-வது வயதிலேயே கவிபாடும் திறமையின் காரணமாக, தனது சுப்பிரமணியன் என்ற இயற்பெயருடன் பாரதி என்றப் பட்டம் பெற்று ‘சுப்பிரமணிய பாரதி’ என்று அழைக்கப்பட்டார். வடக்கே இரவீந்தரநாத் தாகூர் தனது பாடல்கள் மூலம் விடுதலை கனலை மூட்டினார்; தெற்கே பாரதியார் தனது பாடல்கள் மூலம் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினார்.

வியாழன், 9 செப்டம்பர், 2021

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட CAA சட்டத்தை சட்டமன்றத் தீர்மானம் இரத்து செய்யாது என்று தெரிந்தும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது ஏன்? - டாக்டர் K. கிருஷ்ணசாமி

 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட CAA சட்டத்தை சட்டமன்றத் தீர்மானம் இரத்து செய்யுமா? - டாக்டர் K. கிருஷ்ணசாமி

அரசியல் இலாபத்திற்காக இஸ்லாமியர்களை பீதிக்கு ஆளாக்கக் கூடாது! 

இந்திய அரசியல் சாசனத்தின் 11-வது சரத்தின்படி, இந்தியக் குடியுரிமை வழங்கக்கூடிய சட்டத்தை இயற்றும் முழு அதிகாரமும் இந்திய நாடாளுமன்றத்திற்கே உண்டு. இதில் மாநில அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு எவ்வித அதிகாரமுமில்லை. எனினும், 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் ஒரு தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த சட்டமன்றத் தீர்மானம் CAA மீது எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

புதன், 1 செப்டம்பர், 2021

திருக்கோவில்களுக்குள் திருக்குறளா? திருக்குறள்-திருவள்ளுவரை காவியும் ஆக்க வேண்டாம்; கருப்பும் ஆக்க வேண்டாம்! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

 திருக்கோவில்களுக்குள் திருக்குறளா?

ஆலயங்களுக்குள் (தென்)அரசுக்கு என்ன வேலை?

திருக்குறள்-திருவள்ளுவரை காவியும் ஆக்க வேண்டாம்; கருப்பும் ஆக்க வேண்டாம்!

திருக்குறள்-திருவள்ளுவர் வாழ்க்கை வழிகாட்டிகள்!  

அவைகள் வாழவும்; மக்கள் மனதை ஆளவும் வழிவிடுங்கள்!!

இந்துக் கோவில்களில் இனிமேல் தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம் போன்ற பக்தி வகுப்புக்களோடு திருக்குறள் வகுப்புக்களும் நடத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். இந்த செயல் அவரின் திருக்குறள் மீதான அளவளாவிய பற்று என்று எடுத்துக் கொள்வதா? அல்லது இந்து கோவில்கள் மீதான திராவிட வெறுப்பு என்று எடுத்துக் கொள்வதா?  எனத் தெரியவில்லை. இந்து வழிபாடுகளும், அதனுடைய கலாச்சாரமும், பண்பாடும் பன்னெடுங்கால பாரம்பரியம் கொண்டவைகள். அதன் மீது நம்பிக்கை வைப்பதும், வைக்காததும் தனி மனித விருப்பம்.

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

ஆகஸ்ட் 31 கொடியன்குளம் அழித்தொழிப்பு! ஒரு சமுதாயத்தின் விடியலுக்கான, அடையாளத்தை-அதிகாரத்தை மீட்டெடுப்பதற்கான பாடம்!! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

 ஆகஸ்ட் 31 கொடியன்குளம் அழித்தொழிப்பு!

படத்திற்கான கருவா? பாடத்திற்கான கருப்பொருளா?

 - டாக்டர் K. கிருஷ்ணசாமி

கொடியன்குளம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் தமிழ்நாடு காவல்துறை மற்றும் தனியார் செக்யூரிட்டிகளால் இணைந்து சூறையாடி 26 வருடங்கள் முடிந்து 27வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். சுதந்திர இந்தியாவில் இந்தியக் குடிமக்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடத்தப்பட்ட மனிதக்குலத்தின் மீதான முதல் தாக்குதல் ஆகும்.

புதன், 25 ஆகஸ்ட், 2021

திருமுருக கிருபானந்தவாரியார் பெருமையை தமிழக அரசு உலகளவில் அடையாளப்படுத்த வேண்டும் ! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

 ஆன்மீகத்தால் அறிவுக் கண்களையும் திறந்தவர்;  அழகு தமிழையும்  ஒருசேர வளர்த்தவர் ’திருமுருக கிருபானந்தவாரியார்’ அவர்கள்!

அவரது பெருமையை தமிழக அரசு உலகளவில் அடையாளப்படுத்த வேண்டும் ! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

ஆன்மீகத்தால் தமிழை வளர்த்தாரா? தமிழால் ஆன்மீகத்தை வளர்த்தாரா? என வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவிற்கு 70 வருடங்களுக்கு மேலாக இனிய தமிழ்மொழியில் ஆன்மீகப் பணியை மேற்கொண்டவர் அருள்மிகு திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள். ஆகஸ்ட் 25, அவருடைய பிறந்த நாள் இன்று அவரது செம்மார்ந்த பணியை புதிய தமிழகம் கட்சி நினைவு கூருகிறது.  

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பாலாற்றின் கரையில் உள்ள காங்கேயநல்லூர் என்ற சிற்றூரில் தந்தையார் மல்லையதாசர் – தாயார் கனகவள்ளி அம்மையார் ஆகியோர் ஈன்றெடுத்த 11 குழந்தைகளில் நான்காவதாகப் பிறந்தவர். அவரது தந்தையாரே இவருக்கு ஆசானாக விளங்கி 12 வயதிலேயே பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பண்களை கற்றுக் கொடுத்தார்.

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

கட்-அவுட் கலாச்சாரத்தை ஒழிக்க ஸ்டாலின் முனைப்புக் காட்டுவாரா? அல்லது பூசி மெழுகுவாரா? - டாக்டர் K. கிருஷ்ணசாமி

விழுப்புரம் தினேஷ் மரணத்திற்கு நீதி வேண்டும்!
கட்-அவுட் கலாச்சாரத்தை ஒழிக்க ஸ்டாலின் முனைப்புக் காட்டுவாரா? அல்லது பூசி மெழுகுவாரா? - டாக்டர் K. கிருஷ்ணசாமி

திமுக அமைச்சர் பொன்முடி அவர்களின் நிகழ்ச்சிக்குக் கட்சிக் கொடி, தோரணங்கள், பதாகைகள் கட்டும் போது உயர் மின் அழுத்தக் கம்பியில் பட்டு விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டுவை சேர்ந்த 13 வயதான தினேஷ் என்ற எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன் மரணமெய்தி மூன்று தினங்கள் ஆகிவிட்டன. ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் என்று போற்றப்படும் செய்தி ஊடகங்களும், காணொளி ஊடகங்களும் இச்சம்பவத்தை வெளிக்கொணராதது மட்டுமல்ல. அந்த செய்தியை அதிகம் வெளியே பரவவிடாமல் தடுக்கும் ‘மூடக’ பணியிலும்  ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பதுதான் வருந்தத்தக்கச் செய்தி.

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

தாலிபான்களைப் போல காஷ்மீரைக் கைப்பற்றத் திட்டம்! இந்திய அரசுக்கு மெகபூபாவின் எச்சரிக்கை! தேச விரோத சட்டத்தின் கீழ் நடவடிக்கை – மத்திய அரசு தயக்கம் காட்டக் கூடாது ! - டாக்டர் K. கிருஷ்ணசாமி



தாலிபான்களைப் போல காஷ்மீரைக் கைப்பற்றத் திட்டம்!

இந்திய அரசுக்கு மெகபூபாவின் எச்சரிக்கை!

தேச விரோத சட்டத்தின் கீழ் நடவடிக்கை – மத்திய அரசு தயக்கம் காட்டக் கூடாது ! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

ஒருங்கிணைந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பிடிபி (People Democratic Party) என்ற அரசியல் கட்சியின் தலைவரும் மெகபூபா முப்தி அவர்கள் ஆவார். 370வது சரத்தின் படி, ஏறக்குறைய 70 ஆண்டுக் காலத்திற்கு மேலாக காஷ்மீருக்குத்  தனி  உரிமைகள் மற்றும் ஆயிரக்கணக்கான கோடி மதிப்பில் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டு வந்த போதும் எல்லை தாண்டிய பயங்கரவாதமும், பிரிவினை வாதமும் இந்திய இறையாண்மைக்கே சவாலாக இருந்தன. முன்னாள் முதல்வர் முப்தி முகமது அவர்களின் மகள் மெகபூபா முப்தி முதல்வராக இருந்த போதும் அங்கு எவ்வித மாற்றமும் நிகழவில்லை;  கல்லெறிகளும் நிற்கவில்லை; பிரிவினைவாத குழுக்களின் செயல்பாடுகளும் குறையவில்லை.

சனி, 21 ஆகஸ்ட், 2021

பெட்ரோல் - டீசல் - காஸ் அநியாய விலை உயர்வு! மத்திய, மாநில அரசுகள் வரிகளைக் குறைத்தால் ரூ 650க்கு விற்க முடியும்! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

 பெட்ரோல் - டீசல் - காஸ் அநியாய விலை உயர்வு!

எண்ணெய் – மக்களின் எண்ணக் கிடங்குகளில் நெருப்பைப் பற்ற வைப்பதற்குச் சமம்!

மத்திய, மாநில அரசுகள் வரிகளைக் குறைத்தால் ரூ 650க்கு விற்க முடியும்! - டாக்டர் K. கிருஷ்ணசாமி

ஏழு தினங்களுக்கு முன்பு, சமையல் காஸ் விலையை மத்திய அரசு சிலிண்டருக்கு ரூபாய் 25 உயர்த்தி இருக்கிறது. துவக்கத்தில் ரூபாய் 150 ஆகவும்,  கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை ரூபாய் 300 ஆகவும் இருந்த காஸ் சிலிண்டர்களின் விலை பன் மடங்கு உயர்ந்து 900 ரூபாயை நெருங்கிவிட்டது. வசதி படைத்தவர்களைக் காட்டிலும் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் தான் காஸ் சிலிண்டரை சமையலுக்குப் பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள். கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் அண்மை காலம் வரையிலும் விறகு, மாட்டுச் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் வறட்டி மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பொருட்களே எரி பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதன் காரணமாக சமையல் என்பதே பெரும் சுமையாகவும், குறிப்பாக பெண்கள் அடுப்புக்குள்ளேயே அதிக நேரம் முடங்கியும், அதனால் அவர்கள் உடல்நிலை பாதிப்பதுடன் அவர்களுடைய சுதந்திரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. பெரும்பாலும் பெண்களின் வாழ்க்கை இதனால் அடுப்படியிலேயே முடங்கி போயிற்று.