திங்கள், 6 ஜனவரி, 2020

ஜனவரி 8 அகில இந்தியத் தொழிலாளர் போராட்டம்: ம.தி.மு.க முழு ஆதரவு! - வைகோ



ஜனவரி 8 அகில இந்தியத் தொழிலாளர் போராட்டம்:
ம.தி.மு.க முழு ஆதரவு! - வைகோ
அனைவருக்கும் வேலை வழங்கு, விலைவாசியைக் கட்டுப்படுத்து, குறைந்தபட்ச ஊதியம் வழங்கு, அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கு, இரயில்வே, பாதுகாப்பு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்க்காதே, தொழிலாளர் நலச் சட்டங்களை - தொழிலாளர் விரோதச் சட்டங்களாக, முதலாளிகளின் ஆதரவுச் சட்டங்களாக மாற்றாதே! விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கட்டுபடியான விலை கொடு, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு விரோதமான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய் ஆகிய மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக 2020 ஜனவரி 8 ஆம் நாள் நடைபெற இருக்கும் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக