செவ்வாய், 21 ஜனவரி, 2020

பிப் 22, திருச்சியில் திரள்வோம்! தேசம் காப்போம்! - தொல்.திருமாவளவன்


குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெற வலியுறுத்தி வரும் பிப்ரவரி 15 நடத்துவதென 04-01-2020 அன்று நடந்த மாநில செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் பேரணிக்கான பணிகள் முடுக்கப்பட்டுள்ளன. தற்போது, ஜனவரி மாதம் 31ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி வரையில் நாடாளுமன்ற (நிதிநிலை அறிக்கை) கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அக்கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டியிருப்பதால், பிப்ரவரி 15ஆம் தேதி திருச்சிராப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த ‘தேசம் காப்போம் பேரணி’ ஒருவாரம் தள்ளி வைக்கப்பட்டு பிப்ரவரி 22ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.


மத்தியில் ஆளும் பா.ஜ.க ஃபாசிச அரசு இயற்றியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்தியக் குடிமக்களின் நல்லிணக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதன்மூலம் எவருடைய குடியுரிமையையும் பறித்து நாடற்றவராக்கிவிட முடியும். எனவே, நாடுதழுவிய அளவில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். சுதந்திர இந்தியாவில் ஒரு சட்டத்துக்கு எதிராக மக்கள் இந்தளவுக்குப் போராடிய வரலாறே கிடையாது.

இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை பாஜக அரசு திரும்பப்பெற வலியுறுத்தியும், அரசமைப்புச் சட்டத்தை பாதுகாத்திடக் கோரியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் ‘தேசம் காப்போம் பேரணி’ ஒருங்கிணைக்கப்படுகிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக