புதன், 22 ஜனவரி, 2020

அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேகில் பிரசாந்த்



அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றியதாக நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் அறிவித்தார். மேலும், லண்டன் ட்ரினிடி கல்லூரியில் தனது மகனும் நடிகருமான பிரசாந்த் பியானோ பயின்றிருப்பதால் அவரே ஆயுஷ்மான் கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என்றும் தியாகராஜன் கூறியிருந்தார்.


இந்தியில் க்ரைம் த்ரில்லர் கதையாக உருவான படம் அந்தாதுன். இது ‘தி பியானோ டியூனர்’ என்ற பிரெஞ்சு நாவலை தழுவி எடுக்க பட்ட திரைப்படம் ஆகும். இதில், ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு சிறந்த நடிகர், சிறந்த படம் மற்றும் சிறந்த திரைக்கதை என 3 தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. வெறும் 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 450 கோடிக்கு மேல் வசூல் வேட்டையை நிகழ்த்தியது. மேலும், சீனாவிலும் அந்தாதுன் படம் வெளியாகி பாராட்டையையும், வசூல் மழையையும் பொழிந்தது.
.
மோகன் ராஜா அந்தாதுன் தமிழ் ரீமேக்கை இயக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே மோகன் ராஜா இயக்கிய பெரும்பாலான படங்கள் ரீமேக்காக இருந்ததால் இதுவும் அவருக்கு கைகூடும் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக