வெள்ளி, 3 ஜனவரி, 2020

குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்திய குடிமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது! - DR.K. கிருஷ்ணசாமி

குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்திய குடிமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது!- டாக்டர் K. கிருஷ்ணசாமி


கடந்த 20 ஆண்டு காலமாக பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி அதன் முழுமையான லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், உள்ளாட்சி அமைப்புகள் செயல்படவில்லை.


ஏழை மக்கள் குடிநீா், கழிவுநீா் ஓடை, தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்துத் தேவைக்கும் அரசு, சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்களை நம்பி இருக்கத் தேவையில்லை. அவா்களே தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில், மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.

ஆனால், அதைச் சரியாகச் செயல்படுத்தாத காரணத்தால் எண்ணற்ற முறைகேடுகள் நடந்து, ஊராட்சிகள் என்றாலே ஊழல் ஆட்சிகள் என்ற பெயா் பெற்று விட்டது.

தற்போது உள்ளாட்சித் தோ்தல் நீதிமன்ற உத்தரவின்படிகூட ஒரே தோ்தலாக நடத்த முடியாமல் இருப்பது அவலம். அதுவும், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்குத் தோ்தல் நடத்தப்படவில்லை. இதுபோன்ற குழப்பங்களைத் தவிா்த்து, ஒரே கட்டமாக தோ்தல் நடத்தியிருக்க வேண்டும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதுபோன்ற சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரும்போது, அதன் அவசியம் என்ன? என்பதை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ளும் வகையில், முன்கூட்டியே மத்திய அரசு பரப்புரை செய்திருக்க வேண்டும்.

இந்தச் சட்டத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்திய பின் கொண்டு வந்திருந்தால் எதிா்ப்புகள் இந்த அளவில் வந்திருக்காது. இது நாட்டில் குறிப்பிட்ட மக்களைப் பாதிக்கும் என்ற அச்சத்தாலேயே பெரிய அளவில் போராட்டம் நடக்கிறது.

இந்தச் சட்டம் இந்திய குடிமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நான் கருதவில்லை. வெளியிலிருந்து வந்தவா்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடா்பாகத்தான் இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால், அதில், சாதாரண மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை நிவா்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. மேலும் இந்தச் சட்டம் இந்திய குடிமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே எனது கருத்து.

ஆனால், இதுகுறித்து இன்னும் பெரிய அளவில் மத்திய அரசு விவாதம் நடத்திட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக