புதன், 22 ஜனவரி, 2020

ரஜினியை கண்டு திமுக வேண்டுமானால் பயப்படலாம், ஆனால் அதிமுக பயப்படாது - அமைச்சர் ஜெயக்குமார்


சென்னை ராயபுரத்தில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர். “நடைபெறாத விஷயத்தை கூறி ரஜினி ஏன் மக்களை திசை திருப்ப வேண்டும் என தெரியவில்லை. அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய நான்கு தலைவர்களுக்கு எந்த இழுக்கு ஏற்பட்டாலும் அதனை நாங்கள் கண்டித்து குரல் கொடுப்போம். 

ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்பதுதான் அதிமுகவின் கொள்கை. 1971-ல் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என்பதை துக்ளக்கின் சோவே கூறியுள்ளார். தேவையில்லாததை பேசுவதற்கு பதிலாக ரஜினி வாயை மூடி மவுனமாக இருக்க வேண்டும், ரஜினியை கண்டு திமுக வேண்டுமானால் பயப்படலாம், ஆனால் அதிமுக பயப்படாது.

பழைய நிகழ்வுகளை பற்றி  பேசுவதால் ரஜி னிக்கு என்ன பிஎச்.டி. பட்டமா கொடுக்கப் போகிறார்கள்? இது மறுக்க வேண்டிய சம்பவமல்ல,  மறக்க வேண்டிய சம்பவம் எனக்கூறி மீண்டும் அதை ஞாபகப்படுத்தி உள்ளார்.

அனைவரும் மதிக்கும் பெரியார் குறித்து ரஜினி பேசியது கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக