புதன், 22 ஜனவரி, 2020

பெரியார் மீது செருப்பு வீசியதற்காக மன்னிப்புக் கேட்கிறேன் என்று சோ நீதிமன்றத்திலேயே தெரிவித்தார்.

"பெரியார் மீது செருப்பு வீசியதற்காக மன்னிப்புக் கேட்கிறேன்" என்று சோ நீதிமன்றத்திலேயே தெரிவித்தார். - வழக்கறிஞர் எஸ்.துரைசாமி

1971-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பேரணி தொடர்பாக, ராமர் அவமதிக்கப்பட்டதாக சோ ராமசாமி தனது துக்ளக் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டார்  சேலம் நீதிமன்றத்தில் பெரியார் மீது ஜனசங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. 


அந்த வழக்கில் பெரியாருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி,  அளித்துள்ள பேட்டியில், “பெரியார் மீது தொடரப்பட்ட வழக்கில் துக்ளக் சோ-வை சாட்சியாக விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் போது காலை 11 முதல் 2 மணி வரையும், மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரைக்கும் சோ-வை தான் குறுக்கு விசாரணை செய்ததாகவும், இதுதொடர்பான விவரங்கள் அனைத்தும் நீதிமன்ற ஆவணத்தில் உள்ளதாகவும் கூறினார்.

அப்போது சோ, எனக்கு சொல்லப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டுதான் துக்ளக் பத்திரிகையில் எழுதினேன். மற்றபடி நேரடியாக அந்த நிகழ்வு பற்றி தனக்குத் தெரியாது என்றும் பெரியார் மீது செருப்பு வீசியதற்காக மன்னிப்புக் கேட்கிறேன் என்றும் நீதிமன்றத்திலேயே தெரிவித்தார்.

பின்னர் இதுதொடர்பான விசாரணை முடிந்தபிறகு நீதிபதிகள், பெரியார் மீது தொடரப்பட்ட வழக்கில் ஆதாரம் எதுவும் இல்லை. பேரணியில் உருவப்படம்தான் கொண்டு வந்தார்கள். முன்பகை காரணமாக ராமர் உருவப் படத்தின் மீது செருப்பை வீசவில்லை. அதனால் இதைக் குற்றமாக கருத முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்” எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக