சனி, 25 ஜனவரி, 2020

பொருளாதார மந்தநிலையும், வேலைவாய்ப்பின்மையும் மோசமான சூழலை உருவாக்கியுள்ளது.


இந்திய பொருளாதாரம் 60 ஆண்டுகளுக்கு பின்னால் சென்று விட்டது. மத்திய அரசு அது குறித்து எதையுமே பொருட்படுத்தாமல் இருப்பது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கவலை 


காய்கறி விலையில் ஏற்பட்ட 60 சதவீத விலை உயர்வு. உருளைக் கிழங்கின் விலையும் 45 சதவீதம் உயர்ந்தது. அதேபோல பருப்பு வகைகள் மற்றும் தானியங்களும் குறிப்பிடத் தகுந்த விலை ஏற்றத்தை கண்டிருந்தன.

பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும்போது, இது தேவையில்லாத சிக்கல் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் அரசும் ஆதரவாளர்களும் இந்தியாவின் பொருளாதாரம் 4 சதவீதத்திற்கும் மேல் வளர்ந்து கொண்டிருப்பதாக பொய்யான தகவலை தொடர்ந்து கூறுகின்றனர்

சில்லறை பணவீக்கம் சமீபத்தில் 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறியுள்ளது. இது ஜூலை 2014ஆம் ஆண்டில் உயர்ந் ததைவிட அதிகமானது. இதுவே கடந்த நவம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 5.54 சதவீதமாக இருந்தது.

வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த, அடுத்த மாதம் நடைபெற உள்ள ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள் கைக்கூட்டத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்தும். விலையை கட்டுக்குள் வைக்க சில்லறை பணவீக்க இலக்கை 2-6 சதவீதமாக தேசிய வங்கி வைத்து உள்ளது. 2016 இல் பணவியல் கொள்கை கமிட்டி உருவாக்கப்பட்டதில் இருந்து இந்த இலக்கை தாண்டியதில்லை.

வட்டி விகிதங்கள் குறைக்கப்படவில்லை என்றால், கடன்களை மிக அதிக வட்டிக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் நுகர்வோரிடம் கையிருப்பு இல்லாத நிலை ஏற்படும். இந்தியாவில் இருக்கும் வேலைவாய்ப்பின்மையும், பொருளாதார மந்தநிலையும் பணவீக்கத்தோடு இணைந்து மிகவும் மோசமான சூழலை உருவாக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக