ஞாயிறு, 12 ஜனவரி, 2020

சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் அன்பழகன் கைது! - SDPI கட்சி கண்டனம்


சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர்  தோழர் அன்பழகன் கைது! - எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சென்னையில் தற்போது தொடங்கியிருக்கும் புத்தகக் கண்காட்சியில், சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரான தோழர் அன்பழகன் அவர்களின் மக்கள் செய்தி மையத்திற்கு அரங்கு ஒதுக்கப்பட்ட நிலையில்,  மக்கள் செய்தி மையத்தின் புத்தகங்கள் ஆள்வோர்க்கு எதிராக இருப்பதாக கூறி, கண்காட்சி துவங்கிய இரண்டாம் நாளில் அரங்கினை காலி செய்ய நோட்டீஸ் அளித்ததோடு, இன்று காலை தோழர் அன்பழகன் காவல்துறையால் கைதும் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டிக்கிறது.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது ஜனநாயகத்தில் மிக அவசியமான ஒன்றாகும். பத்திரிகை மற்றும் புத்தகங்கள் என்பது கருத்துச் சுதந்திரத்தின் வெளிப்பாடு எனும்போது, ஆள்வோரின் நடவடிக்கைகள், ஊழல் முறைகேடுகள் குறித்து எழுப்பப்படும் கருத்துக்களை மட்டுப்படுத்துவது அல்லது அதற்கு தடை விதிப்பது என்பது அடிப்படை சுதந்திரத்திற்கே எதிரானது. 

ஆகவே, தோழர் அன்பழகன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக