திங்கள், 27 ஜனவரி, 2020

காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள உமர் அப்துல்லா புகைப்படம் வருத்தமளிக்கிறது. - மு.க.ஸ்டாலின்


மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி நீக்கியது. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கபட்பட்டுள்ளளனர். 


தொடர்ந்து 6 மாதமாக வீட்டிக்காவலில் இருக்கும் நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம் வெளியானது. அந்தப் புகைப்படத்தில் அடையாளம் காண முடியாத வகையில் நீண்ட வெள்ளை தாடியுடன் உமர் அப்துல்லா இருக்கிறார்.  உமர் அப்துல்லா குறித்து எந்த தகவலும் கிடைக்காக நிலையில் இப்படி ஒரு புகைப்படம் வெளியாகியிருப்பது அரசியல் கட்சி தலைவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட தாடியுடன் உள்ள உமர் அப்துல்லா புகைப்படத்தை பகிர்ந்து, காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள உமர் அப்துல்லா புகைப்படம் வருத்தமளிக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும், ஃபாரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்களின் நிலையை எண்ணி சமஅளவில் அக்கறைப்படுவதாகவும் மற்றும் உரிய விசாரணை இன்று அடைக்கப்பட்டுள்ள மற்ற காஷ்மீர் தலைவர்கள் எண்ணி வருவத்தப்படுவதாகவும் தெரிவிள்ளார்.

மேலும், மத்திய அரசு உடனடியாக காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள அனைத்து அரசியல் தலைவரைகளையும் விடுவித்து பள்ளத்தாக்கில் இயல்புநிலையை மீட்டெடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக