ஜெயக்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயக்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 ஜனவரி, 2020

ரஜினியை கண்டு திமுக வேண்டுமானால் பயப்படலாம், ஆனால் அதிமுக பயப்படாது - அமைச்சர் ஜெயக்குமார்


சென்னை ராயபுரத்தில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர். “நடைபெறாத விஷயத்தை கூறி ரஜினி ஏன் மக்களை திசை திருப்ப வேண்டும் என தெரியவில்லை. அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய நான்கு தலைவர்களுக்கு எந்த இழுக்கு ஏற்பட்டாலும் அதனை நாங்கள் கண்டித்து குரல் கொடுப்போம். 

ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்பதுதான் அதிமுகவின் கொள்கை. 1971-ல் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என்பதை துக்ளக்கின் சோவே கூறியுள்ளார். தேவையில்லாததை பேசுவதற்கு பதிலாக ரஜினி வாயை மூடி மவுனமாக இருக்க வேண்டும், ரஜினியை கண்டு திமுக வேண்டுமானால் பயப்படலாம், ஆனால் அதிமுக பயப்படாது.

பழைய நிகழ்வுகளை பற்றி  பேசுவதால் ரஜி னிக்கு என்ன பிஎச்.டி. பட்டமா கொடுக்கப் போகிறார்கள்? இது மறுக்க வேண்டிய சம்பவமல்ல,  மறக்க வேண்டிய சம்பவம் எனக்கூறி மீண்டும் அதை ஞாபகப்படுத்தி உள்ளார்.

அனைவரும் மதிக்கும் பெரியார் குறித்து ரஜினி பேசியது கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.

புதன், 8 ஜனவரி, 2020

இளைஞர்கள் அரசுப் பணிக்கு ஆசைப்பட கூடாது - அமைச்சர் ஜெயக்குமார்


சட்டமன்றத்தில் இன்று (ஜனவரி 8) கேள்வி நேரத்தின்போது  காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எழுந்து வேண்டுகோள் 
விடுத்தார்.

முருகுமாறன் MLA : வீராணம் ஏரியில் பல்வேறு வகையான மீன் வகைகளை  வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் ஜெயக்குமார் : கட்லா, ரோகு, ஜெயந்தி ரோகு, கெண்டை உள்ளிட்ட மீன்குஞ்சுகள் இருப்பு வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியில் நவீன ரக மீன் வகைகளை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும் பேசிய அமைச்சர் இளைஞர்கள் பலரும் அரசுப் பணிக்கு முயன்று வருகின்றனர். அவர்கள் அரசுப் பணிக்கு ஆசைப்படாமல் தொழில்முனைவோர் ஆக முயற்சி செய்ய வேண்டும். மீன் வளர்ப்புத் தொழிலுக்கு அரசு மானியம் வழங்கத் தயாராக உள்ளது. ஒரு ஹெக்டரில் மீன் வளர்ப்பு செய்தால் 10 மாதத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம். மீன் அதிகம் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக், கண் பார்வை கோளாறு, கேன்சர் உள்ளிட்ட எந்தப் பிரச்சினையும் நம்மை அண்டாது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.