வியாழன், 2 ஜனவரி, 2020

எச்.ராஜா உடனே மன்னிப்பு கேட்கவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

”திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் திரு. எச்.ராஜா உடனே மன்னிப்பு கேட்கவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”

-  திரு. இள.புகழேந்தி Ex.M.L.A., 
(திமுக தேர்தல் பணிக்குழுச்செயலாளர்)
அனுப்புநர்

இள.புகழேந்தி, M.A.B.L
வழக்கறிஞர்,
12/8. கான்வென்ட் தெரு,
புதுப்பாளையம்,
கடலூர் - 607 001.

பெறுநர்

(1) எச். ராஜா,
த/பெ. ஹரிஹரன்,
பா.ஜ.க. தேசிய செயலாளர்,
9. வடக்கு சுப்பிரமணியம் விரிவாக்கம்,
காரைக்குடி - 630 001.

(2) பதிப்பு ஆசிரியர்,
'தினமலர்' நாளிதழ் (சென்னை பதிப்பு)
39. ஒயிட் ரோடு,
சென்னை - 600 014.

வணக்கம்,

அய்யா ,

எனது கட்சிக்காரர்களால் தரப்பட்ட தினமலர் நாளிதழ் செய்தி பார்த்து
கொடுக்கப்படும் சட்டப்படியான அறிக்கை அறிவிப்பு:


(1) நான் கடலூரில் வழக்குரைஞராக இருக்கிறேன். திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் பணிக்குழு செயலாளராக இயக்கப்பணியாற்றி வருகிறேன்.

(2) 26-12-2019 இன்று கடலூர் நகர கழக நிர்வாகிகள் ஏராளமானதொ ண்டர்களுடன் என்னை சந்தித்து 25-12-2019 புதன்கிழமை அன்று வெளிவந்த தினமலர் (சென்னைப் பதிப்பு) நாளிதழை தந்து அதில் வந்த 1-ஆம் நபரின் பேட்டியைக் காட்டினார். 2-ம் நபரின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டதாக அறிகிறேன்.பொதுமக்கள் பார்வைக்கு அந்த பேட்டியை பாஜக-வின் தேசிய நிர்வாகிகளில் ஒருவரான திரு. H.ராஜாவின் வரைப்படத்துடன் பெரியதாக வெளியிடப்பட்டுள்ளதைப் பார்த்தேன். அந்தப் பேட்டியில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து அவர் கூறுவதற்காக தேவையில்லாமல் திமுக-வின் கண்ணியமிக்க தலைவர் மாண்பு நிறைந்த மு.க.ஸ்டாலின் அவர்களை பற்றியும் நாட்டில் தலைசிறந்த நீதிமான்களாக விளங்கிடும் அனைவரும் ஏற்றுக்கொண்ட கற்றறிந்த வழக்கறிஞர்களும் மிகவும் இழிவாக அவமரியாதையாக குறிப்பிட்டுள்ளார் அவரின் பேட்டியில் நாட்டின் சட்டப்பூர்வமான குடிமகன், குடியுரிமையை இழக்க சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது மாட்டான் அறிவிலிகள், இந்த சட்ட என்கின்றனர்”. என்றும், பேட்டியின் தொடர்ச்சியில் மத வெறியை தூண்டிய கலவரம் செய்ய என்றுள்ளதும் நினைப்பதால் எனக்கும் நாளிதழை கொண்டு வந்த தோழர்களுக்கும் மிகுந்த வேதனையை தந்தது மனஉளைச்சலால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளேன். முதல் நபர் பேட்டியின் தரக்குறைவான
வார்த்தைகளால் எங்கள், ஆற்றல் மிக்க தமிழர்களின் மதிப்பிற்குரிய, நாட்டினரின் மரியாதைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் மாண்புநிறை மு.க.ஸ்டாலின் அவர்களின் நற்பெயரை சீரழிக்க நினைத்துள்ளது வெளிப்படையாக தெரிகிறது. அதைப் போலவே அறிவில் முதிர்ந்தவர்களையும் மூத்த வழக்கறிஞர்களும் அறிவிலிகள் என்ற வார்த்தையால் அவமதித்தல்
மட்டுமல்ல அவதூறும் செய்துள்ளார்.

முதல் நபர் பொதுமக்களிடம் மிகவும் மோசமாக எங்கள் தலைவரும், கற்றறிந்த சட்ட வல்லுநர்கள் பற்றி தவறான தகவல்களை அளித்து அவர்களின் பார்வையில் நன்மதிப்பைக் குலைக்கும்படி பேட்டி அளித்துள்ளார். அந்த அவதூறு பேட்டியை 2-ஆம் நபர் பெரியதாக பிரசுரித்துள்ளார். இந்த செயல்கள் எனக்கும் என் கட்சிக்காரர்களுக்கும் மிகவும் மன வேதனையைஅளித்துள்ளன. நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.

எனவே,நீங்கள் இருவரும் தலைவர் மு.க.ஸ்டாலினிடம், கற்றறிந்த
வழக்கறிஞர்களிடம், கட்சிக்காரர்கள்,மற்றும் பொதுமக்களிடமும் தவறுக்கு
வருந்தும் விதமாக இந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்டு தினமலர் நாளிதழிலேயே செய்தியாக வெளியீடு மாறும், தவறினால் சட்டப்படி எங்கள் சார்பாய் சிவில் குற்றவியல் வழக்குகள் உங்கள் இருவர் மீதும் போடப்பட நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கு செலவுகளுக்கு தாங்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக