எச்.ராஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எச்.ராஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 ஜூலை, 2020

தமிழக பாஜக சார்பில் சென்னை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டும் அந்த கும்பலை தமிழக அரசு கைது செய்யாதது துரதிருஷ்ட வசமானது. - எச்.ராஜா


கருப்பர் கூட்டம் என்கிற இந்து விரோத கூட்டம் கந்த சஷ்டி கவசத்தையும் முருகப்பெருமானையும் ஆபாசமாகப் பேசி விடியோ வெளியிட்டதை கண்டித்தும் அந்த அயோக்கியன்கள் கூட்டத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தி 16.7.20 அன்று காலை 10 மணிக்கு இந்துக்கள் அனைவரும் தங்கள் வீட்டு வாசலில் தர்ணா போராட்டம் நடத்திட பாஜக அழைக்கப்படுகிறது. 

வெள்ளி, 10 ஜூலை, 2020

உண்மையிலேயே நியூஸ் 18 மட்டுமல்ல ஒட்டுமொத்த ஊடகங்களையும் தூர்வார வேண்டும். - எச்.ராஜா


நியூஸ் 18 குறித்து நண்பர் மாரிதாஸ் அவர்களின் விடியோ வந்த பிறகு பல விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெறுகின்றன. தமிழக ஊடகங்களை மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் தான் கட்டுப்படுத்துகிறது. எனவே இதற்கான மாற்று தேவை என்பதை உணர்ந்து தான் தேசிய ஊடகவியலாளர்கள் சங்கம் துவங்கப்பட்டது. அதை துவங்கி வைத்து பேசும் போதே இதை நான் குறிப்பிட்டேன்.

         ஆனால் இதற்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். தங்கள் கருத்திற்கு மாற்றுக் கருத்து விவாதிக்கப்படக் கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக உள்ளனர். எனவே தமிழக ஊடகங்கள் Independent media அல்ல. இவைகள் ஒரு guided media. 

வெள்ளி, 26 ஜூன், 2020

சாத்தான்குளத்தில் போலீஸ் கஸ்டடியில் நடந்த இறப்பு ( custodial death) வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை வாய்ப்பாகப் பயன் படுத்தி நாட்டை சில தீய சக்திகள் கலவர பூமியாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது. - எச்.ராஜா


சாத்தான்குளத்தில் போலீஸ் கஸ்டடியில் நடந்த இறப்பு ( custodial death) வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு உடனடியாக 4 காவலரையும் சஸ்பென்ட் செய்துள்ளது. இதற்கான மேஜிஸ்திரேட் நீதி விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஒரு காவல் நிலையத்தில் 4 பேர் செய்த குற்றத்திற்கு காவல்துறை முழுவதையும் கண்டனத்திற்கு உள்ளாக்குவது முறையல்ல. சீனக் கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் காவல்துறை அரும் பணியாற்றி வருகிறது. இந்த நேரத்தில் காவல்துறைக்கு எதிரான எந்தவித போராட்டமும் வெகுஜன விரோத போராட்டமாகவே கருதப்படும். காவலர் வில்சன் படுகொலையை கண்டித்து போராடாது வர்த்தக சங்கங்கள் இன்று போராடுவது ஏன்? இந்த வர்த்தக சங்கங்களை இயக்கும் தீய சக்திகள் எவை என்பது குறித்து உளவுத்துறை எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்.

திங்கள், 8 ஜூன், 2020

நடிகர் சிவக்குமார் மற்றும் 7 பேர் மீது திருமலை தேவஸ்தானம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை. - எச்.ராஜா


திருப்பதி ஏழுமலையான் கோவிலைப் பற்றி தவறாகப் பேசிய நடிகர் சிவக்குமார் மற்றும் 7 பேர் மீது திருமலை தேவஸ்தானம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை.

          ஆனால் இந்து கோவில்கள் குறித்து குறிப்பாக தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சியம்மன் குறித்து தவறாகப் பேசியுள்ள நாத்திக வீரமணி, நடிகர் சிவக்குமார், ஜோதிகா, ப.ரஞ்சித், கௌதமன், விஜய் சேதுபதி ஆகியோர் மீது இந்து கோவில்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அறநிலையத்துறை இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏன்?

              தமிழகத்தில் உள்ளது இந்து சமய அறநிலையத் துறை அல்ல. இது இந்து விரோத ஊழல் சக்திகளால் நிரப்பப் பட்டுள்ளது என்று நான் பலமுறை கூறியுள்ளேன். ஆகவே தான் அத்துறை திருப்பதி தேவஸ்தானம் போல் நம் கோவில்களின் மீது நாத்திக, மதம் மாறிய தீய சக்திகளின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

         தொடர்ந்து இவர்கள் மாமன்னன் இராஜராஜனையும் தஞ்சை பெரிய கோயிலையும் குறிவைத்து தாக்குவதன் நோக்கம் என்ன? ஏன்?

           வீரமணி மாமன்னன் இராஜராஜனை முட்டாள் ராஜா, வெங்காயம் என்றெல்லாம் ஏசினார். 

வியாழன், 2 ஜனவரி, 2020

எச்.ராஜா உடனே மன்னிப்பு கேட்கவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

”திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் திரு. எச்.ராஜா உடனே மன்னிப்பு கேட்கவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”

-  திரு. இள.புகழேந்தி Ex.M.L.A., 
(திமுக தேர்தல் பணிக்குழுச்செயலாளர்)
அனுப்புநர்

இள.புகழேந்தி, M.A.B.L
வழக்கறிஞர்,
12/8. கான்வென்ட் தெரு,
புதுப்பாளையம்,
கடலூர் - 607 001.

பெறுநர்

(1) எச். ராஜா,
த/பெ. ஹரிஹரன்,
பா.ஜ.க. தேசிய செயலாளர்,
9. வடக்கு சுப்பிரமணியம் விரிவாக்கம்,
காரைக்குடி - 630 001.

(2) பதிப்பு ஆசிரியர்,
'தினமலர்' நாளிதழ் (சென்னை பதிப்பு)
39. ஒயிட் ரோடு,
சென்னை - 600 014.

வணக்கம்,

அய்யா ,

எனது கட்சிக்காரர்களால் தரப்பட்ட தினமலர் நாளிதழ் செய்தி பார்த்து
கொடுக்கப்படும் சட்டப்படியான அறிக்கை அறிவிப்பு:

சனி, 18 மே, 2019

தனிமனித ஒழுக்கம் இல்லாத நபர் கமல் - எச்.ராஜா

தனிமனித ஒழுக்கம் இல்லாத நபர் பொதுமக்களுக்கு தேசத்திற்கு நேர்மையாக இருக்க முடியாது  என்று நான் சொன்னால் என்ன தப்பு
எச்.ராஜா


இன்று வரை இந்த விஷயங்கள் நமக்கு ஏற்கனவே தெரிந்திருந்தும் நாம் பொருட்படுத்தியதில்லை. மதம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமென விட்டு விட்டோம். ஆனால் திருப்பரங்குன்றம் தோப்பூரில் பேசும் போது என் குடும்பம் இந்து குடும்பம் என்று கூறியுள்ளார். இது இந்து தீவிரவாதம் என்று பேசியதன் தாக்கத்தை குறைக்கக் கூறிய பொய்.


இவரது சகோதரரின் charuhasan's testimony on Jesus YouTube ல் பார்க்கவும். அதோடு 2017 ல அமெரிக்காவில் இவரது சகோதரரின் இறுதிச் சடங்கு கிறித்துவ முறைப்படி நடந்ததில் இவரது பேச்சு. இவைகள் இவர் குடும்பம் இந்துக் குடும்பம் என்றது வடிகட்டிய பொய். 
மீண்டும் சொல்கிறேன் இவர் தோப்பூரில் தன் குடும்பம் இந்து குடும்பம் என்று பொய் பேசியதால்தான் உண்மையை பொதுவில் கூறவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அரவக்குறிச்சியில் பணக்கார முஸ்லிம் பெண்கள் மாலை 6 மணிக்குமேல் shopping வருவார்கள் என்று மாலையில் இந்து ஆண்கள் கடைத்தெருவில் நடமாடக்கூடாது என்ற ஜமாஅத் உத்தரவை எதிர்த்து 1999ல் அரவக்குறிச்சியில் போராட்டம் நடத்தியவன் நான். ஆனால் ஓட்டுக்காக அங்கு சென்றுள்ள கமலுக்கு அது எப்படி தெரியும்.

முஸ்லிம் என்ற அடையாளம் வேண்டாம் கிறித்தவர் என்ற அடையாளம் வேண்டாம் என்பாரா ? அவர்களுக்கு மட்டும் இந்தியர் என்ற அடையாளம் போதாதா? ஓ இவர் அழிக்க நினைப்பது இந்து அடையாளத்தை தான் என்பது தெளிவு.

தன்னை கைது செய்தால் பதற்றம் உருவாகும் என்று மிரட்டும் தீவிரவாதி கமலே கீழே உள்ளது நவகாளியில் உங்கள் கூட்டாளிகளால் கொல்லப்பட்ட இந்துக்களின் மிச்சம் மீதி கண்டு மகிழுங்கள்.


இவர் கலவரத்தை தூண்டும் நோக்குடன் பேசியுள்ளார். மேலும் மத உணர்வைத் தூண்டி வாக்கு சேகரிக்க முயற்சி என்பது தெளிவு. ட்விட்டரில் எச்.ராஜா பதில்!

நீங்கள் வடமாநிலத்தை சார்ந்தவரா என கேட்கப்பட்ட கேள்விக்கு ட்விட்டரில் எச்.ராஜா பதில்!

நீங்கள் வடமாநிலத்தை சார்ந்தவரா என கேட்கப்பட்ட கேள்விக்கு ட்விட்டரில் எச்.ராஜா பதில்!


எற்கனவே பலமுறை கூறியுள்ளேன்.எனக்கு தஞ்சை அகரமாங்குடி பூர்வீகம்.பக்கத்து ஊர் மெலட்டூரில் பிறந்தவன். கோவத்தகுடி தெண்ணாயிர ஐயனார் என் குலதெய்வம்.என் பாட்டனார் பெயர் சிவ சிதம்பரம் அவரது தந்தை பெயர் விருத்தாஜலேஸ்வரர் இப்பெயர்கள் வெளிமாநிலத்தில் உண்டா.பல முட்டாள்கள் பொய் பரப்புகின்றனர்.
நான் 45 நாட்கள் குழந்தையாக இருந்த போது என் தகப்பனார் காரைக்குடி அழகப்பா உடற்பயிற்சி கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தார். எனவே அன்றைய தினம் முதல் காரைக்குடி வாசி. ஆரம்பக்கல்வி முதல் ஆடிட்டர் வரை படித்ததும் ஆடிட்டர் தொழில் அரசியல் பணி அனைத்தும் சிவகங்கைமாவட்டத்தில் தான் என கேட்கப்பட்ட கேள்விக்கு ட்விட்டரில் எச்.ராஜா பதில்!