ஞாயிறு, 5 ஜனவரி, 2020

தர்பார் திரைபடத்திற்குத் தொடரும் சிக்கல்


லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் தர்பார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கான சென்சார் பணிகள், புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும்  இந்நிலையில், திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தீனா தலைமையில் ரஜினி, அனிருத்துக்கு எதிராக திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

தர்பார் படத்திற்கு 450க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இதில் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தில் இருந்து 5 பேருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. சங்கத்தில் இருக்கும் இசை கலைஞர்களுக்கு பேட்ட படத்தை தொடர்ந்து தர்பார் படத்திலும் வாய்ப்பு தராததால் அனிருத்துக்கு இசையமைப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் தர்பார் படத்திற்குத் தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மலேசியாவைச் சேர்ந்த டிஎம்ஒய் கிரியேஷன்ஸ் என்னும் நிறுவனம் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.  லைகா நிறுவனம் 23 கோடியே 70 லட்ச ரூபாயைத் எங்களுக்கு திருப்பி அளிக்க வேண்டியுள்ளது. ஆகவே, அந்தக் கடன் தொகையைத் திருப்பி தரும் வரை தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது. 

லைகா நிறுவனம் தங்கள் தரப்பு பதில் மனுவைத் தாக்கல் செய்தது.  கடனுக்குப் பதிலாக காலா படத்தின் சிங்கப்பூர் வெளியீட்டு உரிமையை மலேசிய நிறுவனத்திற்கு அளித்திருந்தோம். என தெரிவிக்கபட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக