புதன், 1 ஜனவரி, 2020

நல்வழியை ஏற்படுத்திக்கொடுக்கும் ஆண்டாக அமைய வேண்டும்.- ஜி.கே.வாசன்

தமிழ் மக்கள் உள்ளிட்ட இந்திய திருநாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்வழியை ஏற்படுத்திக்கொடுக்கும் ஆண்டாக அமைய வேண்டும்.- ஜி.கே.வாசன்


இந்திய நாட்டின் கலாச்சாரமான வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்பதை நிலைநாட்ட வேண்டும் அதை பேணிக்காக்க வேண்டும் என்பது நமது தலையாய கடமையாகும்.


மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி தொடர, நாட்டின் பொருளாதாரம் பெருக, நாட்டின் பாதுகாப்பு வலுப்பெற இப்புத்தாண்டு துணை நிற்க வேண்டும்.

உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்குகின்ற இந்திய நாட்டின் அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் நம் நாட்டின் வளர்ச்சிக்கு மேலும் சிறப்பாக செயல்பட இப்புத்தாண்டு புதுப்பொலிவை ஏற்படுத்தும் ஆண்டாக அமைய வேண்டும்.

மேலும் பெரும்பான்மை மக்களும், சிறுபான்மை மக்களும் சகோதர சகோதரிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற வேளையில் இப்புத்தாண்டு சிறுபான்மை மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தை, அச்சத்தை போக்கும் ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஏழை, எளிய, நடுத்தர மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்து அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் இப்புத்தாண்டு மலர வேண்டும்.

தமிழகத்தில் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மேம்படவும், வேலை வாய்ப்புகள் பெருகவும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறவும், நீண்டகால பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு ஏற்படவும் இப்புத்தாண்டு வழி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

மொத்ததில் உலக நாடுகளின் ஒற்றுமைக்கும், தீயவை அழிந்து, நல்லவை நீடிப்பதற்கும், ஏழ்மை நீங்கிடவும், பசி, பட்டினியிலிருந்து விடுபடவும், அனைத்து தரப்பு மக்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படவும், வளமான தமிழகம் வலிமையான பாரதம் உருவாகவும் 2020 ஆம் புத்தாண்டு புத்தொளியுடன் பிறக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி த.மா.கா சார்பில் தமிழக மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக