திங்கள், 26 ஆகஸ்ட், 2019

ஐ.நா கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா ?

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா கூட்டத்தில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


ஜெனீவாவில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்த கூட்டத்தில் உலக நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்படும். 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அழைக்கப்பட்டு உள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் திமுகவிடம் வெளியாகவில்லை.

மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டால், ஈழத் தமிழர்கள் பிரச்சனை குறித்தும்,   காஷ்மீரில் தற்போதைய நிலை குறித்தும்,   மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சனை குறித்து மு.க.ஸ்டாலின் விவாதிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக