வியாழன், 1 ஆகஸ்ட், 2019

கவின், லாஸ்லியா, சாக்‌ஷியை காதல் படுத்தும் பாடு ? - ஒரு ஷைக்காலஜி ரிப்போர்ட்

கவின், லாஸ்லியா, சாக்‌ஷியை காதல் படுத்தும் பாடு ?
ஒரு ஷைக்காலஜி ரிப்போர்ட்


ஒரு ஆண் என்னை ஒரு வாரமாக தினமும் பின் தொடர்கிறான் .


பஸ்ஸில் ஒரு ஆண் என்னை தினமும் பின் தொடர்கிறான். அவன் முகம் என் மனதில் அப்படியே ஒட்டிக்கொண்டுவிட்டது. கல்லூரி தேர்வு நேரம் இது. படிப்பதற்காகப் புத்தகங்களைத் திறந்தால், அந்தப் அவனின் முகமே வந்துவந்து என்னைத் தொந்தரவு செய்கிறது. அவன் முகம் தரும் சந்தோஷம் ஒருபுறம், அவன் என்னை பின் தொடர்வதால் வரும் கோபம் மறுபுறம். இரண்டும் சேர்ந்து வறுத்தெடுக்கின்றன. நான் அவனை காதலிக்கிறேனா ? 

ஒரு வாரத்தில் யாரோ ஒருத்தன் நினைவு பெண்னின் மனதிற்கு சந்தோஷம் தர முடியும். துக்கத்தை தர முடியும். என்றால் சாக்‌ஷியும், லாஸ்லியாவும் அப்படி தான் கவினால் பாதித்து உள்ளனர். காதல் எப்போதும் உங்களுக்குள்தான் இருக்கிறது. அதைத்  தூண்டி உயிர்ப்பிக்கும் சக்தியை வெளியில் ஆணின் கையிலோ ஒப்படைத்துவிட்டீர்கள். அதனால், அவனின் செயல் உங்களை சந்தோஷம் அல்லது காயப்படுத்தும்.

ஒரு ஆணின் நினைவை பெண்களின் மனதிலிருந்து போராடிப் பிய்த்து எறிவது என்பது நடவாத காரியம். அப்படி முயற்சி செய்ய ஆரம்பித்தீர்கள் என்றால், அதுவே உங்கள் முழுநேர வேலையாக ஆகிவிடும்.


சாக்‌ஷியின்  நிலைமை இப்ப அப்படி தான் இருக்கும். கவினுடன் பேசும் போதும், காதலாக உறவாடும் போதும், கோபமாக பேசும் போதும். தான் மனம் போன பொக்கில் நடந்து வருகிறார். சாக்‌ஷி இவ்வாறு நடந்து கொள்வதை கவினும் அறிந்து வைத்துள்ளார். அதனால் தான் அவரிடம் வெளிப்படையாகவே விலகுவது போல இருந்து வருகிறார் கவின். இதை உணர்ந்து கொண்டே சாக்‌ஷி, தற்போது லாஸ்லியா பக்கம் திரும்பியுள்ளார்.

கவின் தன்னை புறக்கணிக்க லாஸ்லியா தான் காரணம் என்று சாக்‌ஷி  நினைகிறார். கவின் மற்றும் லாஸ்லியா பேசும் போது சாக்‌ஷி  தன்னை அறியாமல் கோபம், வருத்தம் அடைகிறார். பின்பு கவினுடன் சமாதானம் அடைந்தாலும் அதனை தக்க வைத்து கொள்ள முடியவில்லை.



காதலிக்கும் ஆண்களுக்கு தெரியும். தன் காதலி காலையில் “ நீ தான் எனக்கு எல்லாம் “ என்பார்கள் ஆனால் மாலையில் “ நீ எனக்கு எதுவும் இல்லை ” என்னிடம் பேசதே என்பார்கள், மறுநாள் வந்து இரவு ஏன் பேசவில்லை என்பாள். இந்த உளவியல் ஏமாற்று தனத்தில். உடல் தொடர்பில் நடக்கும் அத்தனை வேதியல் மாற்றங்களும்  மூளையில் நடக்கும்  நாடகத்தில்  எந்தவிதமான விளக்கமும் கூற தேவையில்லை.

ALSO READ













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக