புதன், 31 ஜூலை, 2019

பிக்பாஸ் போடு ஆட்டம் போடு டாஸ்கில் நடந்த சுவையான சுவாரசியங்கள்

பிக்பாஸ் போடு ஆட்டம் போடு டாஸ்கில் நடந்த சுவையான சுவாரசியங்கள்



37வது நாள் துள்ளுவதோ இளமை என்ற எம்.ஜி.ஆர் பாடலுடன் இன்றைய நாள் துவங்கியது. இதை தொடர்ந்து  முகின் தான் மற்ற போட்டியாளர்களுக்கு ரேப் சாங் கற்றுக்கொடுத்தார். சாண்டி நச்சுனு ஒரு பாடலை பாடினார். பின்னர் அபிராமி காதலா நட்பா என்று  ரேப் சாங் பாடினார். இவருக்கு போட்டியாக ரேஷ்மா மற்ற போட்டியாளர்களைக் கொண்டு ரேப் சாங் பாடினார்.

இன்றைய நாளில் போட்டியாளர்களுக்கு ல்க்‌ஷூரி பட்ஜெட்டுக்கான போடு ஆட்டம் போடு என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.  இதன் விதிமுறைகளை மதுமிதா அனைவருக்கும் படித்து காட்டினார். 

இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்திற்கான உடைகளை அணிந்து கொண்டு, அவர்களுக்கு என்று போடப்படும் பாடலுக்கு நடனம் ஆட வேண்டும். பாடல் ஒலித்த 15 வினாடிக்குள் மேடை ஏறி ஆட வேண்டும்.  இல்லையேன்றால் ல்க்‌ஷூரி பட்ஜெட்டுக்கான பாய்ண்ட் குறைக்கப்படும்.

சேரன் – ரஜினிகாந்த் (ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்)
அபிராமி – பத்மினி (மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன)
சாண்டி – சிம்பு (தத்தை தத்தை தத்தை இவன் மன்மதன்)
சரவணன் – விஜயகாந்த் (கடைவீதி கலகலக்கும்)
கவின் – அஜித் (ஆலுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா),
முகென் – விஜய் (போக்கிரி பொங்கல்)
தர்ஷன் – கமல் (சகலகலா வல்லவன்)
லோஸ்லியா – திரிஷா (கட்டு கட்டு கீரை கட்டு)
ரேஷ்மா - ரம்யா கிருஷ்ணன் (வை ராஜா வை)
மதுமிதா - சரோஜா தேவி (ஒரு பெண்ணை பார்த்து நிலவை),
ஷெரின் - குஷ்பு (போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி)
சாக்‌ஷி - தமன்னா (தஞ்சாவூர் ஜில்லாக்காரி)

குரூப் டான்ஸ் (அனைவரும் மேடையின் பக்கத்தில் ஆட வேண்டும்) - ஊத்திக்கிண்ணு கடிச்சிக்கவா கடிச்சுக்கிட்டு ஊத்திக்கவாஎன்று பாடல் கொடுக்கப்பட்டது. 

முதலில் குரூப் டான்ஸ்க்கான (ஊத்திக்கிண்ணு கடிச்சிக்கவா கடிச்சுக்கிட்டு ஊத்திக்கவா) பாடல் ஒலித்தது. ஆனால், அபிராமியால்  வந்து ஆட முடியாததால் வார்னிங் கொடுக்கப்பட்டு மதிப்பெண்கள் குறைக்கப்பட்டது. 




  • இதனை தொடர்ந்து வேட்டி தூக்கி கட்டி கொண்டு கழிவறை சென்ற சரவணனின் விஜயகாந்த் கெட்டப்புக்கான (கடைவீதி கலகலக்கும் )என்ற பாடல் ஓலித்தது . இந்தப் பாடலுக்கு  சரவணன் விஜயகாந்த் போல ஆடினார்.





  • அடுத்தாக ரஜினியின் ராமன் ஆண்டாலும் என்ற பாடலுக்கு சேரன் அவரது ஸ்டைலில் ஆடினார். இதற்கு மற்ற போட்டியாளர்கள் உற்சாகம் கொடுத்ததோடு, அவருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர். 






  • 3வது தாக தல அஜித்தின் வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா என்ற பாடலுக்கு கவின் மங்காத்தா உடையில் நடனம் ஆடினார்.







 இதற்கிடையே விஜய் வேஷத்தில் இருந்த முகின் அவர்கள் அஜித்தாக இருக்கும் கவினுக்கு கையில் வாட்ச் ஒன்றை பரிசாக கட்டிவிட்டார்.





  • 4வது ஆக விஜய் – த்ரிஷா கூட்டணியில் வந்த கில்லி படத்தின் கட்டு கட்டு கீரை கட்டு என்ற பாடல் ஒலித்தது . இந்த பாடலுக்கு த்ரிஷாவாக இருந்த லாஸ்லியா சூப்பராக ஆடினார்.


  • 5வது தத்தை தத்தை தத்தை என்ற பாடல் ஒலித்தது. இந்த பாடலுக்கு சிம்புவாக இருந்த சாண்டி மாஸ்டர் மற்ற போட்டியாளர்களும் சூப்பராக ஆடினார்.


  • 6வது ஒரு பெண்ணை பார்த்து நிலவை என்ற பாடல் ஒலித்தது. சரோஜா தேவியாக உடை அணிந்திருந்த மதுமிதா அந்த காலகட்டத்திற்கு ஏற்ப சரோஜா தேவி போல டான்ஸ் ஆடினார். ஆனால் தாமதமாக வந்து ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடைசியில் இலங்கை மற்றும் மலேசியாவின் கலாச்சாரம், மக்கள், உணவு, திருவிழா, சினிமா பற்றி லோஸ்லியா மற்றும் முகின் ஆகியோர் பகிர்ந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக