செவ்வாய், 16 ஜூலை, 2019

வரலாறு 6 வது பாடக்குறிப்புகள்

வரலாறு 6 வது பாடக்குறிப்புகள்

  • வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது - எழுத்து ஆதாரங்கள் கிடைக்காத காலம்
  • ஆதிமனிதன் முதலில் பழக்கிய விலங்கு - நாய்
  • சிந்துவெளி நாகரிகம் பற்றி அறிய உதவுவது - அகழ்வாராய்ச்சி சான்றுகள்
  • மொகஞ்சதாரோ என்பதன் பொருள் - இடுகாட்டு மேடு
  • லோத்தல் என்னும் செம்பக் கற்காலத் துறைமுகம் காணப்படும் இடம் - குஜராத்
  • ஹரப்பா நாகரிகம் ஒரு - நகர நாகரிகம்
  • சிந்துவெளி மக்களுக்கு தெரிந்திராத உலோகம் - இரும்பு
  • ஹரப்பா என்றால் சிந்துமொழிச் சொல்லின் பொருள் - புதையுண்ட நகரம்
  • ஹரப்பா மக்களின் முக்கிய கடவுள் - பசுபதி
  • பெருங்குளம் அமைந்துள்ள இடம் - கோட்டை பகுதி
  • சிந்துவெளி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு - 1921
  • சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய எழுத்து முறை - சித்திர எழுத்து
  • டெர்ராகோட்டா என்பது - சுடுமண்பாண்டம் செய்வது
  • உலகிலேயே மிகத் தொன்மையான பகுதி - விந்தியமலைக்கு தெற்கிலுள்ள பகுதி
  • மனித இனம் முதன் முதலில் தோன்றியதாக கருதப்படும் இடம் எது? - லெமூரியா
  • இடைச்சங்கம் நடைபெற்ற இடம் - கபாட புரம்
  • ரிக் வேத காலம் - கி.மு1500-கி.மு1000
  • ரிக் வேதகாலத்தில் வாணிகத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க நாணய அலகு - நிஷ்கா
  • பின்வேத காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் ஒருவர் - கார்கி
  • கிராம மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவை எவ்வாறு அழைக்கப்பட்டது? - சமிதி 
  • சமண சமயத்துக்கு உறுதியான அமைப்பைத் தந்தவர் - வர்த்தமான மகாவீரர்
  • சமண சமயம் மிகவும் வலியுறுத்திய கொள்கை - கொல்லாமை
  • தமிழ்நாட்டில் சமணச் சிற்பங்கள் காணப்படும் இடங்களுள் ஒன்று - கழுகுமலை
  • புத்தர் அறிவுணர்வு பெற்ற இடம் கயா (போதிமரத்தடி)
  • பௌத்த மதத்தை பின்பற்றிய அரசர்களுள் முக்கியமானவர் - அசோகர்
  • வெற்றியாளர் (அ) ஜீனர் என்று அழைக்கப்பட்டவர் - மகாவீரர்
  • சமணம் வலியுறுத்திய போதனைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - மும்மணிகள்
  • கோமதீஸ்வரர் சிற்பம் அமைந்துள்ள இடம் - சரவணபெலகொலா
  • புத்தரின் போதனைகள் என்று அழைக்கப்படுகிறது? - நான்கு பேருண்மைகள்
  • பௌத்தத் துறவிகளின் அமைப்பு - சங்கம்
  • பாடலிபுத்திரம் என்னும் கோட்டையை அமைத்தவர் - அஜாதசத்ரு
  • மெகஸ்தனிஸ் எழுதிய நூல் - இண்டிகா
  • அசோகர் அரியணை ஏறிய ஆண்டு - கி.மு 273
  • மூன்றாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் - பாடலிபுத்திரம்
  • குஷான அரசை நிறுவியவர் - முதலாம் காட்பிஸஸ்
  • புத்தசரிதம் என்ற நூலை இயற்றியவர் - அசுவகோசர்
  • கனிஷ்கர் காலத்து மருத்துவ அறிஞர் - சரகர்
  • தானேஷ்வரத்தின் அரசர் - ஹர்சவர்த்தனர்
  • குப்தர்களின் காலம் இந்தியாவின் - பொற்காலம்
  • 8-18 - நூற்றாண்டகளுக்கு இடைப்பட்ட காலமே இடைக்காலம் எனப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக