புதன், 10 ஜூலை, 2019

சட்டமன்றத்தில் திமுக MLA கள் கோரிக்கைகள்

சட்டமன்றத்தில் திமுக MLA கள் கோரிக்கைகள்


திரு. தா.மோ.அன்பரசன் MLA :மாணவர்களின் மருத்துவ கனவை கலைக்கும் நீட் தேர்வு போல, 17 தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை கொண்டு ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்தும் 'நீம்' என்ற
சட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்க பாஜக அரசு முயற்சிக்கிறது.


திரு. பி.கே.சேகர்பாபு MLA :சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை 3 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை.


திரு. ஆர்.டி.சேகர் MLA : சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.5 கோடியாக உயர்த்திடுக; கொடுங்கையூரில் இருந்து குப்பைக் கிடங்கை மாற்றுக; பெரம்பூரில் அரசு பொறியியல் கல்லூரி அமைத்திடுக,குடிநீர்ப் பஞ்சத்துக்கு அரசின் அலட்சியமே காரணம்.


திரு. மாதவரம் சுதர்சனம் MLA :தமிழக சிறைச்சாலைகளில் குறைபாடுகள் மலிந்துள்ளன; நீதிமன்றங்கள் போதிய அளவில் இல்லை, 7 பேர் விடுதலைக்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


திரு. நா.கார்த்திக் MLA :சிங்காநல்லூர் தொகுதியில் புதிய தொழில்நுட்பப் பூங்கா அமைக்க வேண்டும்.


மு.க.ஸ்டாலின் MLA : முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல NEET மசோதாக்களை குடியரசு தலைவர் திருப்பி அனுப்பிய உண்மையை அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது.


பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் MLA: இரட்டை இருப்பிடச் சான்றுகள் பெற்று தமிழக மருத்துவக் கல்லூரிகளில் வேற்று மாநிலத்தவர்கள் இடம்பெறும் பிரச்னையில் அரசு உடனடியாக கவனம் செலுத்தி, பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.

மு.க.ஸ்டாலின் MLA : NEET மசோதாக்களை நிறுத்திவைத்து, திருப்பி அனுப்பிவிட்டதாக மத்திய அரசு தமிழக சட்டத்துறைக்கு 22-09-2017 அன்று கடிதம் அனுப்பிய விவரங்களை சட்டத்துறை அமைச்சர் மறைத்து, நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதாக தவறான தகவலை தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக