திங்கள், 29 ஜூலை, 2019

நீங்கள் விடுத்த சவாலில் ஜெயித்து விட்டீர்கள் - மீரா மிதுன்

நீங்கள் விடுத்த சவாலில் ஜெயித்து விட்டீர்கள். நீங்கள் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக என்னை வெளியேறிவிட்டீர்கள்


மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். முந்தைய நாள் நிகழ்ச்சியில் சேரனுக்கு ஆதரவான கருத்துக்களை கமல்ஹாசன் பேசும் போது பார்வையாளர்கள் மத்தியில் இருந்து பலத்த ஆரவாரம் எழுந்தது. அப்போதே மீராவுக்கு இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என சந்தேகம் எழுந்தது. அதனால் சாண்டிக்கும் மீராவுக்கு  ஒரு உரையாடல் நிகழ்ந்தது. ஆனால் அப்போதும் சேரன் மீதான தன்னுடைய கருத்தை மீரா மிதுன் மாற்றிக்கொள்ளவே இல்லை. பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த மீரா மிதுன் மிகவும் பதட்டமாக காணப்பட்டார். 

கமல்ஹாசன் நிகழ்ச்சியில் தோன்றி எலிமிமேஷனுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களை ஒவ்வொரையும் காப்பாற்றி, கடைசியில் மீராவை வாங்க பேசலாம் என அழைத்த உடன் பார்வையாளர்கள் மத்தியில் ஆரவாரம் எழுந்தது.  பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து மீரா வெளியேறிய போது சேரனை பார்த்து “நீங்கள் விடுத்த சவாலில் ஜெயித்து விட்டீர்கள். நீங்கள் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக என்னை வெளியேறிவிட்டீர்கள்” என்றார் மீரா. இதை கேட்டு அதிர்ந்து போன சேரன், நான் எப்ப சொன்னேன் என்று கூறி திகைத்து நின்றார். 

ஹவுஸ்மேட்களிடம் இருந்து விடைப் பெற்று பிக்பாஸ் மெடலை உடைத்து  பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பின்பு கமல்ஹாசனை சந்தித்தார் மீரா. அவரிடம் உரையாடிய கமல், தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது தான் மனிதன். அது போல உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டால் நீங்களும் வெற்றியாளர் தான். என்று அறிவுரை கூறி வெளியேற்றினார்.







3 கருத்துகள்:

  1. மீரா மிதுன் சொல்வது உண்மை. ஒரு பட்சமாக பார்க்கிறது பிக்பாஸ்.தொட்டது உண்மையானது 59 �� camera எங்க போச்சி bigg boss இங்கு அனைவரும் சமம் கமல்சார் நேர்மை இல்லை சார்.
    சேரன் சார் மீரா மிதுன் இடுப்பில் பட்டது உண்மை .
    மீரா மிதுன் இடுப்பில்பட்டதுனால் தான்
    சேரன் செங்குட்டுவன் மீது முதுகில் தட்டினார் மீரா அங்கு உடனே பன்னது
    அங்கு reaction நடந்தது .
    மதுமிதா shakshi sherin abirami
    சேரனுக்கு கைதட்டல் வந்தவுடன் அப்படியே அவர் பக்கம்
    முதலில் இந்த மூ தேவிகலும் dressing sense முதலில் பன்ன செல்லுங்க பிக் பாஸ்

    மீதி உள்ள 59 camera க்கு என்ன வேலை .
    மீரா மிதுன் முதலில் சொல்லும் வார்த்தை நீங்கள் கேட்க வேண்டும்..
    இது ஒரு game show
    மீரா மிதுன் நல்ல விளையாடினார்.
    ஒரு பட்சமாக பார்க்கிறது அப்ப இந்த bigg boss 3 பார்க்க வேண்டாம் ������

    பதிலளிநீக்கு
  2. மீரா மிதுன் சொல்வது உண்மை. ஒரு பட்சமாக பார்க்கிறது பிக்பாஸ்.தொட்டது உண்மையானது 59 �� camera எங்க போச்சி bigg boss இங்கு அனைவரும் சமம் கமல்சார் நேர்மை இல்லை சார்.
    சேரன் சார் மீரா மிதுன் இடுப்பில் பட்டது உண்மை .
    மீரா மிதுன் இடுப்பில்பட்டதுனால் தான்
    சேரன் செங்குட்டுவன் மீது முதுகில் தட்டினார் மீரா அங்கு உடனே பன்னது
    அங்கு reaction நடந்தது .
    மதுமிதா shakshi sherin abirami
    சேரனுக்கு கைதட்டல் வந்தவுடன் அப்படியே அவர் பக்கம்
    முதலில் இந்த மூ தேவிகலும் dressing sense முதலில் பன்ன செல்லுங்க பிக் பாஸ்

    மீதி உள்ள 59 camera க்கு என்ன வேலை .
    மீரா மிதுன் முதலில் சொல்லும் வார்த்தை நீங்கள் கேட்க வேண்டும்..
    இது ஒரு game show
    மீரா மிதுன் நல்ல விளையாடினார்.
    ஒரு பட்சமாக பார்க்கிறது அப்ப இந்த bigg boss 3 பார்க்க வேண்டாம் ������

    பதிலளிநீக்கு