bigg boss 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
bigg boss 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

உண்மையைச் சொல்லணும்னு நான் நினைக்கிறேன் ; கேஸ் போடுவோம்'னு மிரட்டுறாங்க - மதுமிதா

உண்மையைச் சொல்லணும்னு நான் நினைக்கிறேன் கேஸ் போடுவோம்'னு மிரட்டுறாங்க - மதுமிதா 


பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியாக மதுமிதா நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், ஆனால் தொகுப்பாளர் கமல்ஹாசனும் கூட அதனை கண்டிக்கவில்லை எனவும் தபால் மூலம் அவர் புகார் அளித்துள்ளார். தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி 56-வது நாளில் வலுக்கட்டாயமாக போட்டியிலிருந்து வெளியேற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில்  'ஒண்ணு நீ இங்க இருக்கணும்.. இல்லாட்டி நாங்க இருக்கணும் டீ' எட்டு போட்டியாளர்கள் தன்னை கட்டாயப்படுத்தி போட்டியிலிருந்து வெளியேற்றியதாகவும். ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கத்தியால் தன் கையை அறுத்துக் கொண்டார். விதியை மீறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு ஷோவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  

அந்த எட்டு பேர்  தந்த மன அழுத்தத்தை மற்றும் நடந்த உண்மையைச் சொல்லணும்னு நான் நினைக்கிறேன். அதனாலதான் 'ஒண்ணு நீங்க பத்திரிகையாளர்களை சந்திக்க ஏற்பாடு பண்ணுங்க, இல்லை நானே பேட்டி தாரேன். 

ஆனால் நிகழ்ச்சி தொடர்பா மதுமிதா வாழ்நாள் முழுவதும் எங்கயுமே பேட்டி தரக்கூடாதுன்னு விஜய் டிவி நிர்வாகத்துல இருந்து மெயில் அனுப்புறாங்க. நீங்க பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி  எங்கேயும் எதையும் பேசக்கூடாது. மீறினால் அக்ரிமென்ட் படி கேஸ் போடுவோம்னு மிரட்டுறாங்க. ஆனா, நிகழ்ச்சியில் கலந்துகிட்டதுக்காக டிவி நிர்வாகம் எனக்குப் பேசின சம்பளம் முழுசையும் இப்போ கொடுத்திட்டாங்க. ஆனால் வாயைக் கட்டிப் போட்டு வச்சிருக்காங்க.

புதன், 4 செப்டம்பர், 2019

பிக்பாஸில் என்னை கொடுமைப்படுத்தினார்கள் - மதுமிதா போலீஸில் புகார்

பிக்பாஸில் என்னை கொடுமைப்படுத்தினார்கள் 
- மதுமிதா போலீஸில் புகார்


கடந்த ஆகஸ்ட் 17 தேதி  பிக் பாஸ் நிகழ்ச்சி 55 நாட்கள் கடந்து இருந்த போது, பிக் பாஸ் விதிகளை மீறி நடந்ததால் நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார். ஆனால் அதற்கான காரணத்தை தொலைக்காட்சி நிர்வாகமும், மதுமிதா தரப்பிலும் கூறவில்லை.  பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியில் வரும் மதுமிதா அவரது இடது கையில் கட்டுப் போடப்பட்டிருந்தது. மதுமிதா வெற்றியை தட்டிவிட்டு விட்டு இங்கு வந்து நிற்பது எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது என்று கம்ல ஹாசன் கூறுகிறார். மேலும், உங்களுடைய இந்த தியாகம் அகிம்சை கலந்ததாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்னைப் பொறுத்தவரை மது எடுத்த இந்த முடிவு ஒரு தவறான முடிவு. 

ஆகஸ்ட் 22 :இந்நிலையில், நேற்று விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் என்பவர் சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மதுமிதா வெளியேறிய போது நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கான பில் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே அவருக்கு ரூ. 11.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நிலுவைத் தொகையான ரூ. 80 ஆயிரத்துடன், 42 நாட்களுக்கான பாக்கி பணம் திருப்பித் தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதற்கு ஒப்புக்கொண்ட மதுமிதா, கடந்த 19ம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பியுள்ள வாட்ஸ் ஆப் மெசேஜில், நிலுவைத் தொகையை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார் என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மதுமிதா தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மதுமிதா. அப்போது பேசிய அவர், பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவினருக்கு தான் எந்தவித தற்கொலை மிரட்டலும் விடவில்லை. என் மீது விஜய் டிவி கொடுத்துள்ள புகார் பொய்யானது என்று கூறினார். 


ஆகஸ்ட் 22 தேதி : பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்த கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் அதன் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தலைமையில் நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்து விட்டு இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை செய்ய வேண்டும், நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவரது கையில் கட்டுப்போட்ட நிலையில் எந்தவித விளக்கமுமின்றி வெளியேற்றப்பட்டார். மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.


தற்போது 70 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்த நடிகை மதுமிதா, தனக்குத் தானே தீங்கு விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், விதிமுறைகளை மீறியதாகவும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியாக மதுமிதா நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், ஆனால் தொகுப்பாளர் கமல்ஹாசனும் கூட அதனை கண்டிக்கவில்லை எனவும் தபால் மூலம் அவர் புகார் அளித்துள்ளார். தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி 56-வது நாளில் வலுக்கட்டாயமாக போட்டியிலிருந்து வெளியேற்றியதாவும் அவர் கூறியுள்ளார்.

சனி, 3 ஆகஸ்ட், 2019

அன்புள்ள சேரன் அவர்களுக்கு உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள்

அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம்!




இயக்குநர் வசந்த பாலன் தனது பெஸ்புகில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் :

உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும்.காற்றின் ரகசியப் பக்கங்களில்  இந்த செய்தி ஊடேறி  உங்களைத்தொடும் என்றே நம்புகிறேன். உங்களின் படங்களின் ரசிகனாய் சொல்கிறேன்.வித்யாகர்வத்துடன் நீங்கள் இருந்த இடம் மிக கம்பீரமானது. பருந்து பறக்கும் வானத்தின் உயரத்தில் சஞ்சரிப்பவர் நீங்கள். பாரதிகண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப் என அற்புதமான இலக்கியப்படைப்புகள்.

திரையில் இலக்கியம் செய்ய ஆசைப்பட்டு அதில் வென்று காட்டியவர் நீங்கள்.
காலத்தின் கரையான் உங்களையும் உங்கள் படங்களையும் அழித்துவிட முடியாது.இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் பாலுகேந்திராவுடன் 
ஒப்பிடக்கூடிய திரை ஆளுமை நீங்கள். பிக்பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு 
உங்களின் உயரம் தெரியாது. நீங்களும் நடிகர் சரவணனும் ஒன்று என்று தான் நினைப்பார்கள். அறியாமை என்ன செய்ய..


உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள். இயக்குனர் சங்கப் பதவியில் கௌரவக்குறைவு ஏற்பட்ட போது  உடனே அதை விட்டு வெளியேறினீர்கள். ஆகவே கலைஞன் எந்த நிலையிலும் அவனின் மேன்மையை  எந்த கீழ்மைக்கும் உட்படவிடுதல் வேண்டாம்.

ALSO READ  THIS : 
கவின், லாஸ்லியா, சாக்‌ஷியை காதல் படுத்தும் பாடு ? - ஒரு ஷைக்காலஜி ரிப்போர்ட்
ALSO READ THIS : 
கவின், லாஸ்லியா, சாக்‌ஷியை காதல் படுத்தும் பாடு ? - ஒரு ஷைக்காலஜி ரிப்போர்ட். 
ஒரு ஆணின் நினைவை பெண்களின் மனதிலிருந்து போராடிப் பிய்த்து எறிவது என்பது நடவாத காரியம். 


ALSO READ THIS: 
சாண்டி வெளியே வரும் போது அவருக்கு கண்டிப்பாக ஜெயில் காத்திருக்கிறது.



வியாழன், 1 ஆகஸ்ட், 2019

விஜய் சேதுபதி கூறியதால், நான் இங்கே நிகழ்ச்சிக்கு வந்தேன். மனம் திறந்த சேரன்

விஜய் சேதுபதி கூறியதால், நான் இங்கே நிகழ்ச்சிக்கு வந்தேன். மனம் திறந்த சேரன்

பிக்பாஸ் நேற்றுபோட்டியாளர்களுக்கு மொட்டை கடுதாசி டாஸ்க்கை வழங்குகிறார்.  ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸுக்கும் மொட்டைக் கடுதாசி கிடைக்கிறது. அதில் சேரன் தனக்கான கடிதத்தை பிரித்து படித்தார்.

அதை தொடர்ந்து சேரனிடம் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கான காரணம் அடங்கிய கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர்,  நான் பெயர், புகழ், விருதுகள் பல வாங்கியிருந்தாலும், இறுதியாக நான் சுவைத்த வெற்றி என்பது ஆட்டோகிராஃப் தான். அதன் பிறகு ஒவ்வொன்றும் போராடி நான் சினிமா பயணத்தை ஓட்டினேன். தொடர்ந்து எல்லாம் தோல்வி படம் தான். இதனால் 4 வருடங்களாக சினிமாவில் நான் இல்லை சினிமவை தவிற வேறு எதுவும் எனக்கு தெரியாது. 

விஜய் சேதுபதி கூறியதால், நான் இங்கே நிகழ்ச்சிக்கு வந்தேன்.

நடிகர் விஜய் சேதுபதி தான் என்னை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகும்படி சொன்னார். ‘பட்டி தொட்டி முதல் வெளிநாடுகள் வரை பல கோடி மக்கள் பார்க்கும் இந்நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மக்களுடனான தொடர்பை நெருக்கப்படுத்திக் கொள்ள முடியும் என்று ஆலோசனை கூறினார்.

மேலும் சேரன் கூறியதாவது என் வாழ்க்கையில் ஆரம்பக்கட்டம் முதல், சினிமா எடுத்தது, சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள், கடன், என பல்வேறு அனுபவங்களை வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. அந்த அனுபவத்தை மக்கள் முன்னிலையில் கூறும் போது அது அவர்களுக்கு பாடமாக அமையும் எனக் கூறி விஜய் சேதுபதி தான் இந்நிகழ்ச்சி போகச் சொன்னார்.

விஜய் சேதுபதி, சேரன் கூட்டணி 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் கையில் ஏகப்பட்ட படங்கள் உள்ளன. விஜய் சேதுபதி , சேரன் இருவரும் இணைந்து நிச்சயம் படம் திரைப்படம் ஒன்றை உருவாக்குவோம் என்று கூறியிருந்தார்கள். என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க






















புதன், 31 ஜூலை, 2019

பிக்பாஸ் போடு ஆட்டம் போடு டாஸ்கில் நடந்த சுவையான சுவாரசியங்கள்

பிக்பாஸ் போடு ஆட்டம் போடு டாஸ்கில் நடந்த சுவையான சுவாரசியங்கள்



37வது நாள் துள்ளுவதோ இளமை என்ற எம்.ஜி.ஆர் பாடலுடன் இன்றைய நாள் துவங்கியது. இதை தொடர்ந்து  முகின் தான் மற்ற போட்டியாளர்களுக்கு ரேப் சாங் கற்றுக்கொடுத்தார். சாண்டி நச்சுனு ஒரு பாடலை பாடினார். பின்னர் அபிராமி காதலா நட்பா என்று  ரேப் சாங் பாடினார். இவருக்கு போட்டியாக ரேஷ்மா மற்ற போட்டியாளர்களைக் கொண்டு ரேப் சாங் பாடினார்.

இன்றைய நாளில் போட்டியாளர்களுக்கு ல்க்‌ஷூரி பட்ஜெட்டுக்கான போடு ஆட்டம் போடு என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.  இதன் விதிமுறைகளை மதுமிதா அனைவருக்கும் படித்து காட்டினார். 

இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்திற்கான உடைகளை அணிந்து கொண்டு, அவர்களுக்கு என்று போடப்படும் பாடலுக்கு நடனம் ஆட வேண்டும். பாடல் ஒலித்த 15 வினாடிக்குள் மேடை ஏறி ஆட வேண்டும்.  இல்லையேன்றால் ல்க்‌ஷூரி பட்ஜெட்டுக்கான பாய்ண்ட் குறைக்கப்படும்.

சேரன் – ரஜினிகாந்த் (ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்)
அபிராமி – பத்மினி (மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன)
சாண்டி – சிம்பு (தத்தை தத்தை தத்தை இவன் மன்மதன்)
சரவணன் – விஜயகாந்த் (கடைவீதி கலகலக்கும்)
கவின் – அஜித் (ஆலுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா),
முகென் – விஜய் (போக்கிரி பொங்கல்)
தர்ஷன் – கமல் (சகலகலா வல்லவன்)
லோஸ்லியா – திரிஷா (கட்டு கட்டு கீரை கட்டு)
ரேஷ்மா - ரம்யா கிருஷ்ணன் (வை ராஜா வை)
மதுமிதா - சரோஜா தேவி (ஒரு பெண்ணை பார்த்து நிலவை),
ஷெரின் - குஷ்பு (போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி)
சாக்‌ஷி - தமன்னா (தஞ்சாவூர் ஜில்லாக்காரி)

குரூப் டான்ஸ் (அனைவரும் மேடையின் பக்கத்தில் ஆட வேண்டும்) - ஊத்திக்கிண்ணு கடிச்சிக்கவா கடிச்சுக்கிட்டு ஊத்திக்கவாஎன்று பாடல் கொடுக்கப்பட்டது. 

முதலில் குரூப் டான்ஸ்க்கான (ஊத்திக்கிண்ணு கடிச்சிக்கவா கடிச்சுக்கிட்டு ஊத்திக்கவா) பாடல் ஒலித்தது. ஆனால், அபிராமியால்  வந்து ஆட முடியாததால் வார்னிங் கொடுக்கப்பட்டு மதிப்பெண்கள் குறைக்கப்பட்டது. 




  • இதனை தொடர்ந்து வேட்டி தூக்கி கட்டி கொண்டு கழிவறை சென்ற சரவணனின் விஜயகாந்த் கெட்டப்புக்கான (கடைவீதி கலகலக்கும் )என்ற பாடல் ஓலித்தது . இந்தப் பாடலுக்கு  சரவணன் விஜயகாந்த் போல ஆடினார்.





  • அடுத்தாக ரஜினியின் ராமன் ஆண்டாலும் என்ற பாடலுக்கு சேரன் அவரது ஸ்டைலில் ஆடினார். இதற்கு மற்ற போட்டியாளர்கள் உற்சாகம் கொடுத்ததோடு, அவருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர். 






  • 3வது தாக தல அஜித்தின் வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா என்ற பாடலுக்கு கவின் மங்காத்தா உடையில் நடனம் ஆடினார்.







 இதற்கிடையே விஜய் வேஷத்தில் இருந்த முகின் அவர்கள் அஜித்தாக இருக்கும் கவினுக்கு கையில் வாட்ச் ஒன்றை பரிசாக கட்டிவிட்டார்.





  • 4வது ஆக விஜய் – த்ரிஷா கூட்டணியில் வந்த கில்லி படத்தின் கட்டு கட்டு கீரை கட்டு என்ற பாடல் ஒலித்தது . இந்த பாடலுக்கு த்ரிஷாவாக இருந்த லாஸ்லியா சூப்பராக ஆடினார்.


  • 5வது தத்தை தத்தை தத்தை என்ற பாடல் ஒலித்தது. இந்த பாடலுக்கு சிம்புவாக இருந்த சாண்டி மாஸ்டர் மற்ற போட்டியாளர்களும் சூப்பராக ஆடினார்.


  • 6வது ஒரு பெண்ணை பார்த்து நிலவை என்ற பாடல் ஒலித்தது. சரோஜா தேவியாக உடை அணிந்திருந்த மதுமிதா அந்த காலகட்டத்திற்கு ஏற்ப சரோஜா தேவி போல டான்ஸ் ஆடினார். ஆனால் தாமதமாக வந்து ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடைசியில் இலங்கை மற்றும் மலேசியாவின் கலாச்சாரம், மக்கள், உணவு, திருவிழா, சினிமா பற்றி லோஸ்லியா மற்றும் முகின் ஆகியோர் பகிர்ந்துகொண்டனர். 

செவ்வாய், 30 ஜூலை, 2019

பிக்பாஸ் ஓபன் நாமினேஷன் ; கதறி அழுத போட்டியாளர்கள்

மீரா மிதுன் வெளியே போயிட்டார், இனிமே யாரு கன்டென்ட் கொடுப்பா ? என்ற பலரது கேள்விக்கு பிக்பாஸ் ஓபன் நாமினேஷன் பிராசஸ் மூலமாக தக்க பதிலடி கொடுத்துள்ளார்.



இதுவரை கன்பெக்‌ஷன் ரும்க்குள் நடந்து வந்த இந்த நாமினேஷன் பிராசஸ் முதல் முறையாக அனைவரது முன்னிலையிலும் நடந்து இருக்கிறது. இந்த வாரம் எலிமினேஷனுக்கு மது (6) , கவின் (6)  ரேஷ்மா (4) சாக்க்ஷி (3)  மற்றும் அபிராமி (2) என ஐந்து பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

சேரன் கடந்த வாரம் மக்களால் பாதுகாக்கப்பட்டுள்ளதால், அவரை இந்த வாரம் ரேஷ்மாவை தவிர யாரும் நாமினேட் செய்யவில்லை. ரேஷ்மா  நாட்டாமை டாஸ்க்கில் யார் மீதோ காட்ட வேண்டிய கோபத்தை என் மீது காட்டியதால் சேரனை நாமினேட் செய்கிறேன் என்று கூறினார். குறிப்பாக கடந்த நாட்களில் சேரன் மீது அதிருப்தியில் இருந்த கவின், சரவணன், சாத்தான் என்று கூறிய சாண்டி மாஸ்டர் ஆகியோர் யாரும் நாமினேட் செய்யவில்லை.

கவினை இந்த வாரம் பெண்களில் லாஸ்லியாவை தவிர ரேஷ்மா, அபிராமி, ஷெரின், மதுமிதா மற்றும் சாக்‌ஷி முதல் முறையாக கவினை நாமினேட் செய்தனர். அதுபோல ஆண்களில் சேரன் மட்டுமே நாமினேட் செய்தார். மேலும் சாக்‌ஷி தன்னை நாமினேட் செய்த காரணத்தால் அதிருப்தியில் இருத்தார். கவின் சென்ற வாரம் சாக்‌ஷியை நாமினேட் செய்தார் என்பது குறிப்பிடதக்கது.

மதுமிதாவை கடந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு நாமினேஷன் செய்யப்பட்டுள்ளார். ஆண்களில் கவின், சாண்டி, முகின், தர்ஷன் மற்றும் பெண்களில் அபிராமி, லாஸ்லியாவும் நாமினேட் செய்தனர்.



ரேஷ்மா முதல் முறையாக நாமினேட் செய்யப்பட்டுள்ளார். அவரை முகின், தர்ஷன், சேரன், கவின் ஆகியோர் நாமினேட் செய்தனர். முகின் ரேஷ்மாவை ஒருவரிடம் ஒரு விஷயத்தை கேட்டு அதனை மற்றொருவரிடம் சொல்லும் போது தவறாகவே சொல்கிறார் என்று கூறி நாமினேட்  செய்தார். ரேஷ்மாவும் முகின், தர்ஷன் ஆகியோர் தன்னை நாமினேட் செய்த காரணத்தால் கண்ணீர் சிந்தி அழுதார்.

சாக்‌ஷியை மதுமிதா, லாஸ்லியா, மற்றும் சரவணன் ஆகியோர் நாமினேட் செய்தனர். மேலும் கவினுக்கும் – சாக்‌ஷிக்கும் இடையிலான காதலுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சாக்‌ஷி மன அழுத்தம் காரணமாக ஷெரினிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

அபிராமியை சாண்டி மற்றும் சரவணன் நாமினேட் செய்தனர். அபிராமி தன்னை இந்த வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளதால் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.


சாண்டி வெளியே வரும் போது அவருக்கு கண்டிப்பாக ஜெயில் காத்திருக்கிறது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இருந்து சாண்டி வெளியே வரும் போது அவருக்கு கண்டிப்பாக ஜெயில் காத்திருக்கிறது. 



பிக்பாஸ் ஓபன் நாமினேஷன் ; கதறி அழுத போட்டியாளர்கள்

வசந்த பாலன் தனது பெஸ்புக் இவ்வாறு பதிவிட்டுள்ளார் :

நடன இயக்குநர் சாண்டியை நான் அறிந்ததில்லை. ஜெயில் திரைப்படத்தில் ஒரு நடனக்காட்சி இருந்தது. ஜீவி நடன இயக்குநராக யாரை போடப்போகிறீர்கள் என்று கேட்டார்.பட்ஜெட்டுக்குள் யார் வருகிறார்கள் என்று பார்த்து போட வேண்டும் என்றேன். சர்வம் தாள மையம் திரைப்படத்தில் சாண்டி திறமையாக நடனக்காட்சிகள் அமைத்தார் என்று பரிந்துரை செய்தார்.

இசையமைப்பாளரைத் தாண்டி இப்ப ஹீரோ வேற..,
அவர் சொல் தட்ட முடியுமா. உடனே சாண்டியிடம் பேசுங்கள் என்று என் தயாரிப்பு மேலாளரிடம் கூறினேன். நம் பட்ஜெட்டுக்குள் வருவாரா என்று கேட்கச்சொன்னேன். சாண்டி எந்த நிபந்தனையின்றி எங்கள் பட்ஜெட்டிற்குள் எல்லாவற்றுக்கும் சம்மதித்தார். படப்பிடிப்புக்கு முன் இரண்டு முறை சந்தித்தேன்.நடனக்காட்சியை விவரித்தேன். அமைதியாக பதிலுரைத்தார். படப்பிடிப்பிலும் அமைதியாக தன் வேலையை பார்த்து கொண்டிருப்பார்.நான் தான் அதிகம் கத்திக்கொண்டு இருந்தேன். அந்த நாட்களில் எனக்கு அவரை பற்றி எந்த மதிப்பீடும் உருவாகவில்லை. இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் போது  எத்தனை ஜனரஞ்சகமான கலைஞன் என்று தோன்றுகிறது.

வாழ்த்துகள் சாண்டி.
வென்று வாருங்கள்.
ஜெயில் காத்திருக்கிறது.


நீங்கள் விடுத்த சவாலில் ஜெயித்து விட்டீர்கள். நீங்கள் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக என்னை வெளியேறிவிட்டீர்கள் - மீரா மிதுன்

மதுவுக்கும் , சேரனுக்கும் அநீதி இழைத்த கமல்ஹாசன்

கவின் சேரனுக்கு எதிராக செயல்பட எட்டு முக்கிய காரணங்கள்.

அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி செய்யும் நாடகம்.

சேரன் சிறையில் அடைக்க படமால் இருக்க நாடகம் போடும் லோஸ்லியா

திங்கள், 29 ஜூலை, 2019

நீங்கள் விடுத்த சவாலில் ஜெயித்து விட்டீர்கள் - மீரா மிதுன்

நீங்கள் விடுத்த சவாலில் ஜெயித்து விட்டீர்கள். நீங்கள் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக என்னை வெளியேறிவிட்டீர்கள்


மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். முந்தைய நாள் நிகழ்ச்சியில் சேரனுக்கு ஆதரவான கருத்துக்களை கமல்ஹாசன் பேசும் போது பார்வையாளர்கள் மத்தியில் இருந்து பலத்த ஆரவாரம் எழுந்தது. அப்போதே மீராவுக்கு இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என சந்தேகம் எழுந்தது. அதனால் சாண்டிக்கும் மீராவுக்கு  ஒரு உரையாடல் நிகழ்ந்தது. ஆனால் அப்போதும் சேரன் மீதான தன்னுடைய கருத்தை மீரா மிதுன் மாற்றிக்கொள்ளவே இல்லை. பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த மீரா மிதுன் மிகவும் பதட்டமாக காணப்பட்டார். 

கமல்ஹாசன் நிகழ்ச்சியில் தோன்றி எலிமிமேஷனுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களை ஒவ்வொரையும் காப்பாற்றி, கடைசியில் மீராவை வாங்க பேசலாம் என அழைத்த உடன் பார்வையாளர்கள் மத்தியில் ஆரவாரம் எழுந்தது.  பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து மீரா வெளியேறிய போது சேரனை பார்த்து “நீங்கள் விடுத்த சவாலில் ஜெயித்து விட்டீர்கள். நீங்கள் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக என்னை வெளியேறிவிட்டீர்கள்” என்றார் மீரா. இதை கேட்டு அதிர்ந்து போன சேரன், நான் எப்ப சொன்னேன் என்று கூறி திகைத்து நின்றார். 

ஹவுஸ்மேட்களிடம் இருந்து விடைப் பெற்று பிக்பாஸ் மெடலை உடைத்து  பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பின்பு கமல்ஹாசனை சந்தித்தார் மீரா. அவரிடம் உரையாடிய கமல், தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது தான் மனிதன். அது போல உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டால் நீங்களும் வெற்றியாளர் தான். என்று அறிவுரை கூறி வெளியேற்றினார்.







கவினால் பாதிக்கப்பட்ட லாஸ்லியா மீள்வாரா ?

கவினால் பாதிக்கப்பட்ட லாஸ்லியா மீள்வாரா ?



கவின் பிக்பாஸ் 3 சீசன் ஆரம்பம் முதலே நான்கு பேரை காதலிப்பதாக கூறி வந்தார். இதற்கு காரணமாக அவர் சொன்னது ஜாலியாக மற்றும் மக்கள் பொழுதுப்போக்கு அம்சமாக அமையும் என்று கூறினார். ஆனால் அதற்கான எல்லையை கவின் வகுக்க வில்லை,அனைவரிடம் நெருக்கம் காட்டி வந்தார். இதை தவறாக உணர்ந்த சாக்க்ஷி தன்னை காதலிப்பதாக உணர்ந்தார். இதனை தன் நெருங்கிய நண்பர்கள் ஆன ஷெரின் மற்றும் அபிராமியுடன் பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு கவின் காதல் ரசம் பேச்சை ரசிக்கவில்லை, அதனால் விலகி நட்புடன் மட்டும் பழகி வந்தனர். ஆனால் இதனை லாஸ்லியா அறியாமல் கவின் தன்னிடம் மட்டும் தான் அதிகம் நெருக்கம் காட்டுகிறார், என நம்பி பழகி வந்தார்.

மதுவுக்கும் , சேரனுக்கும் அநீதி இழைத்த கமல்ஹாசன்

கமல் வரும் நாளான எலிமினேஷன் நாட்களில் லாஸ்லியா பேசும் பொது மக்கள் செய்யும் ஆரவாரத்தை கவனித்த கவின் லாஸ்லியாவிடம் அதிகம்  நெருக்கம் காட்டினார். இதனை அறியாத லாஸ்லியாவும் கவினுடன் நெருக்கமாக நட்புக்கு மேல் புனித தன்மை பழகி வந்தார். பிக்பாஸ் ஹவுஸ்மேட்களும் கவினையும் லாஸ்லியாவையும் இணைத்து காலாய்த்து கொண்டு இருந்தனர். இதனை கவினும், லாஸ்லியாவும் உள்ளுர மகிழ்ந்தனர். லாஸ்லியா கவினை அண்ணா என்று அழைப்பதும், கவின் வருந்துவது போல நடித்து பின்பு காதலில் உருகுவது போன்று பேசுவதும், வாடிக்கையாக இருந்து வந்தது இதன் பொருட்டு லாஸ்லியா மனதளவில் கவினுடன் நெருங்கி நட்புக்கு மேல்புனித தன்மையுடன் பழகி வந்தனர்.

பில்டப் கொடுக்கும் கமல் ; மீராவிடம் புஸ்வானம் ஆவார்

கவின் லாஸ்லியாவின் ஜோடியை கண்டு சாக்க்ஷி பொசசிவ் ஆனார், சாக்க்ஷியும் கவின் தன்னிடம் காட்டிய நட்புக்கு மேல் புனித தன்மையுடன் லாஸ்லியாவிடம் நெருக்கம் காட்டி வருகிறார் என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு சில நேரங்களில் கோபம் அடைந்தும் மற்றும் மனம் உடைந்தும் காணப்பட்டார். இதனை பார்த்து கொண்டிருந்த ஹவுஸ்மேட்களும் கவின் மீது அதிருப்தி அடைந்தனர்.

கவின் சேரனுக்கு எதிராக செயல்பட எட்டு முக்கிய காரணங்கள்

இதனை உணர்ந்த கவினும் சாக்க்ஷியை சமாதானம் செய்ய முயற்சித்தார், இதனை லாஸ்லியாவும் தவறாக உணர்ந்தார். அதனால் லாஸ்லியா கவினுடன் சென்று “ நாம் பழக்கத்தால் சாக்க்ஷி மனம் வருந்துவதால் நீ என்னிடம் பேசமால் இரு”  என கூறி வந்தார். இதனால் இரண்டு லட்டு சாப்பிட நினைத்த கவினுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. இது லாஸ்லியாவிற்கும் மனதளவில் பாதிப்பாக அமைந்தது. பின்பு லாஸ்லியாவிற்கு கவினுக்கும் சாக்க்ஷிக்கும் இருக்கும்  நட்புக்கு மேல் புனித தன்மையுடன் இருந்த உறவு அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் கவினுடன் பேசமால் தவிர்த்தார்.


பின்னர் கவின் அழுது புலம்பி இரண்டு நாள் சோகமாக சுற்றி  லாஸ்லியா, சாக்க்ஷி இருவரையும் சமாதானம் செய்தார். மேலும் இருவரிடமும் நட்பாக பழகி வருவதாக கூறினார். லாஸ்லியாவும் கவினிடம் மன்னிப்பு கூறினார். ஆனால் லாஸ்லியா நட்புக்கு மெல் புனித உறவால் பாதிக்கப்பட்டு கடந்த வாரம் மிகவும் சோகமாக காணப்பட்டார், டாஸ்கில் கவனமின்றி மனம் போன போக்கில் செயல் பட்டார். இதனை கமலும் நேற்று சுட்டி காட்டினார். இன்று அபிராமியுடன் பேசுகையில் கூறியதாவது தான் மனதளவில் பாதிக்க ப்பட்டுள்ளதாகவும் அதில் இருந்து மீண்டுவர தான் முயற்சித்து வருகிறேன். என்று கூறினார். பழைய லாஸ்லியாவை காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி செய்யும் நாடகம்.

வாரம் ஒருவரை டார்கேட் செய்யும் மீரா மிதுன் , இந்த வாரம் பலியான சேரன்

சேரன் சிறையில் அடைக்க படமால் இருக்க நாடகம் போடும் லோஸ்லியா


ஞாயிறு, 28 ஜூலை, 2019

மதுவுக்கும் , சேரனுக்கும் அநீதி இழைத்த கமல்ஹாசன்

மதுவுக்கும் , சேரனுக்கும்  அநீதி இழைத்த கமல்ஹாசன்
"உண்மை ஒரு நாள் வெளிவரும் "; கமலுக்கு தண்ணி காட்டிய மீரா 




கிராம சபை கூட்டம் தீராத பல பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை கொண்டது. அதனால், தான் பிக் பாஸ் வீட்டிற்குள் கிராம பஞ்சாயத்து நடைபெறும் விதமாக டாஸ்க் தந்தாக கமல் கூறி நிகழ்ச்சி ஆரம்பித்தார்.

பில்டப் கொடுக்கும் கமல் ; மீராவிடம் புஸ்வானம் ஆவார்

ஆனால் பிக்பாஸ் வீட்டில் ஒரு பிரச்சனை கூட கமலஹாசனால் தீர்க்க முடியவில்லை, முதலில் பிக்பாஸ் வீட்டில் கோபம் அடைந்தவர்களை நடித்து காட்டினார். பின்பு மிகுந்த கோபம் தனக்கு சிரிப்பை வர வைத்து என்று கூறினார். ஆனால் மதுவை கழிவறை செல்லும் முன் (heavy)யாக டான்ஸ் செய்ய சொல்லியாதால் வந்த கோபத்தை கமலஹாசன் புரிந்து கொள்ளவில்லை, என் நாம் அவசரமாக மலம் அல்லது சிறுநிர் கழிக்கும் முன் இடையூர் செய்து குதிக்க அல்லது ஆட சொன்னால் நாம் எப்படி உணர்வோம், அதை பார்த்து சிரித்தால் நமக்கு கோபம் வாராத ஒரு வேளை மது அவர்களுக்கு மாதவிடாய் பிரச்சனை இருந்தால் கூட(heavy)யாக டான்ஸ் செய்ய சொன்னால் கூட கோபம் வாராத இதை உணராத கமல் நகைச்சுவை இருந்தது கூறினார். மேலும் தன்னை குள்ளம் என்று கூறி கிண்டல் செய்தால் சில முறை ஜாலியாக எடுத்து கொள்ளலாம் தொடர்ந்து கிண்டல் செய்தால் யாராக இருந்தாலும் கோபம் வரும். இதை சாண்டி மாஸ்டரிடம் கமலஹாசன் உணர்த்த தவறினார்.
கடைசியாக மீரா மிதுன் மற்றும் சேரன் ஆகியோரது பஞ்சாயத்தில் வந்து நின்றது. சேரனுக்காக வக்காளத்து வாங்கி பேசிய கமல்ஹாசன். பின்னர் மீராவை நடித்து காட்ட சொன்னார், அவரும் நடித்து காட்டினார், பின்பு மிகுந்த எதிர்பார்ப்பு இடையில் குறும்படத்தை பொட்டு காட்டினார், இதனை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பார்த்தனர். ஹவுஸ்மேட்ஸ் அனைவரிடம் கருத்தையும் கமல்ஹாசன் கேட்டு அறிந்தார், வீட்டில் அனைவரும் சேரன் மீது தவறு இல்லை கூறினர் ஆனால் மீரா மிதுன் இதனை எற்கவில்லை.
தான் தவறாக தான் உணர்ந்தேன் என்று தன் நிலையில் இருந்தார்.

குறும்படத்தின் பயன் என்ன ? மீரா மிதுன் குற்றம் சாட்டிய அன்றே ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சேரன் மீது தவறு இல்லை என்று தான் கூறினர். மக்கள் அனைவரும் சேரன் மீது எந்த தவறும் இல்லை டிவியில் பார்த்தனர். அது தவிர மீரா மிதுன் குறும்படத்தை சமுக வலைத்தளங்களில் மற்றும் (hotstar) இல் பல முறை மக்கள் பார்த்தனர். குறும்படத்தை பொட்டது மீரா தன் தவறை உணர்வதற்கு தான். ஆனால் அவரோ “உண்மை ஒரு நாள் வெளிவரும்” என்று கூலாக கூறி கமல்ஹாசனுக்கு தண்ணி காட்டினார். சேரனிடம் கடைசி வரை சிறு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. சேரன் தன் மனைவி பிறந்த நாளில் கூட தன் மீது சுமத்திய அபாண்ட குற்றசாட்டிற்கு மீராவை சிறு வருத்தம் கூட தெரிவிக்க செய்ய முடியவில்லை. 
மீரா அவர்கள் சேரன் தன்னிடம் தவறாக நடந்தாக உணர்தேன் இறுதிவரை கூறி உண்மை ஒரு நாள் வெளிவரும் என்று தெரிவித்து குறும்படத்திற்கு எந்த பயனும் இல்லை என்பதை உணர்த்தினார். மேலும் அவர் இந்த வாரம் அவரை வெளியேற்றினாலும். வேளியே வந்து ( youtube channel ) மற்றும் சமுக வலைதளங்களில், சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், உண்மை ஒரு நாள் வெளிவரும் பல பேட்டிகளில் கூறுவார். என்பது குறிப்பிட்தக்கது.

கமல்ஹாசன் நாளை மீராவிடம் தன் தவறை உணர்த்த தாமல் வெளியேற்றினால் சேரனுக்கு பிக்பாஸ் ஹவுஸ் அநீதி இழைத்தாக கருதப்படும்.

சனி, 27 ஜூலை, 2019

பில்டப் கொடுக்கும் கமல் ; மீராவிடம் புஸ்வானம் ஆவார்

பில்டப் கொடுக்கும் கமல் ; மீராவிடம் புஸ்வானம் ஆவார்



பொதுவாக கமல் நன்றாக மக்களிடம் பில்டப் செய்வார் ஆனால் பிக்பாஸ் வீட்டில் நீர்த்து பொவார். ஏற்கனவே கடந்த வாரங்களில் வனிதா விஜய்குமார், கவின் நடவடிக்கைகளை அவர் வன்மையாக கண்டிக்கவில்லை , கவின் இரண்டு பெண்களிடம் செய்த லிலைகளை அவர் காலாய்த்து மட்டும் விட்டார், அதுவும் சாக்ல்ட் விளம்பரம் மட்டும் செய்தார் என்று சொல்லாம்.

கவின் சேரனுக்கு எதிராக செயல்பட எட்டு முக்கிய காரணங்கள்.

சாண்டி மாஸ்டர் செய்யும் கிண்டல்கள் பல ஹவுஸ்மேட் மணம் புண் பட்டது , அதை கமல் சாண்டி மாஸ்டரிடம் நசுக்காக சொல்ல தவறினார்.
மாறாக அதை வரவேற்று பேசினார்.

சரவணன் அவர்கள் மோகன் வைத்தியாவை திருநங்கை போன்று கிண்டல் செய்ததை ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை.

அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி செய்யும் நாடகம்.

வனிதா விஜயகுமார் வெளியேறிய பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான டி.ஆர்.பி பெருமளவில் குறைந்தது. எனினும், மீரா மிதூன் செய்து வரும் அட்டகாசங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான டி.ஆர்.பி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

மீரா மிதுனை கடந்த வாரங்களில் விஜய் டிவி காப்பாற்றி வந்தது, சென்ற வாரத்தில் கவின், சாக்‌ஷி, லோஸ்லியா என பல பிரச்சனைகள் இருந்த போதும் கூட சாக்‌ஷி, மீரா மிதுன் குறும்படத்தை காட்டி மீரா மிதுனை காப்பாற்றி நல்லவராக காட்ட முயன்றனர். மீரா மிதுன் சாண்டி தன்னை டாஸ்கில் சரியாக விளையாட விடாமல் செய்தார் குற்றம் சாட்டினார். அதற்குகாக சாக்‌ஷி அனைத்து ஹவுஸ்மேட் அழைத்து உன் விளக்கத்தை கொடு என்று கூறினார். ஆனால் மீரா மிதுனை நல்லவராக காட்டவே குறும்படத்தை போட்டனர்.

வாரம் ஒருவரை டார்கேட் செய்யும் மீரா மிதுன் , இந்த வாரம் பலியான சேரன்

பல முறை எலிமினேஷனுக்கு வந்தும் மீரா மிதுன் காப்பாற்றப்பட்டுக் கொண்டே வருகிறார். இதனால் அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குவிந்துள்ளதாக அவரே எண்ணிக்கொள்கிறார். தன்னை ஒவியா ஒப்பிட்டு கொண்டுள்ளார். அதன் காரணமாகவே நிகழ்ச்சியின் மீதான ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பும் வகையில் மீரா செயல்பட்டு வருகிறார். 

அதனால் இந்த வாரம் மீரா மிதுன் தனக்காக ஒரு அணியை உருவாக்கி ஏதாவது பிரச்னையை உருவாக்கிக் கொண்டும், ஏதாவது போட்டியாளரை வம்பிழுத்துக் கொண்டும் இருந்து வருகிறார் மீரா மிதுன். இதனால் சண்டை நடந்ததும், அப்போது அழுது பிரச்னையை முடிப்பது தான் மீராவின் யுக்தி. 

இந்த வாரம் நிகழ்ச்சியில் சேரன் மீது பரபரப்பு புகார் கூறிய மீரா, தொடர்ந்து போட்டியாளர்கள் அடுக்கிக் கொண்டே போன கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஒரு கட்டத்தில் அழுதுவிட்டார். 

அதுபோல இன்றும் கமல் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தன்னை சூழலுக்கு ஏற்றார் போல பேசி, சேரன் தன்னை இடுப்பில் கைவைத்து இழுத்ததாகவும், அது தனக்கு வலி ஏற்படுத்தியதாகவும் மீரா கூறி கமலின் மனோபாவத்தை மாற்றிக் கொள்ள வைப்பார்.


கமலும் நழுவி சென்று அபிராமி மற்றும் லோஸ்லியா இருவரும் சிறைக்கு அனுப்பட்டதை பேசியபடி கடைசியில் சாக்‌ஷியை வெளியேற்றுவார் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது

கவின் சேரனுக்கு எதிராக செயல்பட எட்டு முக்கிய காரணங்கள்.

கவின் சேரனுக்கு எதிராக செயல்பட முக்கிய காரணங்கள்,
சேரனுக்கு எதிராக ஆள் சேர்க்கும் முயற்சி ஈடுபட்டு வருகிறார்,






  1. லோஸ்லியாவிற்கும் தனக்கும் இடைவேளி எற்பட காரணம் சேரன் தான் என்று நம்புகிறார்.
  2. லோஸ்லியாவை சேரன் வெயிலில் கட்டி பொட்டு தண்டனை கொடுத்தால்.
  3. லோஸ்லியா சிறைக்கு சென்றது கவினுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, அதற்கு சேரன் தான் காரணம் என்று நம்புகிறார்.
  4. முன்பு ஒரு கொலைகாரன்  டாஸ்க்கில் தான் சிறைக்கு செல்ல சேரன் பரித்துரை செய்தார்
  5. சாக்‌ஷி மற்றும் ஷெரீன் தன்னை தவறாக நினைக்க சேரன் தான் காரணம் என்று நம்புகிறார்.
  6. கவினுக்கு இயல்பாக வயதில் முதியவர்களை பிடிபதில்லை இதனை எலிமினேஷன் ஆன பாத்திமா பாபு கூறி இருந்தார்.
  7. சேரனை நேரடியாக எதிர்த்தால் போட்டியில் தொடர்வது பிரச்னையாக அமையலாம். அதனால் சாண்டி, கவின் ஆகியோரை தூண்டிவிட்டு வருகிறர் சரவணன்.  மேலும் சேரன், சரவணன் இருவரும் கே.எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிபிட்தக்கது.
  8. கவின் லோஸ்லியா, சாக்‌ஷி பிரச்சனையில் சேரன் தன்னை  ஹவுஸ்மேட்ஸுடம் மன்னிப்பு கேட்கும் படி பரித்துரை செய்தார்.



அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி செய்யும் நாடகம்.

அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி செய்யும் நாடகம்.


அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி டாஸ்கில்  சிறப்பாக விளையாடியவர்களாக  மிரா மிதுனை பரிந்துரை செய்தனர். மேலும் தங்களை டாஸ்கில் சரியாக பங்கெடுக்கவில்லை என்று சிறை செல்ல தயரானார்கள்.

அபிராமி மற்றும் லோஸ்லியா இருவரும் சிறைக்கு அனுப்பப் பட்டனர். ஆனால் தாங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக காட்டி கொண்டனர், சிறைக் கைதிகளுக்கான உடை மாட்ர்ன் முறையில் அணிந்து கொண்டு இருந்தனர், அப்போது ஒலித்த பிக்பாஸ் சிறைக் கைதிகளுக்கு எந்த உணவும் கொடுக்கக்கூடாது. பிக்பாஸிடம் இருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அது போன்று கஞ்சி மற்றும் ஊறுகாய் வழங்க பட்டது. ஆனால் அதனை மகிழ்ச்சியுடன் எற்று கொண்டு நடித்து வருகிறார்கள்.இதனை பார்த்து கொண்டு இருந்த முகின், கவின் , சாண்டி விரும்பவில்லை. 

மேலும் லோஸ்லியா செய்த குற்றம் திருடியது டாஸ்கில் இல்லாதது இதனால் சேரன் தேவையற்ற அவமானத்தை சந்தித்தார். தனக்கு தானே தண்டனை யை கேட்டு வாங்கிய மாதிரி தான்  இந்த ஜெயில் தண்டனை. மற்றும் அபிராமி இது தன்னை எலிமினேஷன் காப்பாற்ற கூடும் என்றும் நம்புகிறார். இதனால் அவர்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குவியும் எண்ணிக்கொள்கிறார்கள். அதன் காரணமாகவே நிகழ்ச்சியின் மீதான ஒட்டுமொத்த கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்பும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். அவருடைய கருத்து மீது நம்பிக்கையில்லாத ஹவுஸ்மேட்ஸ் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்தனர். 

வெள்ளி, 26 ஜூலை, 2019

வாரம் ஒருவரை டார்கேட் செய்யும் மீரா மிதுன் , இந்த வாரம் பலியான சேரன்


மீரா மிதுன் பற்றிய சர்ச்சைகள் பிக் பாஸ் வீட்டுக்கு வெளியிலும் உள்ளேவும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. 


மீரா மிதுன் முதல் வாரத்திலேயே அபிராமி மற்றும் சாக்‌ஷி பிரச்சனையை உருவாக்கினார். முகென் மற்றும் மீரா மிதுன் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். நீ யாருடன் வேண்டுமானால், பேசிக்கொள்ளலாம். மற்றவர்களிடம் பேசுறது எனக்கு பிடிக்காது. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை என்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது லோஸ்லியாவும் உடன் இருந்தார். இவ்வளவு தான் நடந்தது. இதனைக் தவறாக நினைத்துக் கொண்ட சாக்‌ஷி, வனிதாவிடம் சென்று அபிராமி கிட்ட முகென் நீ பேசக் கூடாது என்று கூறியதாக காதில் விழுந்தது என்று குறிப்பிட்டார். முகினுடன் வாக்குவாதில் ஈடுபட்டார் பின்பு அபிராமியுடன் முடிந்தது




மீரா மிதுன் இரண்டாவது வாரத்தில் வீட்டின் உள்ளே தர்ஷனை அவர் காதலிப்பதாக சொல்லி பிரச்சனையை உருவாக்கினார். தர்ஷன் தனக்கு வேறு ஒரு காதலி வெளியில் இருப்பதாக கூறினார். தர்ஷனுக்கும் அவருக்கும் நெடுநாட்களாக பழக்கம் இருக்கிறதாம். தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதும் சனம் ஷெட்டி பிக் பாஸ் செட்டிற்கு வந்துள்ளார். மீரா மிதுனுக்கும் சனம் ஷெட்டிக்கும் உள்ள பகை பற்றி தர்ஷனுக்கும் தெரியும்  மீரா மிதுன் எல்லாம் தெரிந்து தான் வேண்டுமென்றே தர்ஷனை காதலிப்பதாக கூறுகிறார்.



மீரா மிதுன் முன்றாவது வாரத்தில் கவின் மற்றும் சாண்டி டார்கேட் செய்தார். பின்னர் சாக்‌ஷி தானாக வலையில் விழுந்தார், இதில் சாண்டி, கவின் தப்பித்தனர், பின்பு சாக்‌ஷியுடன் சிறைக்கு சென்றும் ஹவுஸ்மேட்ஸையும் பாடாய் படுத்திய மீரா.






மீரா மிதுன் நான்காவது வாரத்தில் மைனர் சரவணன், கீரிப்பட்டிக்கும் பாம்புப்பட்டிக்கும் இருந்த நெடுங்கால தொடர்பை கூறினார். அந்த கதையில் பாம்புப்பட்டி நாட்டமை சேரனின் மனைவி தான், கீரிப்பட்டி மதுமிதா. அவர்களுடைய மகள் தான் லோஸ்லியா என்று சரவணன் கதை சொன்னார். 

மிகவும் நகைச்சுவையாக இருந்தது. அப்போது, டாஸ்கின் அடிப்படையில் லோஸ்லியா ஒரு பொருளை திருடினார். அதை கையும் களவுமாக சேரன் பிடித்துவிட்டார். அப்போது லோஸ்லியா வைத்திருக்கும் பொருளை காப்பாற்ற மீரா முயற்சித்தார். இதை தடுக்க சேரன் உடனே மீராவை பிடித்து இழுத்து அந்த புறமாக போட்டார். 

 அதை தொடர்ந்து போட்டியாளர்கள் முன்னிலையில் பேச முன்வந்தார் மீரா. அதில் சேரன் தன்னை இடுப்பில் கைவைத்து இழுத்ததாகவும், அது தனக்கு வலி ஏற்படுத்தியதாகவும் மீரா கூறினார்.

சேரன் சிறையில் அடைக்க படமால் இருக்க நாடகம் போடும் லோஸ்லியா

சேரன் சிறையில் அடைக்க படமால் இருக்க நாடகம் போடும் லோஸ்லியா 



பிக்பாஸ் வீடு, இந்த வார லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க்கை மேற்கொள்ள தயாரானது.  அதில் பாம்புப்பட்டி மக்கள், கீரிப்பட்டி மக்கள் என இரண்டு அணிகலாக பிரிக்க பட்டு விளையாடி வருகின்றனர். 

இந்த வாரத்திற்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் மும்முரம் காட்டி வருகின்றன. டாஸ்க் செய்வதில் அதிக ஆர்வம் இருந்தாலும், அதற்கான விதிமுறைகள் என்பது அவர்களுக்கு புரிந்ததா என்பது சந்தேகம் தான். இதில் பாம்புப்பட்டி கிராமத்தின் நாட்டமையாக இருக்கும் சேரன், தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கின் படி போட்டியாளர்களிடம் சற்று கடுமையாக நடந்து கொண்டார்.

மேலும்  சேரன் அவர்கள் அடிகடி கோவப்பட்டு டாஸ்க் ஈடுபடமால் இருப்பதால், மேலும் சேரனுடன் ரேஷ்மா, கவின், மீரா , ஆகியோருக்கும் அவ்வப்போது சச்சரவு ஏற்பட்டது. அவரை இந்த வாரம் சிறையில் அடைக்க படலாம் என்று சாக்‌ஷியும், கவின் மற்றும் ரேஷ்மா விவாதம் செய்கின்றனர்.

இதனை அறிந்த லோஸ்லியா சேரனை சிறையில் காப்பாற்ற, இந்த சிறையில் அடைக்க தன்னை பரிந்துரைக்கும் படி கவின் இடம் ஆதரவு கேட்டார். ஆனால் கவின் மறுத்து விட்டார். ஆகவே பிக்பாஸ் விதிமுறைகளை மிறி வருகிறார். 

லோஸ்லியா டாஸ்க் ஈடுபடமால் கழிவறை உபோயகித்து மற்றும் பானை உடைத்து அப்படி தான் செய்வேன் என்று  ரேஷ்மா, மது , சாக்‌ஷியிடம் கூறி வருகிறார், இதனை அறியாமல் ரேஷ்மா இந்த வாரம் சிறையில் அடைக்க படலாம் எச்சரித்து வருகிறார்கள்.