விஜய் சேதுபதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஜய் சேதுபதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 அக்டோபர், 2020

முத்தையா முரளிதரன் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கும் திரு.விஜய் சேதுபதி அத்திரைப்படத்தில் வெளியேறுவது சுயமரியாதைக்குரியதென மே17 இயக்கம் கருதுகிறது.


 இலங்கை அரசும் பிற தமிழின விரோத கொள்கை கொண்ட நாடுகளும் தமிழர்களிடத்தில் தங்களது அரசியலை மையப்படுத்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்த அரசியல் மிகச்சமீபத்தில் தீவிரமாக நடைபெற ஆரம்பித்திருக்கிறது. பண்பாட்டு துறை முதல் அரசியல் துறை வரை இதற்கான முன்னெடுப்புகள் தீவிரமடைந்திருக்கின்றன. தமிழீழப் போரின் போது மேற்குலகின் அரசியலை நியாயப்படுத்தியவரும், தமிழீழ இனப்படுகொலைக்கு விடுதலைப் புலிகளும் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களும் பொறுப்பு என முழங்கியவருமான நார்வே நாட்டின் முன்னாள் அமைச்சரும், அமைதிப் பேச்சுவார்த்தை பிரதிநிதியுமான அமெரிக்காவின் கைக்கூலியாக செயல்படும் எரிக் சோல்ஹேம் களம் இறக்கப்படுகிறார், மறுபுறத்தில் பண்பாட்டு தளத்தில் இலங்கையின் ஆளுமைகளான முத்தையா முரளிதரன் போன்ற சிங்களக் கைக்கூலிகள் பற்றிய திரைப்படங்கள் இங்கே உருவாக்கப்படுகின்றன. தமிழகத்தின் அரசியல் களம் தமிழீழ அரசியலை விட்டு விலகி இருப்பதாக இந்த அரசுகள், ஆற்றல்கள் தவறாக எடை போட்டிருக்கின்றன.

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

விஜய் சேதுபதி கூறியதால், நான் இங்கே நிகழ்ச்சிக்கு வந்தேன். மனம் திறந்த சேரன்

விஜய் சேதுபதி கூறியதால், நான் இங்கே நிகழ்ச்சிக்கு வந்தேன். மனம் திறந்த சேரன்

பிக்பாஸ் நேற்றுபோட்டியாளர்களுக்கு மொட்டை கடுதாசி டாஸ்க்கை வழங்குகிறார்.  ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸுக்கும் மொட்டைக் கடுதாசி கிடைக்கிறது. அதில் சேரன் தனக்கான கடிதத்தை பிரித்து படித்தார்.

அதை தொடர்ந்து சேரனிடம் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கான காரணம் அடங்கிய கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர்,  நான் பெயர், புகழ், விருதுகள் பல வாங்கியிருந்தாலும், இறுதியாக நான் சுவைத்த வெற்றி என்பது ஆட்டோகிராஃப் தான். அதன் பிறகு ஒவ்வொன்றும் போராடி நான் சினிமா பயணத்தை ஓட்டினேன். தொடர்ந்து எல்லாம் தோல்வி படம் தான். இதனால் 4 வருடங்களாக சினிமாவில் நான் இல்லை சினிமவை தவிற வேறு எதுவும் எனக்கு தெரியாது. 

விஜய் சேதுபதி கூறியதால், நான் இங்கே நிகழ்ச்சிக்கு வந்தேன்.

நடிகர் விஜய் சேதுபதி தான் என்னை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகும்படி சொன்னார். ‘பட்டி தொட்டி முதல் வெளிநாடுகள் வரை பல கோடி மக்கள் பார்க்கும் இந்நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மக்களுடனான தொடர்பை நெருக்கப்படுத்திக் கொள்ள முடியும் என்று ஆலோசனை கூறினார்.

மேலும் சேரன் கூறியதாவது என் வாழ்க்கையில் ஆரம்பக்கட்டம் முதல், சினிமா எடுத்தது, சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள், கடன், என பல்வேறு அனுபவங்களை வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. அந்த அனுபவத்தை மக்கள் முன்னிலையில் கூறும் போது அது அவர்களுக்கு பாடமாக அமையும் எனக் கூறி விஜய் சேதுபதி தான் இந்நிகழ்ச்சி போகச் சொன்னார்.

விஜய் சேதுபதி, சேரன் கூட்டணி 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் கையில் ஏகப்பட்ட படங்கள் உள்ளன. விஜய் சேதுபதி , சேரன் இருவரும் இணைந்து நிச்சயம் படம் திரைப்படம் ஒன்றை உருவாக்குவோம் என்று கூறியிருந்தார்கள். என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க