மே17 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மே17 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 நவம்பர், 2020

தமிழ் நாடு நாள் விழாவை கொண்டாடிய தோழர் பொழிலன் அவர்களை கைது செய்த காவல்துறையை கண்டிக்கின்றோம்! - மே பதினேழு இயக்கம்

'நவம்பர் 1' தமிழ்நாடு நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படியாக இன்று தமிழ்நாடு நாள் விழாவை சிறப்பாக கொண்டாடிய தமிழக மக்கள் முன்னணியில் தலைவரும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான தோழர் பொழிலன் அவர்களை இன்று (01-11-20) பாவலரேறு தமிழ்க் களம் அரங்கில் வைத்து தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது. காவல்துறையின் இந்த அராஜக செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது!

செவ்வாய், 13 அக்டோபர், 2020

முத்தையா முரளிதரன் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கும் திரு.விஜய் சேதுபதி அத்திரைப்படத்தில் வெளியேறுவது சுயமரியாதைக்குரியதென மே17 இயக்கம் கருதுகிறது.


 இலங்கை அரசும் பிற தமிழின விரோத கொள்கை கொண்ட நாடுகளும் தமிழர்களிடத்தில் தங்களது அரசியலை மையப்படுத்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்த அரசியல் மிகச்சமீபத்தில் தீவிரமாக நடைபெற ஆரம்பித்திருக்கிறது. பண்பாட்டு துறை முதல் அரசியல் துறை வரை இதற்கான முன்னெடுப்புகள் தீவிரமடைந்திருக்கின்றன. தமிழீழப் போரின் போது மேற்குலகின் அரசியலை நியாயப்படுத்தியவரும், தமிழீழ இனப்படுகொலைக்கு விடுதலைப் புலிகளும் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களும் பொறுப்பு என முழங்கியவருமான நார்வே நாட்டின் முன்னாள் அமைச்சரும், அமைதிப் பேச்சுவார்த்தை பிரதிநிதியுமான அமெரிக்காவின் கைக்கூலியாக செயல்படும் எரிக் சோல்ஹேம் களம் இறக்கப்படுகிறார், மறுபுறத்தில் பண்பாட்டு தளத்தில் இலங்கையின் ஆளுமைகளான முத்தையா முரளிதரன் போன்ற சிங்களக் கைக்கூலிகள் பற்றிய திரைப்படங்கள் இங்கே உருவாக்கப்படுகின்றன. தமிழகத்தின் அரசியல் களம் தமிழீழ அரசியலை விட்டு விலகி இருப்பதாக இந்த அரசுகள், ஆற்றல்கள் தவறாக எடை போட்டிருக்கின்றன.

வியாழன், 20 ஜூன், 2019

மோடி ஆட்சியில் இந்திய கடன் சுமை இமாலயளவு அதிகரித்திருக்கிறது.

மோடி ஆட்சியில் இந்திய ஒன்றியத்தின் கடன் சுமை இமாலயளவு அதிகரித்திருக்கிறது.
- மே17 இயக்கம் அறிக்கை


கடந்த ஐந்து ஆண்டு மோடி ஆட்சியில் நாட்டின் கடன் அளவு 54% அதிகரித்துள்ளது என இந்திய ஒன்றிய அரசின் வர்த்தகத்துறை கடந்த 12ஆம் தேதி வெளியிட்டிருக்கிறது. அதாவது ஜூன் 2014 இல் 56,90,763 ஆக இருந்த கடன் சுமை,மார்ச் 2019ல் 84,68,086 ஆக கிட்டதட்ட 54% அதிகரித்துள்ளது.