புதன், 4 செப்டம்பர், 2019

பிக்பாஸில் என்னை கொடுமைப்படுத்தினார்கள் - மதுமிதா போலீஸில் புகார்

பிக்பாஸில் என்னை கொடுமைப்படுத்தினார்கள் 
- மதுமிதா போலீஸில் புகார்


கடந்த ஆகஸ்ட் 17 தேதி  பிக் பாஸ் நிகழ்ச்சி 55 நாட்கள் கடந்து இருந்த போது, பிக் பாஸ் விதிகளை மீறி நடந்ததால் நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார். ஆனால் அதற்கான காரணத்தை தொலைக்காட்சி நிர்வாகமும், மதுமிதா தரப்பிலும் கூறவில்லை.  பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியில் வரும் மதுமிதா அவரது இடது கையில் கட்டுப் போடப்பட்டிருந்தது. மதுமிதா வெற்றியை தட்டிவிட்டு விட்டு இங்கு வந்து நிற்பது எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது என்று கம்ல ஹாசன் கூறுகிறார். மேலும், உங்களுடைய இந்த தியாகம் அகிம்சை கலந்ததாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்னைப் பொறுத்தவரை மது எடுத்த இந்த முடிவு ஒரு தவறான முடிவு. 

ஆகஸ்ட் 22 :இந்நிலையில், நேற்று விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் என்பவர் சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மதுமிதா வெளியேறிய போது நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கான பில் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே அவருக்கு ரூ. 11.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நிலுவைத் தொகையான ரூ. 80 ஆயிரத்துடன், 42 நாட்களுக்கான பாக்கி பணம் திருப்பித் தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதற்கு ஒப்புக்கொண்ட மதுமிதா, கடந்த 19ம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பியுள்ள வாட்ஸ் ஆப் மெசேஜில், நிலுவைத் தொகையை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார் என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மதுமிதா தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மதுமிதா. அப்போது பேசிய அவர், பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவினருக்கு தான் எந்தவித தற்கொலை மிரட்டலும் விடவில்லை. என் மீது விஜய் டிவி கொடுத்துள்ள புகார் பொய்யானது என்று கூறினார். 


ஆகஸ்ட் 22 தேதி : பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்த கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் அதன் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தலைமையில் நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்து விட்டு இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை செய்ய வேண்டும், நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவரது கையில் கட்டுப்போட்ட நிலையில் எந்தவித விளக்கமுமின்றி வெளியேற்றப்பட்டார். மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.


தற்போது 70 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்த நடிகை மதுமிதா, தனக்குத் தானே தீங்கு விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், விதிமுறைகளை மீறியதாகவும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியாக மதுமிதா நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், ஆனால் தொகுப்பாளர் கமல்ஹாசனும் கூட அதனை கண்டிக்கவில்லை எனவும் தபால் மூலம் அவர் புகார் அளித்துள்ளார். தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி 56-வது நாளில் வலுக்கட்டாயமாக போட்டியிலிருந்து வெளியேற்றியதாவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக