திங்கள், 16 செப்டம்பர், 2019

கலைஞரின் பிறந்த நாளை செம்மொழி நாளாக கடைபிடிப்போம் - மு.க.ஸ்டாலின்

கலைஞரின் பிறந்த நாள் ஜூன் 3-ஆம் தேதியை, செம்மொழி நாளாக கடைபிடிப்போம். திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


முத்தமிழறிஞர் கலைஞர் நமக்கு உருவாக்கிக் கொடுத்த மூன்று விழாக்கள் தான் இந்த முப்பெரும் விழாக்கள் கடந்த ஆண்டு முப்பெரும் விழாவை விழுப்புரத்தில் நடத்தினோம், அந்த விழாவில் சில அறிவிப்புகளைச் செய்தேன். கலைஞரின் பிறந்த நாள் ஜூன் 3-ஆம் தேதியை, செம்மொழி நாளாக கடைபிடிப்போம். கடந்த ஜூன் 3-ஆம் தேதியை செம்மொழி நாளாக கொண்டாடினோம். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அறக்கட்டளை தொடங்கப்பட்டு, மருத்துவம் மற்றும் கல்வி உதவித் தொகைகள் விரைவில் வழங்கப்படும்.

தமிழகத்தின் நான்கு மண்டலங்களில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் சிறப்பாக பணியாற்றியவர்களில் தலா ஒருவருக்கும் ஊராட்சி செயலாளர்களில் தலா ஒருவருக்கும் கழக விருது.

அந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது அவர்களை பாராட்டுவது மட்டுமல்ல அவர்களைப் போலவே மற்றவர்களும் பணியாற்ற வேண்டும் என்பதற்காக இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இப்படியெல்லாம் விருதுகள் கொடுப்பார்கள் என்பதற்காக அவர்கள் பணியாற்றவில்லை. ஆனாலும், பாராட்ட வேண்டியது தலைமைக்கழகத்தின் கடமை அதைத்தான் செய்துள்ளோம்.

அதேபோல் திறன் மிகு சாதனைகளைப் படைத்துள்ள இளம் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்படும் என்று அறிவித்தேன். தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற துணைப் பேராசிரியர் எழிலரசி அவர்களுக்கும், மியான்மரில் நடைபெற்ற ஆசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கமும் மற்றும் பல்வேறு போட்டிகளில் பல பதக்கங்களை குவித்த கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சார்ந்த பூந்தளிர் அவர்களுக்கும், 16 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்ற சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள மல்லிக்குத்தம் கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கவின் சான்றோம் ஆகியோருக்கு இளம் சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் கலை இலக்கியவாதிகளுக்கு திராவிட படைப்பாளி விருது வழங்கப்படும் என்று அறிவித்திருந்தேன். கலை இலக்கியம் பத்திரிகை திரையுலகம் சின்னத்திரை என அந்தத்துறையில் சிறந்து விளங்கும் படைப்பாளிகளுக்கு கலைஞர் பிறந்த நாள் ஜூன் 3-ஆம் தேதியன்று விருதுகள் வழங்கப்படும்.

1999-ஆம் ஆண்டில் இருந்து 2019-ஆம் ஆண்டு வரையில் முரசொலி அறக்கட்டளையின் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அவர்களின் நன்னடத்தையைப் பொறுத்து அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக இதுவரையில் 320 பேருக்கும் நற்சான்று – பணமுடிப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அவர்களுக்கு வழங்கியிருக்கக்கூடிய தொகை 28 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாய்.

மாவட்ட, மாநில அளவில் கல்லூரி – பள்ளி மாணவர்களுக்கு புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியை 19997-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை நடத்தியிருக்கின்றோம், இதுவரையில், 7,241 பள்ளி மாணவர்களுக்கு, 7,153 கல்லூரி மாணவியர்களுக்கு என 14,394 மாணவ மாணவியருக்கு 2 கோடியே 78 இலட்சத்து 88 ஆயிரத்து 250 ரூபாய் இதுவரையில் வழங்கப்பட்டிருக்கின்றது.

தி.மு.கழக அறக்கட்டளை தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் ஆகியோர் பெயரில் விருதுகள் 1985-ஆம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டு வரையில் தொடர்ந்து 220 பேர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த ஆண்டு பெரியார் விருது, இளமை முதலே பகுத்தறிவு சுயமரியாதை கொள்கைகளை ஏற்று செயல்பட்டவரான திருவண்ணாமலை த.வேணுகோபால்.,க்கு வழங்கப்பட்டுள்ளது. அண்ணா விருது, ஆந்திர மாநிலத்தை சார்ந்த அண்ணாவின் ஆணையை ஏற்று வடக்கு எல்லைக்காக போராடிய சி.நந்தகோபாலுக்கு அண்ணா விருது வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் விருது, 1949-ஆம் ஆண்டு கழகம் தோன்றிய நாள் முதல் கழகத்தின் உறுப்பினராக இருக்கும் சேப்பாக்கம் எ.கே.ஜெகதீசன் அவர்களுக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது. பேவேந்தர் விருது, அண்ணாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் சத்தியவாணி முத்து அவர்கள் தனது 16 வயதிலேயே கழக உறுப்பினராக பணியாற்றும் சித்திரமுகி சத்தியவாணி முத்து பாவேந்தர் விருது பெற்றுள்ளார்.

பேராசிரியர் விருது, கழகம் நடத்திய சட்ட எரிப்பு இந்தி ஆதிக்க எதிர்ப்பு மிசா போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட தஞ்சை இறைவன் அவர்களுக்கு பேராசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஐவரும் விருதால் மட்டுமல்ல, விருதுக்கே பெருமை சேர்த்துள்ளார்கள். தலைமைக்கழகம் சார்பில் அவர்களுக்கு வாழ்த்துகள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக