புதன், 24 ஜூலை, 2019

வரலாறு 10வது பாடக்குறிப்புகள்

வரலாறு 10வது பாடக்குறிப்புகள்

  • 1857 ஆம் ஆண்டு பெரும்புரட்சியை ஆங்கில வரலாற்றறிஞர்கள் அழைத்தது - படைவீரர்கலகம்
  • இந்திய வரலாற்றறிஞர்கள் 1857-ஆம் ஆண்டு பெரும் புரட்சியை அழைத்தது - முதல் இந்திய சுதந்திரபோர்
  • 1857 பெரும் புரட்சியின் போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் - கானிங் பிரபு
  • குடியானவர்கள் அதிகமாகச் செலுத்த வேண்டிய வரி - நிலவரி
  • குத்தகை நிலங்களை அரசின் கட்டுபாட்டில் கொண்டு வந்தவர் - பெண்டிங் பிரபு
  • பொது இராணுவப் பணியாளர் சட்டம் பொண்டு வரப்பட்ட ஆண்டு - 1856
  • முதன் முதலில் புரட்சி தோன்றிய இடம் - பாரக்பூர்
  • படைவீரர்கள் வெளிப்படையாகப் புரட்சியில் ஈடுபட்டது - மீரட்
  • அயோத்தி நவாபின் மனைவி - பேகம் ஹஸ்ரத் மகால்
  • 1857 ஆம் ஆண்டு புரட்சிக்கு பின் இந்திய கவர்னர் ஜெனரல் அழைக்கப்பட்டது - இந்திய அரசப் பிரதிநிதி 
  • சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாக திகழந்தவர் - இராஜாராம் மோகன்ராய்
  • 1829-ம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு சதி  என்னும் உடன்கட்டை  ஏறும் பழக்கத்தை ஒழிக்க உறுதுணையாக இருந்தவர் - இராஜாராம் மோகன்ராய்
  • சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது - ஆரிய சமாஜம்
  • இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - பேலூர்
  • வள்ளலார் பக்தி பாடல்கள் அடங்கிய தொகுப்பு - திருவருட்பா
  • சார் சையது அகமதுகான் என்பவரால் தொடங்கப்பட்ட இயக்கம் - அலிகார் இயக்கம்
  • சர் சையது அகமதுகான் பள்ளியை நிறுவிய இடம் – காசிப்பூர்
  • கேரளாவைச் சேர்ந்த சிறந்த சமூக சீர்திருத்த வாதி - ஸ்ரீநாராயண குரு
  •  பிரிட்டிஷார் ஒன்றுபட்ட நாட்டை உருவாக்க வழி கோலியது - ஏகாதிபத்தியம்
  • படித்த இந்தியர்களின் மொழியாக அமைந்தது. - ஆங்கிலம்
  • சமய (ம) சமூக சீர்திருத்தவாதிகளால் உருவானது - தேசியம்
  • மிதவாதிகளின் கோரிக்கைகளை தீவிரவாதிகள் வர்ணித்தது - அரசியல் பிச்சை
  • காங்கிரசில் பிளவை ஏற்படுத்திய மாநாடு - சூரத்
  • மிண்டோ - மார்லி சீர்திருத்தச் சட்டம் தனித் தொகுதிகளை அறிமுகப்படுத்தியது – சீக்கியர்கள்.
  • பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் - திலகர்
  • சுதந்திர போராட்டத்தில் காந்திஜி உபயோகித்த புதிய யுக்தி முறை - சத்தியாகிரகம்
  • சி.ஆர். தாஸ் (ம) மோதிலால் நேரு தோற்றுவித்த கட்சி - சுயராஜ்ஜியம்
  • இந்திய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - ஜனவரி 26,1950 
  • 1932-ல் ஆங்கிலேய அரசு அறிமுகப்படுத்தியது - வகுப்புவாத அறிக்கை
  • இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர் - லின்லித்தோ
  • நேரு இடைக்கால அரசை அமைக்க உதவி கோரியது - ஜின்னா
  • இந்தியாவின் முதல் (ம) கடைசி இந்திய கவர்னர் ஜெனரல் - இராஜகோபாலச்சாரி
  • இந்திய சமஸ்தானங்களை இனைக்கும் பணியை மேற்கொண்டவர் - சர்தார் வல்லபாய் படேல்
  • இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் - இராஜேந்திர பிரசாத்
  • வேலூரில் இந்திய வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்படத் தூண்டியவர் - திப்பு சுல்தானின் மகன்கள்
  • மக்கள் உரிமையை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்ட மதராஸ் மாகாணத்தின்  முதல் அமைப்பு – சென்னை சுதேசி சங்கம்
  • சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் - பி.இரங்கையா நாயுடு
  • வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியவர் - இராஜகோபாலாச்சாரி
  • 1908 ம் ஆண்டு பாரதியார்  சென்னையில் மாபெரும் பொதுக் கூட்டத்தைக் கூட்டி கொண்டாடியது - சுயராஜ்ஜிய நாள்
  • பிரிட்டிஷாரின் கைது ஆணைக்கு எதிராக பாரதியார் தப்பியோடியது - பாண்டிச்சேரி
  • தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைமையிடத்தின் பெயர் - சத்தியமூர்த்தி பவன்
  • 1940 ம் ஆண்டு காமராஜர் வார்தா சென்று சந்திக்க இருந்தது - காந்திஜி
  • தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக காமராஜர் பதவி வகித்தது - 9 வருடம்
  • காமராஜரின் பிரபலமான கொள்கை - கே திட்டம்
  • தென்னிந்திய நல உரிமைக் கழகம் இவ்வாறு அழைக்கப்படுகிறது - நீதிக் கட்சி
  • நீதிக் கட்சியை பெரியார் மாற்றி அமைத்தது - திராவிடர் கழகம்
  • தமிழ்நாட்டின் தலை சிறந்த சமூக சீர்திருத்தவாதி - ஈ.வே.ராமசாமி
  • வைக்கம் அமைந்துள் இடம் - கேரளா
  • சி.என்.ஆண்ணாதுரை மக்களால் அன்போடு அழைக்கப்படுவது - அண்ணா
  • திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தவர் - சி.என்.அண்ணாதுரை
  • அண்ணாவுக்கு முனைவர் பட்டம் வழங்கியது - அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
  • டாக்டர்.முத்துலட்சுமியின்  சீரிய  முயற்ச்சியால்  புற்றுநோய்  மருத்துவமனை  தொடங்கப்பட்ட  இடம் - அடையார்
  • அகில இந்திய மகளிர் மாநாடு நடைபெற்ற இடம் - பூனா
  • டாக்டர்.முத்துலட்சமியால் தொடங்கப்பட்ட அனாதை இல்லம் - அவ்வை இல்லம்
  • டாக்டர் .எஸ். தருமாம்பாள் தமிழ் ஆசிரியருக்காக நடத்திய போராட்டம் - இழவு வாரம்
  • மூவலூர் இராமமிர்தம் பிறந்த ஆண்டு - 1883


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக