செவ்வாய், 16 ஜூலை, 2019

அரசியலமைப்பு பாகம் 1

அரசியலமைப்பு பாகம் 1

  • பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்- அமர்த்தியாசென் 
  • இந்தியாவில்  இக்காலத்தில்  செயற்படும்  உள்ளாட்சி  அமைப்பை  முதன்முதலில்  நடைமுறைப்படுத்தியவர் - ரிப்பன் பிரபு
  • ஊராட்சி மன்ற தலைவர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் ? - மக்கள் 
  • மாநகராட்சித் தலைவரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள் - 5 ஆண்டுகள்
  • இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் - முத்துலெட்சுமி அம்மையார்
  • சமுதாயத்தின அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடிப்படை முதலீடு - கல்வி
  • சமுதாயத்தை இணைக்கும் தொழில் - வியாபாரம்
  • நில அளவு அடிப்படையில் இந்தியா உலகின்  7 பெரிய நாடாக உள்ளது.
  • இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் - 26 ஜனவரி 1950
  • இந்திய உச்சநீதிமன்றம் அமைந்துள்ள இடம் - புதுடெல்லி
  • தேசியப்பாடல் வந்தே மாதரத்தை இயற்றியவர் ? - பக்கிம் சந்திர சட்டர்ஜி 
  • இந்திய நாட்டின் தலைவர் - குடியரசு தலைவர்
  • இந்தியாவின் தேசிய பறவை - மயில்
  • இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் யார் தலைமையில் நடைபெற்றது - டாக்டர்.சச்சிதாநந்தசின்கா
  • இந்திய அரசியலமைப்பு முகப்புரை, இந்தியா ஒரு நாடு என கூறுகிறது - குடியரசு
  • பாராளுமன்ற முறையில் அரசின் நிர்வாகக்குழுவுக்குப் எந்த அவை பொறுப்பாகும் - மக்களவை
  • இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்
  • இந்திய அரசியலமைப்பு சிற்பி - டாக்டர் அம்பேத்கர்
  • அரசியல் விழிப்புணர்வை அரசியல் கட்சிகள் உருவாக்குகின்றன.
  •  இருகட்சி உள்ள நாடு - அமெரிக்கா
  • எத்தனை மாநிலங்களில், மாநிலக்கட்சி என ஒப்புதல் பெற்ற கட்சிகள் தேசிய கட்சிகள் ஆகும் - நான்கு 
  • அரசியல் கட்சிகள் மக்களாட்சியின் முதுகெலும்பாகச் செயல்படுகின்றன.
  • ஐ.நா சபையின் தலைமையகம் நியூயார்க் நகரில் உள்ளது.
  • பொதுப்பேரவை மனித இனப்பாராளுமன்றம் என்று அழைக்கப்படுகிறது.
  • ஐ.நாவின் அலுவலக மொழிகளில் ஒன்று பிரெஞ்சு
  • ஐ.நா.வின் பாதுகாப்பு பேரவை  நிரந்தர உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
  • நம் நாட்டின் வருங்கால தூண்கள் - குழந்தைகள்
  • இந்திய அரசியலமைப்பின் பிரிவு 39 (7) குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கிறது.
  • இந்திய அரசு, கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைபடுத்திய நாள் - 1 ஏப்ரல் 2010
  • இளம் குற்றவாளிகள் நீதிச்சட்டம் 2000 ல் திருத்தியமைக்கப்பட்டது.
  • 1978 இல் உருவாக்கப்பட்ட குழந்தை திருமணத்தடைச் சட்டம் திருத்தம் பெண்களின் திருமண வயதை 15 லிருந்து 21 ஆக உயர்த்தியுள்ளது.
  • தமிழ்நாடு அரசு எந்த ஆண்டில் ஈவ்டீசிங் தடைசட்டம் இயற்றியது - 1997
  • இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை - 22
  • இந்தியாவின் அலுவல் மொழி - இந்தி
  • இந்திய மாநிலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது - மொழி
  • தேசிய ஒருமைப்பாட்டு தினம் - 19, நவம்பர்
  • இந்தியா பாரதம் எனவும் அழைக்கப்படுகிறது.
  • குகைக்கோயில் எங்கு காணப்படுகின்றன - மகாபலிபுரம்
  • இந்திய பாராளுமன்றம் ஈரவையை கொண்டது.
  • பிரதம மத்திரியை நியமிப்பவர் குடியரசு தலைவர்
  • லோக்சபையில் தெர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை - 543
  • லோக் சபை உறுப்பினர்கள் நேரடி தேர்தல் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
  • மேல் சபை என்பது - இராஜ்யசபா
  • நிதி மசோதா குடியரசு தலைவர் அனுமதியின்றி வெளியிடப்பட முடியாது.
  • மத்திய நிதி அமைச்சர் ஆண்டு அறிக்கையை யார் முன்னிலையில் சமர்பிப்பார் - பாராளுமன்றம்.
  • குடியரசு தலைவர் பதவி பற்றி அரசியல் அமைப்பு சட்டபிரிவு 63 கூறுகிறது.
  • உச்சநீதிமன்ற நீதிபதியை நியமிப்பவர் - குடியரசு தலைவர்
  • உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு பெறும் வயது - 65
  • லோக் அதாலத் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1987
  • மாநில நிர்வாகத்தின் தலைவர் - ஆளுநர்
  • ஆளுநரை நியமிப்பவர் - குடியரசு தலைவர்
  • முதலமைச்சர் (ம) மற்ற அமைச்சர்களையும் நியமிப்பவர் - ஆளுநர்
  • அவசர சட்டங்களை வெளியிடுபவர் (மாநிலங்களில்) - ஆளுநர்
  • குடிமக்களின் அடிப்படை கடமைகள் பற்றி விளக்கும் அரசியலமைப்புத்திருத்தம் - 42
  • அடிப்படை உரிமைகள் 6 தலைப்புகளில் பிரிக்கப்பட்டுள்ளது.
  • சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை அனுமதிக்கும் அரசியலமைப்புக் சட்டப்பிரிவு - 30
  • அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19 குடிமக்களுக்கு 6 உரிமைகளை வழங்குகிறது.
  • பிராமணர் அல்லாதவர்களுக்கு விடுதியை நடத்தியவர் - சி. நடேச முதலியார்
  • டாக்டர். முத்துலட்சுமி அவர்களால் முடிவுக்கு வந்தது - தேவதாசி முறை
  • சுயமரியாதை இயக்கத்தை நடத்தியவர் - பெரியார்
  • பஞ்சமி நிலச் சட்டத்தின்படி நிலங்கள் யாருக்கு வழங்கப்பட்டது - தாழ்த்தப்பட்ட சமுதாயம்
  • மாநில சமூக இட ஒதுக்கீட்டுக் கொள்கையில், அடிப்படை உரிமையில் முதல் சட்டதிருத்தத்தை கொண்டு வந்தவர் - பண்டித ஜவஹர்லால் நேரு 
  • இந்தியா அதிகப்படியான நம்பிக்கையை கொண்டிருப்பது - அமைதி
  • பண்டித ஜவஹர்லால் நேருவின் அமைதிக்கான 5 அம்ச கொள்கைகள் - பஞ்சசீலம்
  • அணு ஆயுத தடைச் சட்டம் கையெழுத்தான ஆண்டு - 1963
  • அணு ஆயுத குறைப்பு தீர்மானத்தை ஐ.நா பொது சபையில் இந்தியா கொண்டு வந்த ஆண்டு - 1956 
  • இன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு - 1990
  • சார்க் அமைப்பின் முதல் பொதுச் செயலாளர் - அபுல் ஆஷான்
  • தற்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அரசாங்க முறை - மக்களாட்சி
  • ஒரு நாட்டில் இரண்டு கட்சி முறை இருக்குமேயானால் அதற்கு பெயர் - இருகட்சி முறை
  • தேர்தலில் வாக்களிக்க தகுதியான வயது - 18
  • மத்தியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட அமைப்பு - பாராளுமன்றம்
  • தேர்தல் ஆணையருக்கு இணையாக அதிகாரம் கொண்டிருப்பவர் - உச்சநீதிமன்ற நீதிபதி
  • மாநில தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்பவர் - தலைமை தேர்தல் அதிகாரி
  • மொழி என்பது - இணைப்புக் கருவி
  • தேம்பாவணியோடு தொடர்புடையது - கிறித்துவ மதம்
  • புத்த பூர்ணிமாவைக் கொண்டாடுபவர்கள் - புத்த மதத்தினர்
  • ஒரு பொருளை முழுவதுமாக பயன்படுத்துவோர் - நுகர்வோர்
  • நுகர்வோரை ஏமாற்றுபவர்கள் - வியாபாரி
  • தகவல் அறியும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது - அக்டோபர் 12, 2005
  • உலக நுகர்வோர் தினம் கொண்டாடப்படுவது - மார்ச் 15
  • நுகர்வோரின் மகா சாசனம் - நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்
  • நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய திட்டங்களுள் ஒன்று - வர்த்தக கண்காட்சி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக