வெள்ளி, 20 மே, 2016

கியூபா விடுதலைப் போராட்டம் (1902–1959)

விடுதலைப் போராட்டம் (1902–1959)

அமெரிக்க அரசின் பொம்மை அரசாங்கமாக கியூபாவில் இருந்த ஆட்சியாளர்கள் செயல்பட்டு வந்தனர். அவ்வபோது ஏற்பட்ட போராட்டங்களை பொம்மை அரசாங்கம் அமெரிக்காவின் துணையோடு நசுக்கி வந்தது. எசுபானிய அமெரிக்க போருக்கு பிறகு பாரிஸ் உடன்படிக்கை (1898) கையெழுத்திடப்பட்டது.அதன்படி $ 20 மில்லியன் பணம் கொடுத்து ஐக்கிய அமெரிக்கா போர்டோ ரிகோ, பிலிப்பைன்ஸ், மற்றும் குவாம் ஆகிய பகுதிகளை விட்டுக்கொடுத்தனர். கியூபா மே 20, 1902 இல் அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெற்று கியூபா குடியரசு என பெயர் மாற்றப்பட்டது. 1924 ல், ஜெரார்டோ மசாடோ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது நிர்வாகத்தின் போது, சுற்றுலா குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளது, மற்றும் அமெரிக்கர்களுக்குச் சொந்தமான விடுதிகள் மற்றும் உணவகங்கள் சுற்றுலா பயணிகள் வருகைக்கேற்பக் கட்டப்பட்டன.


கொரில்லா போராட்டம் (1959–நடப்பில்)

பிடல்காஸ்ட்ரோ மற்றும் சேகுவேராவின்தலைமையிலான ஒரு கொரில்லா இயக்கம் ராணுவ சர்வாதிகாரி படிஸ்ட்டா அரசை வீழ்த்திடும் நோக்கில், மான்கடா படைத் தளத்தின் மீது பிடல் தலைமையிலான புரட்சிகர குழு 1953ம் ஆண்டு ஜூலை 26 அன்று தாக்குதலைத் துவக்கியது . 1959 சனவரியில் புரட்சி வெற்றி பெற்று, பிடல் காஸ்ட்ரோ தலைமயில் தன்னை சோசலிச நாடாக பிரகடனம் செய்து கொண்டது .பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு பொதுவுடைமைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு இன்று வரை தொடர்ந்து பொதுவுடைமைப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக