சனி, 21 மே, 2016

பிளேட்டோ

பிளேட்டோ: (Plato, கிமு 427 - கிமு 347 ) பெரும் செல்வாக்குள்ள கிரேக்கத் தத்துவஞானியாவார்.இவர் சாக்கிரட்டீசின்சீடர், அரிஸ்டாட்டிலின் குரு. பிளாட்டோ தலைசிறந்த கிரேக்க தத்துவஞானி, கணிதவியல் அறிஞராவார். சாக்ரடீஸின் மாணவரான இவர் தத்துவ தர்க்கங்களை எழுதியுள்ளார். இவர் மேற்கு உலகின் முதல் கல்விக் கூடமாக ஏதென்ஸ் நகரில் அகாடமியை நிறுவினார். இவர் தனது ஆதரவாளர் சாக்ரடீஸ் மற்றும் தனது மாணவர் அரிஸ்டாட்டிலின் உடன் இணைந்து மேற்குலகின் தத்துவம் மற்றும் அறிவியலுக்கான அடிக்கல்லை நாட்டினார். இவரைப்பற்றி ஆய்வாளரான ஏ. என். ஒயிட்ஹெட் பின்வருமாறு கூறியுள்ளார்.

பிளாட்டோ ஒரு சிறந்த எழுத்தாளர் என்பது அவர் எழுதியுள்ள சாக்ரடீஸின் கேள்வி பதிலில் இருந்து தெரிகிறது. இதில் முப்பத்தாறு உரையாடல், பதிமூன்று கடிதங்களை இவர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. பிளாட்டோவின் எழுத்துக்கள் பல வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பிளாட்டோ எழுதியவற்றுக்கு பெயரிடுதல் மற்றும் குறிப்பிடுதலை பற்றி விவாதிக்கும் பல்வேறு கூட்டங்கள் நடைபெற வழிவகுத்தது. பிளாட்டோவின் உரையாடல்கள் தத்துவம், தர்க்கம், நெறிமுறைகள், சொல்வளம் மற்றும் கணிதம் உள்ளிட்ட பல துறைகளை கற்பிக்க பயன்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக