செவ்வாய், 18 ஏப்ரல், 2023

மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்கரி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச போக்குவரத்து அமைச்சர்களுடன் ஆலோசனை


 மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச போக்குவரத்து அமைச்சர்களுடன் புதுதில்லியில்  ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை முதன்மை செயலாளர், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டில் சாலைப் போக்குவரத்து முக்கியப்பங்கு வகிப்பதுடன், சுமூகமான சரக்கு மற்றும் பொதுமக்கள் போக்குவரத்தை உறுதி செய்கிறது. போக்குவரத்து தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் மேம்படுத்தப்பட்ட சாலைப் போக்குவரத்துக்கும், பாதுகாப்பான சாலைப் பயணத்திற்கும் முனைப்பானத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருட்களான ஹைட்ரஜன், சுத்திகரிக்கப்பட்ட இயற்கை வாயு உயிரி-எரிபொருள், எத்தனால் கலப்பு எரிபொருள் மற்றும் மின்சார வாகனங்கள் மூலம் பசுமை நெடுஞ்சாலைகளை உருவாக்க மத்திய அரசு பிரத்யேக பணிகளை மேற்கொண்டு வருகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக