"பொய் பிரச்சாரங்கள் - பொய் புகார்கள் மூலம் திமுகவிற்கு எதிராக அருந்ததியின மக்களை திருப்பலாம் என தூய்மை பணியாளர் வாரிய தலைவர் வெங்கடேசனும், பாஜகவும், தினமலரும் கனவு காண வேண்டாம்"
- திமுக துணை பொதுச்செயலாளர் திரு. அந்தியூர் செல்வராஜ் MP அவர்கள் அறிக்கை.
கழகத் தலைவர் அவர்கள் பங்கேற்று வரும் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் அமோக ஆதரவைப் பார்த்து “தினமலருக்கு” எரிச்சல்! ஆகவே, அந்த நிகழ்ச்சியில் என்னைத் தனியாக நிற்க வைத்து விட்டனர் என்று ஏதோ அருந்ததியினர் மக்கள் மீது அக்கறை இருப்பது போல் வேடமிடுகிறது. அய்யோ பாவம்! தினமலர் பத்திரிகை இட்டுக் கட்டிய - ஒரு கற்பனையை வெளியிட்டு – அப்பத்திரிகைக்கு வேண்டியவர்களை மனம் குளிர வைத்துள்ளது!