"தொகுதி மக்களையே பாதுகாக்க தவறிய அமைச்சர் ஜெயகுமாரின் பொய்களையும் - போலி சிரிப்பில் உள்ள விஷத்தன்மையையும் மக்கள் அறிவார்கள்" - திரு. மாதவரம் சுதர்சனம் MLA
தமிழகத்தில் கொரோனா தொற்று ஆரம்பமான நாள் முதல் இன்று வரை, கழகத் தலைவர் அவர்கள் தமிழக அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளை மக்களின் நலன் கருதி தொடர்ந்து அறிக்கைகள் மூலம் வலியுறுத்தி வருகிறார்.
அதுமட்டுமின்றி எங்களையும் ஊரடங்கு தொடங்கிய காலம் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் தீவிரமாக ஈடுபட அறிவுறுத்தி வருகிறார்.
