ஏ.கே.எஸ்.விஜயன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏ.கே.எஸ்.விஜயன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 ஜூலை, 2020

"கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி - பேச்சுவார்த்தை மூலம் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்" - திரு. ஏ.கே.எஸ்.விஜயன்


"கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி - பேச்சுவார்த்தை மூலம் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்" - திரு. ஏ.கே.எஸ்.விஜயன் 

தமிழக விவசாயிகளின் மிகப்பெரிய ஆதாரமாக இருப்பது தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களாகும். அதன் முக்கியத்துவங்களை அறிந்திருந்ததால்தான் மண்ணின் மைந்தர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், ‘உள்ளாட்சியில் நல்லாட்சி தந்த’ கழகத் தலைவர் தளபதி அவர்களும் கழக ஆட்சியின்போது தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களின் அதிகார வரம்புகள் அனைத்தையும் விவசாயத்திற்கு ஆதரவாகவும் விவசாயிகளுக்குப் பயன்தரும் வகையிலும் அமைத்துத் தந்திருந்தார்கள்.

செவ்வாய், 14 ஜூலை, 2020

கூட்டுறவுச் சங்கங்களை அதிமுக அரசு அழிவின் பாதைக்குக் கொண்டு செல்கிறது" - திரு. ஏ.கே.எஸ்.விஜயன்


"முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் விவசாயக்கடன் தள்ளுபடி செய்த காரணத்தால் நிமிர்ந்த கூட்டுறவுச் சங்கங்களை அதிமுக அரசு அழிவின் பாதைக்குக் கொண்டு செல்கிறது" - திரு. ஏ.கே.எஸ்.விஜயன் 

தமிழகத்தில் விவசாயிகளுக்கும், ஏழை - எளிய பாமர மக்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கும் பாதுகாப்பாக விளங்கிக்கொண்டிருந்த தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், மண்ணின் மைந்தர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையிலான கழக ஆட்சியின்போது, இயற்கைப் பேரிடரால் விவசாயிகள் தாங்கள் பெற்ற கூட்டுறவுக் கடனைச் செலுத்தமுடியாமல் தவித்தபோது , தாயுள்ளம் கொண்டு அவர்களின் நிலைமையைச் சிந்தித்த கலைஞர் அவர்கள் விவசாயிகளின் 7000 கோடி ரூபாய் விவசாயக்கடனை ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்ததோடு, அந்தக் கடன்தொகை முழுவதையும் அரசே திருப்பிச்செலுத்தும்  என அறிவித்தார். அப்படித் தொலைநோக்குத் திட்டத்தோடு செய்யப்பட்ட அந்த விவசாயக் கடன் தள்ளுபடியால்தான், தொடக்க வேளாண் சங்கங்கள் அழிவின் பாதையில் இருந்து மீண்டு கழக ஆட்சியில் புத்துணர்வு பெற்று விளங்கின.