கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சட்டமன்ற உறுப்பினர்கள் கு.சின்னப்பா, மு.பூமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்வைத்த கருத்துகள்:
இந்த அரசு நெருக்கடியான காலகட்டத்தில் பொறுப்பு ஏற்று இருக்கின்றது. உலகம் முழுமையும் இதுவரை 35 இலட்சம் பேரைப் பலிகொண்ட, கொரோனா பெருந்தொற்றுத் தாக்குதலில் இருந்து, மக்களைக் காப்பதே முழுமுதற் கடமை என, முதல்வர் அவர்கள் அறிவித்தார். அதற்கு ஏற்ப, தீவிரமான களப்பணிகளை முடுக்கி விட்டு இருக்கின்றார். அமைச்சர்கள் சுற்றிச்சுழன்று பணியாற்றி வருகின்றார்கள்.
