கொரணா வைரஸ் பீதி காரணமாக உலகமே ஆடிப் போயிருக்கிறது. நமது நாட்டில் மக்கள் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள்.
அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.போக்குவரத்து முடக்கப்பட்டு, மாநில எல்லைகள் மூடப்பட்டு வருகின்றன.
அரசு எடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் பாராபட்சமின்றி ஏற்று, அதனை நடைமுறைப்படுத்தியும் வருகிறார்கள்.
இந்நிலையில் மத்திய அரசு நாடு முழுக்க முன் எச்சரிக்கையாக, 77 மாவட்டங்களை கண்டறிந்து , அங்கு எல்லைகளை மூடி, ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பிக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தி யுள்ளது.
அதில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய தமிழக மாவட்டங்களும் வருகிறது. இந்திலையில் தமிழக சட்டமன்றம் மட்டும் தொடர்ந்து நடைபெறும் என்பது நியாயமற்றதாகும்.

