தெய்வத் தமிழ்ப் பேரவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெய்வத் தமிழ்ப் பேரவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 ஜூன், 2021

தமிழ் வழிபாடு மற்றும் பூசைக்கு புதிய சட்டம் இயற்றுக! சக்கியின் ஈசா மையத்தை அரசுடைமையாக்குக! - தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டம் தீர்மானம்

 தமிழ் வழிபாடு மற்றும் பூசைக்கு  புதிய சட்டம் இயற்றுக!

சக்கியின் ஈசா மையத்தை அரசுடைமையாக்குக!

சூலை 3 அன்று பதாகை ஏந்திப் போராட்டம்!

தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டம் காணொலி வழியாக தி.பி. 2052 ஆனி 3 – 17.06.2021 வியாழன் மாலை 5.30 மணிக்குத் தொடங்கி நடந்தது. 

தெய்வத் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன், செயற்குழு உறுப்பினர்கள் திருவாளர்கள் சித்தர் மூங்கிலடியார் பொன்னுசாமி (குருவழி வாரிசு, பதிணென் சித்தர் மடம், பீடம்) அவர்கள், குச்சனூர் கிழார் (வடகுரு இராசயோக ஆதின மடாதிபதி) அவர்கள், குடந்தை இறைநெறி இமயவன் (தெய்வத்தமிழ்க் கூடல்) அவர்கள், திருவில்லிப்புத்தூர் மோகனசுந்தரம் அடிகளார் (தெய்வத்தமிழ் வழிபாட்டு மன்றம்) அவர்கள், சென்னை சிவவடிவேலன் (செந்தமிழ் ஆகம அந்தணர்) அவர்கள், கரூர் வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன் (தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு) அவர்கள், திருவானைக்கோயில் பொறியாளர் ச. முத்துக்குமாரசாமி அவர்கள், புதுச்சேரி வழக்கறிஞர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், விராலிமலை வே.பூ. இராமராசு அவர்கள் ஆகியோர் காணொலிக் கலந்துரை யாடலில் கலந்து கொண்டு கருத்துகள் வழங்கினர்.