நிதி ஆயோக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிதி ஆயோக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 ஜூன், 2021

‘சுரக்‌ஷித் ஹம் சுரக்‌ஷித் தும்’ (எங்களுக்கும் பாதுகாப்பு, உங்களுக்கும் பாதுகாப்பு’ என்ற திட்டத்தை 112 இலக்கு மாவட்டங்களில் நிதி ஆயோக் மற்றும் பிரமல் அறக்கட்டளை தொடங்கியது.


 அறிகுறியற்ற மற்றும் மிதமான கொவிட் பாதிப்புள்ள நோயாளிகளுக்கு, வீட்டுக்குச் சென்று பராமரிப்பு உதவிகளை அளிப்பதில் மாவட்ட நிர்வாகத்துக்கு உதவ ‘சுரக்‌ஷித் ஹம் சுரக்‌ஷித் தும்’ (எங்களுக்கும் பாதுகாப்பு, உங்களுக்கும் பாதுகாப்பு’ என்ற திட்டத்தை 112 இலக்கு மாவட்டங்களில் நிதி ஆயோக் மற்றும் பிரமல் அறக்கட்டளை இன்று தொடங்கியது.

மாவட்ட நிர்வாகத்துடன் கூட்டாக மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தில் உள்ளூர் தலைவர்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் தொண்டர்கள், ஆகியோர் இணைந்து இலக்கு மாவட்டங்களில் எழும் கொவிட் தொடர்பான பிரச்னைகளில் கவனம் செலுத்துவர்.