பி.வில்சன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பி.வில்சன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 ஜூன், 2020

தமிழகத்தைச் சேர்ந்த அனைவரையும் தாயகம் அழைத்து வருவதற்கு ஏதுவாக, “தமிழகத்திற்கு விமான சேவை வேண்டாம்” என்று அ.தி.மு.க. அரசு விதித்துள்ள தடையை ரத்து செய்திட வேண்டும்.- பி.வில்சன் நீதிமன்றத்தில் கோரிக்கைகள்



”தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி மறுத்ததால் பல்வேறு நாடுகளில் இலட்சக்கணக்கான மக்கள் தவிப்பு”

- திமுக சார்பில் திரு.டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., அவர்கள் தாக்கல் செய்த நீதிப் பேராணை மீதான விவாதத்தில் திரு. பி.வில்சன் எம்.பி., அவர்கள் விவாதம்.

மலேசியா, சிங்கப்பூர், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா ஊரடங்கால் தமிழகம் திரும்ப முடியாமல் இலட்சக்கணக்கான இந்திய குடிமக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து விமானங்களை கையாள கடந்த 26.5.2020 அன்று இந்திய அரசால் நிலையான இயக்க முறைமை (Standard Operating Procedure) வெளியிடப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வந்த மீட்பு விமானங்கள் மற்ற மாநிலங்களில் தரையிறங்கிய நிலையில், தமிழகத்தில் தரையிறங்க தமிழக அரசால் அனுமதி மறுக்கப்பட்டது.

எனவே, தமிழகத்தைச் சேர்ந்த அனைவரையும் தாயகம் அழைத்து வருவதற்கு ஏதுவாக, “தமிழகத்திற்கு விமான சேவை வேண்டாம்” என்று அ.தி.மு.க. அரசு விதித்துள்ள தடையை ரத்து செய்திட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்த போது தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரு. பி.வில்சன் எம்.பி., அவர்கள் கீழ்க்கண்ட வாதங்களை எடுத்து வைத்து வாதாடினார்: