யோகா தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யோகா தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 ஜூன், 2021

நோயாளிகளின் நாள்பட்ட இடுப்பு வலியை போக்குவதில் யோகா சிறந்த வலி நிவாரணியாகவும், வலியின் சகிப்புத்தன்மை, மற்றும் உடல் நெகிழ்வுதன்மையை அதிகரிக்கக்கூடியதாகவும் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.


 யோகா அடிப்படையிலான ஆய்வுகள் பெரும்பாலும், நோயாளியின் அனுபவம்,  வலி மற்றும் இயலாமை மதிப்பீடு, குணமடைதல் ஆகியவற்றை சார்ந்தே இதுவரை உள்ளன. வலி, வலி சகிப்புத்தன்மை மற்றும் உடலின் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை அளவிடும் ஆராய்ச்சியாளர்கள், நோயாளிகளின் நாள்பட்ட இடுப்பு வலியை போக்குவதில் யோகா சிறந்த வலி நிவாரணியாகவும், வலியின் சகிப்புத்தன்மை, மற்றும் உடல் நெகிழ்வுதன்மையை  அதிகரிக்கக்கூடியதாகவும் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். 

நாள்பட்ட இடுப்பு வலியில்,  யோகாவின் தாக்கத்தை மதிப்பிட புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் உடலியல் துறை கூடுதல் பேராசிரியர்கள் டாக்டர் ரேணு பாட்டியா, டாக்டர் ராஜ் குமார் யாதவ், மருந்து மற்றும் மறுவாழ்வுத்துறை உதவி பேராசிரியர் டாக்டர் ஸ்ரீ குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 

ஞாயிறு, 23 மே, 2021

சர்வதேச யோகா தினம் 2021-ஐ முன்னிட்டு, பல நிகழ்ச்சிகளை ஆயுஷ் அமைச்சகம் நடத்துகிறது. அவற்றில் ஒன்று ‘வீட்டிலிருந்தபடி யோகா செய்யுங்கள்’


 சர்வதேச யோகா தினம் 2021-ஐ முன்னிட்டு, பல நிகழ்ச்சிகளை ஆயுஷ் அமைச்சகம் நடத்துகிறது. அவற்றில் ஒன்று ‘வீட்டிலிருந்தபடி யோகா செய்யுங்கள்’ என்ற தலைப்பில் நடத்தப்படும் ஐந்து இணைய கருத்தரங்குகள் தொடர்.

இந்த கருத்தரங்குகள், நாட்டின் 5 பிரபல நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு தலைப்பில் கருத்தரங்கை நடத்துகிறது. இவை தற்போதைய சூழலின் முக்கியத்துவத்தை குறிப்பதாக இருக்கும்.