கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிப்பு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இன்று அமல்படுத்தப்பட உள்ள 144 தடை உத்தரவு விவரங்களை தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.
இதனால் 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட தடை விதித்துள்ளது. இன்று நடைபெறவுள்ள 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் வரும் 26ஆம் தேதி நடைபெற இருந்த 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், அனைத்து கல்லூரி, வேலைவாய்ப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக கூறியுள்ளது.
