யூரியா தட்டுப்பாட்டால் விவசாயம் பாதிப்பு:
தாராளமாக கிடைக்க நடவடிக்கை தேவை!
- Dr. S. ராமதாஸ் அறிக்கை
(நிறுவனர், பாமக.)
காவிரி பாசன மாவட்டங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் யூரியா உரத்திற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சம்பா நெல் உள்ளிட்ட பயிர்களின் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், யூரியா தட்டுப்பாட்டைப் போக்க போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது.




