எதிர்கால நோய்த்தொற்றின் பரவலைக் கண்காணிக்க உதவும் வகையில் கொவிட் -19 இந்திய தேசிய உயர்நிலை மாதிரியை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை (DST) துவக்கியுள்ளது, சுகாதார அமைப்புகளின் தயார்நிலை மற்றும் பிற நோய் தணிப்பு நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட முடிவுகளுக்கு இது உதவுகிறது.
தொற்று மற்றும் இறப்பு குறித்து அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணிக்கும் அதே வேளையில், பரவலைக் கணிப்பதற்கும், நோய்க் கண்காணிப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு வலுவான முன்கணிப்பு மாதிரியைக் கொண்டு வருவது கட்டாயமாகும். கொவிட் -19 முன்கணிப்பு மற்றும் கண்காணிப்புக்கான பல கணித மாதிரிகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை (DST) - அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் (SERB) மற்றும் பிற நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்ட புலனாய்வாளர்களால் உருவாக்கப்படுகின்றன.


