உத்தேச மின்சார (திருத்தச்) சட்ட மசோதா 2020 மூலம், மின்துறையில் பெரும் மாற்றத்திற்கு இந்தியா தயாராகி வருகிறது
காணொளிக்காட்சி மூலம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய மின்துறை மற்றும் புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.ஆர்.கே.சிங், மின்துறையில் மேற்கொள்ளப்பட உள்ள சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், இது தொடர்பான சந்தேகங்கள் மற்றும் வதந்திகளுக்கும் விளக்கமளித்தார். ஆட்சியாளர்கள் மக்களுக்குப் பணியாற்றுவதற்காக உள்ளவர்கள் என்பதால், நுகர்வோர் நலன் சார்ந்தே இந்தச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.




