செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

பிற்படுத்தப்பட்டோர் நலன் தொடர்பாக அமைக்கப்படும் குழுக்களில் முழுக்க முழுக்க சமூகநீதியில் அக்கறை கொண்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மட்டுமே இடம்பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.- DR.S.ராமதாஸ்

 கிரீமிலேயர் வரம்பு: வேளாண் வருமானம்

சம்பளத்தை கணக்கில் சேர்க்கக் கூடாது! - DR.S.ராமதாஸ்

தேசிய அளவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு  இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வரம்பை ரூ.12 லட்சமாக உயர்த்தி விட்டு, அதில் வேளாண்மை வருமானம், சம்பளம் ஆகியவற்றையும் சேர்க்கும் பழைய திட்டத்தையே செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டு உரிமையை பறிக்கும் வகையிலான மத்திய அரசின் இந்த திட்டம் மிகவும் ஏமாற்றமளிக்கிறது; இது மாற்றப்பட வேண்டும். 

சமஸ்கிருத மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக்கூட, தமிழ்மொழிக்கு கொடுக்காமல் இருப்பது ஒன்றிய அரசு தமிழ் மொழியை வஞ்சிக்கும் செயலாகும்.- வைகோ

 கல்வெட்டு ஆய்வாளர்களை நியமித்து

தொல்லியல் துறையைப் பாதுகாத்திடுக! - வைகோ அறிக்கை

உலக அளவில் உள்ள கல்வெட்டுகளில் 75 விழுக்காட்டுக்கு மேலான கல்வெட்டுகள் தென்னிந்தியாவில் மட்டுமே உள்ளன.

இந்தியாவில், தமிழ்நாட்டில் மட்டுமே அதிகப்படியான கல்வெட்டுகள் உள்ளன.

தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடத்தக் கோரியும், பழங்கால அடையாளங்களை பாதுகாக்கக் கோரியும் பலர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இதற்கு பதிலளித்த தொல்லியல்துறை, ஏற்கனவே 92 பாதுகாக்கப்பட்ட புரதான இடங்கள் உள்ளன. மேலும் 54 பாதுகாக்கப்பட்ட புரதான இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

இந்தியத் துணைக் கண்ட அளவில் பார்த்தாலும் சாதனை சரித்திர உச்சியில் முதல் இடத்தில் இருந்து பட்டொளி வீசி பறப்பது தமிழ்நாடு சட்டப்பேரவையே! - கி.வீரமணி

 தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா!

வரலாற்றுக் காவியத்தின் மணம் வீசும் பொன்னாள் இந்நாள்!

அதிக காலம் ஆட்சி புரிந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உருவப் படத்தை முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் திறப்பது பெருமைக்குரியது! - கி.வீரமணி

தமிழ்நாட்டின் வரலாற்றில் இந்நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நாளாயிற்றே!

மாண்டேகு செம்ஸ் போர்டு பரிந்துரையின்படி இந்தியாவில் கொண்டுவரப்பட்டதுதான் சட்டமன்றங்கள்.

அந்த வகையில் முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட நீதிக்கட்சி 98 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல் அமைச்சரவையை அமைத்தது. 1921 ஜனவரி 12 அன்று கன்னாட் கோமகன் சட்டமன்றக் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

மாணவர்களிடையே பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான டிஜிட்டல் பழக்கவழக்கங்களை உறுதி செய்வதற்காக ‘சைபர் பாதுகாப்பு கையேட்டை’ சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.


 நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

மாணவர்களிடையே பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான டிஜிட்டல் பழக்கவழக்கங்களை உறுதி செய்வதற்காக ‘சைபர் பாதுகாப்பு கையேட்டை’ சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

சைபர் பாதுகாப்பு, ஆன்லைன் சிக்கல்கள், மிரட்டல்கள், அவதூறு, மனரீதியான கொடுமை, ஆன்லைன் பாலியல் கொடுமை, மோசடிகள் உள்ளிட்ட தலைப்புகளை கொண்ட கையேடு http://cbseacademic.nic.in/web_material/Manuals/Cyber_Safety_Manual.pdf எனும் தளத்தில் கிடைக்கும்.

பாதுகாப்பு சேவைகளை நவீனமயமாக்குவதற்காக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக 23.78% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.- மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் திரு அஜய் பட்

 மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் திரு அஜய் பட், கீழ்க்காணும் தகவல்களை மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்பட்டுள்ள உபகரணங்கள்:

கடந்த சில ஆண்டுகளில் மேக் இன் இந்தியா முன்முயற்சியின் கீழ் ‘தனுஷ்’ பீரங்கி, பாலம் அமைக்கும் டாங்கி, ‘தேஜாஸ்’ இலகுரக விமானம், ‘ஆகாஷ்’ ஏவுகணை, ‘ஐஎன்எஸ் கல்வாரி' நீர்மூழ்கிக் கப்பல், கண்காணிப்புக் கப்பல்கள், ஐஎன்எஸ் சென்னை, ஐஎன்எஸ் கந்தேரி உள்ளிட்ட ஏராளமான குறிப்பிடத்தக்க திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உரிமம் மூலம் நாடு முழுவதும் தனியார் துறையினர் பாதுகாப்பு துறையில் பங்கு பெறுவதற்கு தற்போது வாய்ப்பு வழங்கப்படுகிறது. தற்போது பிகார் மாநிலத்தின் நாளந்தாவில் ஆயுத தொழிற்சாலை இயங்குகிறது